Balaji Murugadoss: ‘என்னால முடியலடா சாமி; நான் சினிமாவ விட்டே போறேன்.. ஒரு பைசா கூட”- பிக்பாஸ் பாலாஜி
Jul 25, 2024, 04:22 PM IST
Balaji Murugadoss: என்னால் முடியவில்லை. நான் சினிமாவை விட்டே விலகுகிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார். - பிக்பாஸ் பாலாஜி
Balaji Murugadoss: மாடலிங் துறையில் பிரபலமாகி, பிக்பாஸ் சீசன் -4 -ல் போட்டியாளராக களமிறங்கியவர் நடிகர் பாலாஜி முருகதாஸ். அந்த சீசனில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட அவர், அடுத்ததாக ஓடிடியில் ஒளிப்பரப்பப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார். தேர்ந்த போட்டியாளராக கடைசி வரை வந்த அவர், அதன் டைட்டில் வின்னராகவும் மாறினார்.
திரைப்படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் பாலாஜிக்கு கிடைத்தது. அந்த வகையில், அவர் கமிட் ஆன திரைப்படம்தான் ஃபயர். இந்தப்படத்தை, ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சதீஷ்குமார், தன்னுடைய ஜே.எஸ்.கே திரைப்பட நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். இதில் பாலாஜி உடன் இணைந்து, ரக்ஷிதா மகாலட்சுமி, சிங்கம் புலி, சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்கரவர்த்தி, காயத்ரி ஷா, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
டி.கே இசையமைத்து இருக்கும் இந்தப்படத்திற்கு சதிஷ் ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப்படம் தொடர்பாக வெளியான கிளிம்ப்ஸ் காட்சி ஒன்றில், ரக்ஷிதா படு கிளாமராக நடித்திருந்தார். அதே போல வெளியான இன்னொரு கிளிம்ப்ஸ் காட்சியில், பாலாஜி பிளேய்பாய் போல வருவதும், வொர்க் அவுட் செய்வதும் தொடர்பான காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில், பாலாஜி முருகதாஸ் தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்தப்பதிவில் ஜே.எஸ். கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள ஃபயர் படத்தில் நடித்ததற்கு இதுவரை ஒரு பைசா கூட சம்பளமாக தரவில்லை. என்னால் முடியவில்லை. நான் சினிமாவை விட்டே விலகுகிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள், மன உறுதியுடன் இருங்கள் என்று ஆறுதல் கூறி வருகிறார்கள்.
நான் பெண்களை மையப்படுத்தி நகர்கிறது. நாம் பெண் குழந்தைகளை வளர்க்கிறோம். ஆனால் பாதுகாப்பாக வளர்க்கிறோமா என்பது கேள்விக்குறிதான்.
முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்தப்படத்தின் தயாரிப்பாளர், ஃபயர் திரைப்படம், நான் பெண்களை மையப்படுத்தி நகர்கிறது. நாம் பெண் குழந்தைகளை வளர்க்கிறோம். ஆனால் பாதுகாப்பாக வளர்க்கிறோமா என்பது கேள்விக்குறிதான். தமிழ் நாட்டில் நடந்துள்ள ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.இது ஒரு விழிப்புணர்வு திரைப்படமாகவும் வந்திருக்கிறது என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்