Manimegalai vs Priyanka: மணிமேகலை- பிரியங்கா சண்டை பெரிதாக காரணம் இவர்கள் தான்- புகழ் பளீச்
Manimegalai vs Priyanka: குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும் ஏற்பட்ட சண்டையை பெரிதாக்கியது மீடியா தான். நீங்கள் கேள்வி கேட்பபதை நிறுத்தினால் இது பிரச்சனையே இல்லை என குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் பங்கேற்பாளர் புகழ் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த 4 சீசன் வரை செஃப் வெங்கடேஷ்பட்- தாமு கூட்டணியில் மக்களுக்கு சிரிப்பை வாரி வழங்கி வந்தநிலையில், அந்தக் கூட்டணி முறிந்து வெங்கடேஷ் பட் சன் டிவிக்கு சென்றுவிட்டார். இதையடுத்து நிகழ்ச்சிக்கு புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் வந்தார். இவர் நிகழ்ச்சியிலும் பங்கேற்பாளர்களுடனும் சகஜமாக பழகவே நேரம் எடுத்த காரணத்தால் இந்த சீசன் ஆரம்பம் முதலே சற்று தொய்வாக காணப்பட்டது.
இதற்கிடையில், தொகுப்பாளர் மணிமேகலைக்கும் பங்கேற்பாளர் பிரியங்காவிற்கும் இடையே மோதல் வெடித்து சோசியல் மீடியா வரை சென்றது. இதனால், பலரும் இவ்விவகாரம் தொடர்பாக கருத்துகளை பகிர்ந்தும் பதிவிட்டும் வருகின்றனர்.
பிரியங்கா- மணிமேகலை சண்டை தனிப்பட்டது
இந்நிலையில், செய்தியாளர்கள் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் சீனியர் கோமாளியான புகழிடம் இவ்விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த புகழ், பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும் இடையே உள்ள பிரச்சனை அவர்களுக்கான தனிப்பட்ட ஒன்று. அதை சோசியல் மீடியாவிற்கு கொண்டு வரக்கூடாது என்றார்.
மீடியா கேள்வி கேட்பதை நிறுத்தினால் இது பிரச்சனையே இல்லை
இந்த பிரச்சனை ஏற்கனவே சோசியல் மீடியவிற்கு வந்துவிட்டது எனசெய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த புகழ், அவர்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை என்று தெரியாமல் மீடியாவில் கேள்வி கேட்கின்றனர். 1000 பேர் மைக்கை தூக்கிக் கொண்டு வந்து வீடியோ போடுகிறார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், இதுகுறித்து சோசியல் மீடியாவில் தான் அதிகம் கருத்துகளை பார்க்கிறேன். உண்மை என்ன என்பதை அறியாமல் மீடியாவில் இருப்பவர்கள் கேள்வி கேட்பதை நிறுத்தினாலே இது பெரிய பிரச்சனை இல்லை.
அதிகாரப்பூர்வ தகவல் வரட்டும்
மீடியாவில் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு பதில் அளித்தால், அது குறித்து கருத்து தெரிவித்து 1000 வீடியோக்கள் வருகிறது. இப்படி நடந்திருக்குமோ, அப்படி நடந்திருக்குமோ என்ற கற்பனையிலேயே பல வீடியோக்கள் வெளியாகிறது. எனவே, இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட இருவரும் அதிகாரப்பூர்வ தகவல் தரும்வரை காத்திருக்க வேண்டும் என்றார்.
முன்னதாக, கோலிசோடா ரைஸிங் படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்க சற்று தயங்கியதாகவும், பின் தன்னால் இதனை சரியாக செய்ய முடியும் என்று தோன்றிய பிறகே படத்தில் நடித்ததாகவும் கூறினார். ஹீரோ, வில்லன் என்பது வெறும் கேரக்டர்கள் தான். அனைத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்றும் கூறினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, உள்ளிட்ட சமீபத்திய செய்திகள் அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை பின்தொடரலாம்.
டாபிக்ஸ்