தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay: செருப்பே இல்லாமல் விஜய் வீட்டு வாசலில் நின்ற கேப்டன்.. கலங்கிய Sac.. விஜயை திரும்பி பார்க்க வைத்த செந்தூரபாண்டி!

Vijay: செருப்பே இல்லாமல் விஜய் வீட்டு வாசலில் நின்ற கேப்டன்.. கலங்கிய SAC.. விஜயை திரும்பி பார்க்க வைத்த செந்தூரபாண்டி!

Sep 13, 2024, 09:41 PM IST

google News
Vijay : கோட் படத்தில் விஜயகாந்த் நடிப்பது போல் உருவாக்கப்பட்ட காட்சிக்காக 35 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ‘உயிரோடு இருந்த கேப்டன் ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்து கொடுத்தார். இன்று உயிரிற்ற விஜயகாந்தை 35 லட்சத்திற்கு இவர்கள் விற்றுள்ளார்கள் என்று வி.கே. சுந்தர் தெரிவித்துள்ளார்.
Vijay : கோட் படத்தில் விஜயகாந்த் நடிப்பது போல் உருவாக்கப்பட்ட காட்சிக்காக 35 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ‘உயிரோடு இருந்த கேப்டன் ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்து கொடுத்தார். இன்று உயிரிற்ற விஜயகாந்தை 35 லட்சத்திற்கு இவர்கள் விற்றுள்ளார்கள் என்று வி.கே. சுந்தர் தெரிவித்துள்ளார்.

Vijay : கோட் படத்தில் விஜயகாந்த் நடிப்பது போல் உருவாக்கப்பட்ட காட்சிக்காக 35 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ‘உயிரோடு இருந்த கேப்டன் ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்து கொடுத்தார். இன்று உயிரிற்ற விஜயகாந்தை 35 லட்சத்திற்கு இவர்கள் விற்றுள்ளார்கள் என்று வி.கே. சுந்தர் தெரிவித்துள்ளார்.

Vijayakanth : தளபதி விஜய் நடிப்பில் தி கோட் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. கேப்டன் விஜயகாந்த் AI டெக்னாலனியில் கோட் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றினார். இது விஜய காந்த் ரசிகர்களிடயே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் முதல் முதலாக விஜய்யும் விஜயகாந்தும் திரையில் தோன்றியது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். எஸ்.ஏ. சந்திர சேகர் தனது மகனை ஒரு நடிகனாக மாற்ற வேண்டும் என்று விரும்பினார். ஆனால் விஜய்க்கு அதில் பெரிதாக விருப்பம் இல்லை. ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்த விஜய் ஒரு கட்டத்தில் விஜய் நடிகராக மாறினார். இன்றைக்கு தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய் ‘நாளைய தீர்ப்பு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானர். ஆனால் அந்த படம் பெரிதாக மக்களிடம் வரவேற்பை பெற வில்லை. அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக விஜய் நடிப்பில் வெளியான படங்கள் அவருக்கு வெற்றியை தருவதாக அமைய வில்லை.

இந்த நிலையில் தான் நடிகர் விஜய்யும், விஜயகாந்தும் இணைந்து நடித்த செந்தூரப்பாண்டி படம் வெளியானது. இந்த படம் விஜய்யின் கேரியரில் வெற்றிப்படமாக அமைந்தோடு மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்த படத்திற்கு பின்னால் உள்ள சுவாரஸ்யமான தகவல்களை சினிமா செய்தி தொடர்பாளர் வி.கே. சுந்தர் தனது யூ டியூப் சேனலில் தெரிவித்துள்ளார். அது குறித்து இங்கு பார்க்கலாம்.

சொத்துக்களை விற்ற SAC!

