Actor Premji: விஜய்யின் கார் எண்..அவர் 2026இல் முதலமைச்சர் ஆவார் என கேரண்டி தருகிறேன் - பிரேம்ஜி பேச்சு
விஜய்யின் கார் எண் CM2026 அவரது தவெக கட்சியை குறிக்கிறது. 2026இல் அவர் முதலமைச்சர் ஆவார் என கேரண்டி அளிக்கிறேன் என்று நடிகர் பிரேம்ஜி இந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்

ரசிகர்களின் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தி கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) அன்டை மாநிலமான கேரளாவில் அதிகாலை 4 மணி காட்சியுடன் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு வெளியாகிறது.
இதற்கிடையே படம் குறித்து நேர்மறையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. படத்தை காண தளபதி விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்து வருகின்றனர்.
தி கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரும், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் பிரேம்ஜி ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் படம் குறித்து பேசும்போது, இந்தப் படம் பிளாக்பஸ்டராக இருக்கும் என்றும், உலகளவில் அனைத்து மொழிகளிலும் ரூ. 1,500 கோடி வசூலிக்கும் என்றும் கூறினார்.