Cook With Comali: சொம்புக்கெல்லாம் என்ன மரியாதை... தூக்கி எறிந்த மணிமேகலை.. அந்தர் பல்டி... மணி இஸ் ஆல்வேஸ் அல்டிமேட்-manimegalai replies for her all criticism about cook with comali issue - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cook With Comali: சொம்புக்கெல்லாம் என்ன மரியாதை... தூக்கி எறிந்த மணிமேகலை.. அந்தர் பல்டி... மணி இஸ் ஆல்வேஸ் அல்டிமேட்

Cook With Comali: சொம்புக்கெல்லாம் என்ன மரியாதை... தூக்கி எறிந்த மணிமேகலை.. அந்தர் பல்டி... மணி இஸ் ஆல்வேஸ் அல்டிமேட்

Malavica Natarajan HT Tamil
Sep 23, 2024 01:36 PM IST

Cook With Comali: பிரியங்காவுடன் சண்டையிட்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய மணிமேகலை தனக்காக ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோவில் என்னுடன் இருப்பவர்கள் தான் எல்லாம் செய்கிறார்கள், சொம்புக்கு எல்லாம் மரியாதை என பலரையும் விமர்சித்துள்ளார்.

Cook With Comali: சொம்புக்கெல்லாம் என்ன மரியாதை... தூக்கி எறிந்த மணிமேகலை.. அந்தர் பல்டி... மணி இஸ் ஆல்வேஸ் அல்டிமேட்
Cook With Comali: சொம்புக்கெல்லாம் என்ன மரியாதை... தூக்கி எறிந்த மணிமேகலை.. அந்தர் பல்டி... மணி இஸ் ஆல்வேஸ் அல்டிமேட்

பிரியங்கா- மணிமேகலை பிரச்சனை குறித்து குக் வித் கோமாளி செட்டில் இருந்த குரேஷி, சுனிதா, புகழ், தர்ஷன் என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அதே வகையில், விஜய் டிவி பிரபலங்களான அமீர், அர்ச்சனா, தாமு, மாகாபா ஆனந்த் உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், திரைப் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தர். இதில் பலர் மணிமேகலைக்கு ஆதரவாகவும் பலர் பிரியங்காவிற்கு ஆதரவாகவும் பேசினர்.

இந்நிலையில், தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறியும், தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி தரும் வகையிலும் மணிமேகலை அவரது காதல் கணவர் ஹுசைனுடன் இணைந்து அவரது ஹூசைன் மணிமேகலை யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், இதற்கு முன் நடந்த சில விஷயங்களில் எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. நடந்த விஷயங்களுக்கு மட்டுமே கருத்து சொல்ல வேண்டும். பிறரின் தனிப்பட்ட கேரக்டர்களை விமர்சனம் செய்வது வேண்டாம். எனது திருமண காலகட்டத்திலிருந்தே எனக்காக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எங்களைப் பற்றிய அனைத்து விஷயங்களும் உங்களுக்கு தெரியும். எனக்கு யாரென்று தெரியாத பலரும் எனக்கு ஆதரவு அளித்தது மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. எனது கடினமான சூழல்களிலும் நான் அழுததில்லை. ஆனால், உங்களுடைய சப்போர்ட் என்னை கண்கலங்க வைக்கிறது என்றார்.

கூட இருப்பவர்கள் தான் எல்லாம் செய்யுறாங்க

பின், கணவர் ஹுசைன் வீடியோவிற்குள் என்ட்ரி ஆனார். அதில் வீடியோ எடுக்கவில்லையா என மணிமேகலை கேட்க, என்னை நீ சந்தேகப்படுறியா? நான் பல வருஷமா உன்கூட இருக்கேன் என கூறினார். அதற்கு பதிலளித்த மணிமேகலை, கூட இருக்கவங்க தான் எல்லா வேலையும் செய்யுறாங்க. என்னை இதுவரைக்கும் மீட் பண்ணாதவங்க கூட என்னை கரெக்டா புரிஞ்சிருக்காங்க. யாரையும் நம்பக்கூடாதுன்னு நான் புரிஞ்சிகிட்டேன். வாட்ஸ்அப்-ல ஒரு மாதிரி பேச்சு, வெளியே அப்படியே அந்தர் பல்டி அடிக்குற மாதிரி பேச்சு. மணி(பணம்) ஈஸ் ஆல்வேல் அல்டிமேட். அத நான் இப்ப புரிஞ்சுகிறேன் என நக்கலாக கூறியுள்ளார்.