விஜய்க்கு அடுத்தடுத்த படங்களில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் ஏற்கனவே வாங்கிய கடனை அடைக்க தனது சில சொத்துக்களை விற்றார். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தார். ஒரு நாள் திடீரென யோசனை வரவே கேப்டன் விஜயகாந்திற்கு போன் செய்தார். விஜி எங்க இருக்கீங்க உங்களை பார்க்க வரணும் என்று தழுதழுத்த குரலில் சொன்னார். அதற்கு விஜயகாந்த், சார் நீங்க வராதீங்க.. உங்களை பார்க்க நான் வருகிறேன் என்று சொன்னார். அவர்கள் இருவரின் வீடும் பக்கத்து தெருவில் இருந்ததால் எங்கே சந்திரசேகர் நமது வீட்டிற்கு கிளம்பி வந்து விடுவாரோ என்று எண்ணி அவசர அவசரமாக கிளம்பி விஜய் வீட்டிற்கு சென்று விட்டார் கேப்டன். கிளம்பிய அவசரத்தில் காலில் செருப்பு கூட போடாமல் லுங்கியை கட்டியவாறே சென்று விட்டார். எஸ்ஏ சந்திர சேகர் விஜயகாந்த் வீட்டிற்கு கிளம்பி வரும் போதே கேப்டன் அங்கு வந்துவிட்டார். ஏன் விஜி, நான் வந்திருப்பேன்ல நீங்க ஏன் வந்தீர்கள் என்று கேட்டதற்கு சார்.. நான் வர்றது தான் சரியா இருக்கும் என்றார் கேப்டன்.

இதற்கு ஒரு ப்ளாஸ் பேக் இருக்கிறது. எஸ்.ஏ.சந்திர சேகர் போன் செய்து கூப்பிட்ட காலம் கேப்டன் தனது சினிமா வாழ்வில் உச்சத்தில் இருந்த கால கட்டம். ஆனால் கேப்டன் சின்னச்சின்ன படங்களில் நடித்து கொண்டிருந்த காலகட்டத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தில் விஜயகாந்தை நடிக்க வைத்தார். கேப்டனின் கேரியரில் அவரை ஆக்சன் ஹீரோவாக காட்டிய முதல் படம் அதுதான். படம் பெரிய அளவில் ஹிட்டானது. அந்த படத்தை பார்த்து கேப்டனை, எம்ஜிஆர், ரஜினி என எல்லோரும் அழைத்து பாராட்டினர். அடுத்தடுத்து அவருக்கு வரிசையாக பட வாய்ப்புகள் வந்த போதும் பெரிதாக ஹிட்டாகவில்லை. அந்த நேரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீண்டும் கேப்டனை அழைத்து சாட்சி என்ற படத்தில் நடிக்க வைத்தார். அந்த படம் விஜயகாந்த்தின் சினிமா வாழ்வில் செக்கெண்ட் இன்னிங்ஸ் என்ற அளவில் பெரு வெற்றியை பெற்றது. அடுத்தடுத்து இருவரும் இணைந்து சுமார் 10 படங்களில் வேலை செய்தனர். அத்தனை படமும் பெரிய அளவில் ஹிட்டானது.

இதனால் தான் எஸ்.ஏ.சந்திர சேகர் ஒரு போன் போட்டு பேச வேண்டும் என்று சொன்ன உடனே செருப்பு கூட போடாமல் விஜயகாந்த் ஓடி வந்தார்.

1ரூபாய் கூட சம்பளம் வாங்காத விஜயகாந்த்

அப்போது கேப்டனிடம் எஸ்.ஏ.சந்திர சேகர் , விஜய்யை வைத்து எடுத்த படங்கள் சரியாக போகவில்லை. இதனால் விஜய்யுடன் சேர்த்து நீங்கள் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு உடனே விஜயகாந்த் பண்ணலாம் என்று சொல்லி விட்டார். அப்படி உருவான படம் தான் செந்தூரப்பாண்டி. விஜய்யின் திரை வாழ்வில் திருப்பு முனையாக அமைந்த படம். அந்த படத்தில் நடிப்பதற்கு விஜயகாந்த் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்க மறுத்து விட்டார். விஜய் என் தம்பி என்று உரிமையோடு சம்பளம் வாங்க மறுத்தார்.

இதனால் எஸ்ஏசி திரை உலகிற்கு வந்து முதல் முதலில் சம்பாதித்து சாலிகிராமத்தில் ஒரு சொத்தை வாங்கி இருந்தார். அந்த சொத்தை விஜயகாந்த்திற்கு எழுதி வைத்து விட்டார்.

இந்த நிலையில் தான் கோட் படத்தில் விஜயகாந்த் நடிப்பது போல் உருவாக்கப்பட்ட காட்சிக்காக 35 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ‘உயிரோடு இருந்த கேப்டன் ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்து கொடுத்தார். இன்று உயிரற்ற விஜயகாந்தை 35 லட்சத்திற்கு இவர்கள் விற்றுள்ளார்கள் என்று அந்த வீடியோவில் வி.கே. சுந்தர் தெரிவித்துள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சினிமா தொடர்பான சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை