நல்ல விஷயங்களை மட்டும் சொல்லி வாழ்த்துங்க.. மணிமேகலை வெளியிட்ட போட்டோ! என்ன நடந்தது?
Oct 12, 2024, 11:56 AM IST
மக்கள் அனைவருக்கும் வாழ்க்கையில் சிறந்தவை மற்றும் நல்லவை மட்டும் நடக்க வாழ்த்துவதாக தொகுப்பாளர் மணிமேகலை கூறியுள்ளார்.
விஜய் டிவியின் பிரபல தொடரான குக் வித் கோமாளியில் பிரியங்கா தன் வேலையை செய்ய விடாமல் தொந்தரவு செய்கிறார். எனக்கு சுயமரியாதை மிகவும் முக்கியம் எனக் கூறி புயலைக் கிளப்பிய மணிமேகலை, காதல் கணவர் ஹுசைனுடன் சேர்ந்து தனக்கு எதிராக பேசியவர்களை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்து பரபரப்பை கிளப்பினார்.
வாழ்த்து தெரிவித்த மணிமேகலை
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துகளைக் கூறி அவர் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
மணிமேகலை அந்தப் பதிவில், மக்கள் அனைவருக்கும் வாழ்க்கையில் சிறந்தவை மற்றும் நல்லவை மட்டும் நடக்க வாழ்த்துவதாக குறிப்பட்டிருந்தார்.
ஒரே முன்னேற்றம் தான்
விஜே மனிமேகலை அவரது சொந்த ஊரில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். அவர் அங்கு எடுத்த புகைப்படங்களையும், வீடுகட்ட உதவும் அரவை இயந்திரம், கார், மற்றும் பைக்குகளுக்கு பூஜை போட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்,
இவற்றைப் பார்க்கும் போது, இவர் வாழ்வில் இனி முன்னேற்றம் மட்டும் தான் இருக்கும் போல என ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
குக் வித் கோமாளி பிரச்சனை
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் மணிமேகலை- பிரியங்கா இடையே ஏற்பட்ட சண்டை சோசியல் மீடியா வழியே வெடித்து பூதாகரமானது. இதையடுத்து,
பிரியங்கா- மணிமேகலை பிரச்சனை குறித்து குக் வித் கோமாளி செட்டில் இருந்த குரேஷி, சுனிதா, புகழ், தர்ஷன் என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அதே வகையில், விஜய் டிவி பிரபலங்களான அமீர், அர்ச்சனா, தாமு, மாகாபா ஆனந்த் உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், திரைப் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தர். இதில் பலர் மணிமேகலைக்கு ஆதரவாகவும் பலர் பிரியங்காவிற்கு ஆதரவாகவும் பேசினர்.
நன்றி தெரிவித்த மணிமேகலை
இந்நிலையில், தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறியும், தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி தரும் வகையிலும் மணிமேகலை அவரது காதல் கணவர் ஹுசைனுடன் இணைந்து அவரது ஹூசைன் மணிமேகலை யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், இதற்கு முன் நடந்த சில விஷயங்களில் எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. நடந்த விஷயங்களுக்கு மட்டுமே கருத்து சொல்ல வேண்டும். பிறரின் தனிப்பட்ட கேரக்டர்களை விமர்சனம் செய்வது வேண்டாம். எனது திருமண காலகட்டத்திலிருந்தே எனக்காக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எங்களைப் பற்றிய அனைத்து விஷயங்களும் உங்களுக்கு தெரியும். எனக்கு யாரென்று தெரியாத பலரும் எனக்கு ஆதரவு அளித்தது மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. எனது கடினமான சூழல்களிலும் நான் அழுததில்லை. ஆனால், உங்களுடைய சப்போர்ட் என்னை கண்கலங்க வைக்கிறது என்றார்.
பிரச்சனையை பெரிதாக்கிய விமர்சனம்
அத்துடன் வீடியோவில் சொம்புக்கெல்லாம் என்ன மரியாதை, நாம கரெக்டா நடந்துகிட்டா எப்போவும் நம்ம கூட யாரும் நிக்க மாட்டாங்க ஒரு காலகட்டத்திற்கு மேல் காலாவதியாக நான் என்ன மில்க் மேடா, நான் செல்ப் மேட் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்