வித்தியாசமாக கூவும் மம்மி

மணிமேகைல விவகாரத்தில் நடிகை ஷகிலா கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கும் பதிலடி கொடுத்துள்ளார் மணிமேகலை. நான் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டதில் என்னுடைய உண்மையான மம்மிக்கே பிரச்சனை இல்லை. இந்த மம்மி(ஷகிலா) என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியலன்னு கேலியாக பேசியுள்ளார்.

கலாய்ச்சனா, மன்னிப்பு கேக்க சொன்னேனா?

உங்களுக்கு மட்டும் தான் செல்ஃப் ரெஸ்பெக்ட் இருக்கா மத்தவங்களுக்கு எல்லாம் இல்லையா என ஹுசைன் நக்கலாக கேட்க, நான் கலாய்ததுக்கு பேசினேனா இல்ல மன்னிப்பு கேட்க சொன்னதற்காக பேசினேனா என மணிமேகலை கேட்டுள்ளார். அதற்கு ஹுசைன், மாத்தி மாத்தி பேசாதிங்க, வெளியில என்ன வந்திருக்கோ அததான நான் பேசுறேன் என சிரித்தவாறே கேட்டுள்ளார்.

அதற்கு பதில் கூறிய மணிமேகலை, இந்த உலகத்தில் பணம், பி.ஆர். ஸ்கிரிப்ட்,, முதுகுல குத்துறது இது எல்லாம் கிட்ட கூட நெருங்க முடியாத ஆள் யாரு தெரியுமா? அவங்க ஒரு கடவுள் தான் என மறைமுகமாகத் தாக்கி நக்கலாக கூறியுள்ளார்.

சொம்புக்கு எல்லாம் என்ன மரியாதை

வீடியோவிற்கு நடுவே, சாப்பிட்டுக் கொண்டே ஹுசைனிடம் மமிமேகலை தண்ணீர் கேட்டுள்ளார். அதற்கு ஹுசைன் சொம்பில் தண்ணீர் தர, அதனை தூக்கி எறிந்த மணிமேகலை, சொம்பிற்கு எவ்லாம் என்ன மரியாதை எனக் கேட்டுள்ளார். அதாவது, பிரியங்காவிற்கு ஆதரவாக பேசியவர்ளை சொம்பு எனக் கூறிய மணிமேகலை இனி அவர்களுக்கு மரியாதை இல்லை என்பதை சூசகமாக கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, நாம கரெக்டா நடந்துகிட்டா எப்போவும் நம்ம கூட யாரும் நிக்க மாட்டாங்க எனவும் கூறியுள்ளார்.

 

நான் செல்ஃப் மேட்

வீடியோவின் இறுதியில் பேசிய மணிமேகலை, ஒரு காலகட்டத்திற்கு மேல் காலாவதியாக நான் என்ன மில்க் மேடா, நான் செல்ப் மேட் என கூறியுள்ளார். பலரும், மணமேகலைக்கு இனி எங்கேயும் வாய்ப்பு கிடைக்காது. அதன் விரக்தியில் பேசி வருகிறார் என கூறிவந்த நிலையில், இந்த வசனத்தை அவர்களுக்கு பதிலாக கூறியிருக்கிறார்.

இவரது இந்த வீடியோ தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் 2ம் இடம் பிடித்துள்ளது. அத்துடன் இந்த வீடியோவில் இவர்களது யூடியூபிற்கு 2 மில்லியன் பாலோயர்கள் வந்ததையும் கொண்டாடி உள்ளனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.