Vijay: 'விஜய் மறக்க கூடாதா விஜயகாந்த் படம்' தளபதிக்கு கேப்டன் தந்த செந்தூரப்பாண்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay: 'விஜய் மறக்க கூடாதா விஜயகாந்த் படம்' தளபதிக்கு கேப்டன் தந்த செந்தூரப்பாண்டி!

Vijay: 'விஜய் மறக்க கூடாதா விஜயகாந்த் படம்' தளபதிக்கு கேப்டன் தந்த செந்தூரப்பாண்டி!

Pandeeswari Gurusamy HT Tamil
Dec 24, 2023 05:15 AM IST

Vijayakanth: நடிகர் விஜயை மாஸ் ஹீரோவாக, பக்கா ஓப்பனிங் ஹீரோவாகவும், வசூல் சக்ரவர்த்தி ஆகவும், தமிழ் மொழியையும் தாண்டி கோடிக்கணக்கான ரசிகர்களும் தமிழ் சினிமா இன்டஸ்ட்ரி யும் இன்று கொண்டாடுவதற்கு அவரின் இரண்டாவது படமான செந்தூரபாண்டி மிகச்சிறந்த அஸ்திவாரம் அமைத்து கொடுத்த படம் என்றே சொல்லலாம்.

செந்தூர பாண்டி
செந்தூர பாண்டி

டைட்டில் ரோலில் விஜயகாந்த் நடித்திருந்தாலும் ஹீரோ விஜய் தான். விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகனை ஹீரோவாக முன்னிறுத்த நாளைய தீர்ப்பு படத்தை தொடர்ந்து இயக்கிய படம். இதற்காக அந்த நேரத்தில் உச்சத்தில் இருந்த விஜயகாந்த் விஜய் ஹீரோ வாகவளர்ச்சி அடைய உதவியதாக சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் உண்டு.

விஜயகாந்த், விஜய் இருவரும அண்ணன் தம்பியாகவும் இவர்களின் பெற்றோராக விஜயகுமார், மனோரமா நடித்தனர்... யுவராணி நாயகியாக நடிக்க அவரின் அண்ணன் ஆக பொன்னம்பலம் நடித்திருப்பார்.

பக்கா கிராமத்து சப்ஜெக்ட்டில் ஆக்சன், காதல், செண்டிமெண்ட், பழி வாங்குதல், ஊர் பஞ்சாயத்து, தேவா இசையில் பாடல்கள் என்று முழுக்க முழுக்க கமர்சியல் படம் ஆக எடுதது இருப்பார்கள்.

நாயகன் நாயகி அறிமுகமே மோதலில் ஆரம்பித்து வழக்கம் போல் காதலில் வந்து நிற்கும். தன் தங்கை விஜயை விரும்புவதை பிடிக்காத பொன்னம்பலம் சூழ்ச்சியால் தந்தை கையால் விஜய் பஞ்சாயத்தில் கசையடி வாங்குவார். இதன் பின்னர் இவர்கள் காதலை உணர்ந்த மனோரமா பிளாஸ்பேக் கதையை கூற ஆரம்பிப்பார். 

விஜயின் அண்ணன் விஜயகாந்த் கௌதமியை காதலித்த போது இதே பொன்னம்பலம் விரோதியாக மாறி வேறு உறவினர்களை தூண்டி விட்டு கௌதமியை கொலைசெய்து விட அவர்களை செந்தூரபாண்டி கொலை செய்து விட்டு சிறையில் இருப்பதாகவும் தெரிவிப்பார். பிறகு என்ன நடக்கும்.. ஹீரோ, ஹீரோயின் காதல் இன்னும் அழுத்தம் கூட வில்லன் ஆத்திரத்தில் எந்த எல்லைக்கும் செல்லும் போது சிறையில் இருந்து அண்ணன் விடுதலை ஆகி வெளியே வந்து காதலித்த ஜோடிகளை சேர்த்து வைக்கும் போது குறுக்கே நின்ற வில்லனை கொன்று விட்டு மீண்டும் சிறைக்கு செல்கிறார்.

நடிகர் விஜயை மாஸ் ஹீரோவாக, பக்கா ஓப்பனிங் ஹீரோவாகவும், வசூல் சக்ரவர்த்தி ஆகவும், தமிழ் மொழியையும் தாண்டி கோடிக்கணக்கான ரசிகர்களும் தமிழ் சினிமா இன்டஸ்ட்ரி யும் இன்று கொண்டாடுவதற்கு அவரின் இரண்டாவது படமான செந்தூரபாண்டி மிகச்சிறந்த அஸ்திவாரம் அமைத்து கொடுத்த படம் என்றே சொல்லலாம்.

விஜயின் திரை உலக பயணம் முப்பதாண்டுகளை கடந்திருக்கும் இந்த நேரத்தில் அவர் இன்னும் சிகரம் தொட சதமடிக்க வாழ்த்துவோம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.