Rajinikanth: நெல்சனால் ரூ. 50 ஆயிரம் நஷ்டம் அடைந்த ரஜினிகாந்த்.. அப்படி என்ன விஷயம் நடந்தது?
Rajinikanth: பல நேரங்களில் அவர் சொன்னதை செய்யாமல் இருந்து இருக்கிறேன். அப்படி தான் ஒருமுறை ஜெயிலர் படத்தின் முக்கிய காட்சி ஒன்றில் ரஜினி சார் ஒரு சில மாற்றத்தை சொன்னார்.
Rajinikanth: சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைப்படும் நடிகர் ரஜினிகாந்த், 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கி இருந்தார்.
இதற்கு முன்னதாக இவர் விஜய்யை வைத்து ‘பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் ரசிகர்களிடம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது. ரஜினிக்கும் அவரின் கடந்த சில திரைப்படங்கள் பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் இருவருக்கும் இந்த திரைப்படம் ஒரு கம் பேக் திரைப்படமாக அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கம் பேக்
எதிர்பார்த்தது போல அந்த திரைப்படம் அவர்களுக்கு கம் பேக் திரைப்படமாகவே அமைந்து விட்டது. காரணம் படம் பார்த்த பெரும்பான்மையான ரசிகர்களுக்கு ஜெயிலர் திரைப்படம் பிடித்து இருக்கிறது.
இதனிடையே ஜெயிலர் படம் தொடர்பாக சமீபத்தில் இயக்குநர் நெல்சன் பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், “ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் சொன்ன காட்சிகளை சிறப்பாக நடித்து கொடுத்து விடுவார். எந்த தயக்கமும் அவர் காண்பிக்க மாட்டார்.
சின்ன சின்ன மாற்றங்கள்
இயக்குநர் விருப்பம் போல் நடந்து கொள்வார். ஆனால் சில நேரங்களில் காட்சிகளில் சின்ன சின்ன மாற்றங்கள் சொல்வார். அதுவும் தேவைப்பட்டால் வைத்து கொள்ளுங்கள், இல்லை என்றால் கட்டாயமில்லை என்பார். இதை எல்லாம் சொல்லிவிட்டு நான் இணை இயக்குனர் போல் சொல்கிறேன் அல்லவா? என கேட்பார்.
அதே போல் அவர் சொல்வதை செய்யாவிட்டாலும் வருத்தமோ, முகம் சுழித்து கொள்வதோ இருக்காது. சில நேரங்களில் அவர் சொல்வதை நான் கேட்டு விட்டு, அது சரியாக வருமா என தெரியவில்லை சார், என சொல்லுவேன்.
அதிர்ச்சி அடைந்த ரஜினி
பல நேரங்களில் அவர் சொன்னதை செய்யாமல் இருந்து இருக்கிறேன். அப்படி தான் ஒருமுறை ஜெயிலர் படத்தின் முக்கிய காட்சி ஒன்றில் ரஜினி சார் ஒரு சில மாற்றத்தை சொன்னார். எனக்கு ரொம்பவும் அது பிடித்துவிட்டது. ஓகே சார், அப்படியே செய்துவிடலாம் என்றேன்.
அவர் அதிர்ச்சி அடைந்துவிட்டார். ஏன் அதிர்ச்சி அடைந்தீர்கள் என ஆச்சரியப்பட்டு கேட்டேன். உங்களால் எனக்கு ரூ. 50 ஆயிரம் நஷ்டம் என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் சார் என்று கேட்டேன்.
உங்களிடம் சொன்ன இந்த காட்சியை நான் என் மேக்கப் மேன் பானுவிடம் சொன்னேன். அவர் அதற்கு இயக்குநர், நிச்சயமாக இதற்கு ஓகே சொல்வார் என்றார். நான் சொன்னால் அவர் ஏற்கமாட்டார், மறுத்துவிடுவார் என சொன்னேன்.
ரூ. 50 ஆயிரம் நஷ்டம்
ஏனென்றால் நீங்கள் அப்படி பலமுறை மறுத்துள்ளீர்கள். அதனால் அவரிடம் ரூ. 50 ஆயிரம் நீங்கள் வேண்டாம் என சொல்வீர்கள் என சொல்லி பந்தயம் கட்டினேன். இப்போது நீங்கள் ஓகே சொன்னதால், நான் பானுவுக்கு 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும், அதனால் 50 ஆயிரம் எனக்கு லாஸ் ஆகிவிட்டது என சொன்னார் “ என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்