தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சூர்யாவின் கங்குவா போட்டியாக வரும் படம்..கவிஞர் சிநேகன் ஜோடியாகும் பிக் பாஸ் பிரபலம்! இன்றைய டாப் சினிமா செய்திகள்

சூர்யாவின் கங்குவா போட்டியாக வரும் படம்..கவிஞர் சிநேகன் ஜோடியாகும் பிக் பாஸ் பிரபலம்! இன்றைய டாப் சினிமா செய்திகள்

Oct 11, 2024, 11:45 PM IST

google News
சூர்யாவின் கங்குவா போட்டியாக வரும் படம், .கவிஞர் சிநேகன் ஜோடியாகும் பிக் பாஸ் பிரபலம், பாடகி சித்ரா பெயரில் மோசடி என இன்றைய டாப் சினிமா செய்திகள் பற்றி பார்க்கலாம்.
சூர்யாவின் கங்குவா போட்டியாக வரும் படம், .கவிஞர் சிநேகன் ஜோடியாகும் பிக் பாஸ் பிரபலம், பாடகி சித்ரா பெயரில் மோசடி என இன்றைய டாப் சினிமா செய்திகள் பற்றி பார்க்கலாம்.

சூர்யாவின் கங்குவா போட்டியாக வரும் படம், .கவிஞர் சிநேகன் ஜோடியாகும் பிக் பாஸ் பிரபலம், பாடகி சித்ரா பெயரில் மோசடி என இன்றைய டாப் சினிமா செய்திகள் பற்றி பார்க்கலாம்.

விஜயதசமி ஸ்பெஷலாக தமிழில் ஜீவா, ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் பிளாக் என்ற படம் இன்று (அக்டோபர் 11) வெளியாகியுள்ளது. இதுதவரி ஓடிடி தளங்களில் மாரிசெல்வராஜ் வாழை, சசிக்குமார் நடித்த நந்தன் உள்ளிட்ட சில படங்களும் வெளியாகியுள்ளன.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி வருகிறது. தமிழில் இன்றைய முக்கிய சினிமா செய்திகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

விஜய் சேதுபதி மகன் அறிமுகமாகும் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் ‘ஃபீனிக்ஸ் வீழான்’ திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது. பிரபல ஸ்டண்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கியிருக்கும் இந்த படம் ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவாகியுள்ளது. இதே நாளில் சூர்யாவின் கங்குவா ரிலீசாகிறது

பாடகி சித்ரா பெயரில் மோசடி விளம்பரம்

பிரபல பாடகி சித்ராவின் பெயரில் சிலர் மோசடி விளம்பரம் ஒன்றை பதிவு செய்துள்ளனர். அதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தூதராக சித்ரா இருப்பதாகவும் அதில் ரூ. 10 ஆயிரம் முதலீடு செய்து பங்குகளை பெற்றால், அதன் மதிப்பு ஒரே வாரத்தில் ரூ.50 ஆயிரம் ஆக உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி பாடகி சித்ரா, "இது எனது பெயரில் தரப்பட்டுள்ள போலி விளம்பரம். மக்கள் உஷாராக இருங்கள். தேவையில்லாமல் இதில் பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்.

மோசடி நபர்கள் மக்கள் பணத்தை திருட்டுத் தனமாக பறிக்க நினைக்கிறார்கள். இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ஆலோசித்து வருகிறேன்" என்று கூறியுள்ளார்.

ஐந்தாம் வேதம் டீசர் வெளியீடு

மர்மதேசம் புகழ் நாகா இயக்கத்தில் ஐந்தாம் வேதம் என்ற வெப்சீரிஸ் உருவாகி வருகிறது. இதுதொடர்பாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த சீரிஸின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. புராண தொடராக உருவாகும் இதில் சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், தேவதர்ஷினி, ஒய்.ஜி. மகேந்திரா உள்பட பலரும் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலி ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த தொடர் ஸ்டிரீமிங் ஆக இருக்கிறது

சமந்தா - நாக சைதன்யா குறித்து அவதூறாக பேசிய அமைச்சருக்கு சம்மன்

முன்னாள் தம்பதிகளான சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து குறித்து தெலங்கானா மாநில வனத்துறை அமைச்சர் சுரேக பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதற்கு தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

அத்துடன் நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜூனா இதுதொடர்பாக ஹைதராபாத்திலுள்ள நாம்பள்ளி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கின் விசாரணையில் வரும் 23ஆம் தேதி அமைச்சர் சுரேகா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

பாடலாசிரியர் சிநேகன் ஜோடியாகும் பிக் பாஸ் பிரபலம்

பாடலாசிரியரான சிநேகன், நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பேச்சாளராக இருந்து வரும் இவர், தற்போது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பவித்ரா என்ற சீரியலில் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த சீரியலில் சிநேகனுக்கு ஜோடியாக பிக் பாஸ் பிரபலம் அனிதா சம்பத் நடிக்கவுள்ளார். இதன் புரொமோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன

வேட்டையன் காட்சி நீக்க கோரி புகார்

ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் அரசுப்பள்ளி குறித்து சர்ச்சையான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக அதனை நீக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. படத்தில் கோவில்பட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் ஆசிரியை பாடம் நடத்துவதை தவறாக சித்தரித்து போன் மூலம் பலருக்கு பகிர்வது போன்று இரு காட்சி இடம் பெற்று இருந்தது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டி சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகார் மனுவில், 2009 -2010ம் ஆண்டு தமிழ்நாட்டின் சிறந்த பள்ளியாக கோவில்பட்டி காந்திநகரில் உள்ள உயர்நிலைப்பள்ளி விருதுபெற்றது. இந்நிலையில் வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளால் பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால், அக்காட்சியை நீக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஜிஎஸ்டி நோட்டீஸை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் மனு தள்ளுபடி

ஜி.எஸ்.டி நோட்டீஸ்க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஹாரிஸ் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஹாரிஸ் இசையமைத்த படங்களுக்கு சேவை வழங்கியதாக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பாக, இவருக்கு ஜி.எஸ்.டி இணை இயக்குநர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இது கடந்த 2018 ஆம் அனுப்பப்பட்ட நோட்டீஸ் ஆகும். ஜி.எஸ்.டி நோட்டீஸ்க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஹாரிஸ் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவில், 'ஹாரிஸ் தனது படைப்புகள் முழுவதையும் தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக பதிப்புரிமை வழங்கி விட்டதால் தனக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடியாது எனவும், வரி விதிப்பு தொடர்பாக அனுப்பபட்ட இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்” எனவும் கோரப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள் குழு, 'ஜி.எஸ்.டி வரி விதிப்பது தொடர்பான நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தான் சென்று முறையிட வேண்டும் என உயர் நீதிமன்றம் ஏற்கனவே ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளதைச் சுட்டிக் காட்டியது.

மேலும், ஜி.எஸ்.டி இணை இயக்குனர் அனுப்பிய நோட்டீசுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் பதிலளிக்கலாம் எனவும், அதில் ஆட்சேபணைகளை முன்வைக்கலாம் எனவும் அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

வேட்டையன் முதல் நாள் வசூல்

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வேட்டையன் படம் முதல் நாளில் நல்ல வசூலை பெற்றிருப்பதாக கூறப்பட்டாலும், ரஜினி படத்துக்கான ஓபனிங் இல்லை என கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

Sacnilk.com படி, வேட்டையன் படம் ரிலீஸ் ஆன வியாழக்கிழமை பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படம் இந்தியாவில் (nett) அனைத்து மொழிகளிலும் முதல் நாளில் சுமார் 25.27 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் வெளியான தளபதி விஜய்யின் தி கோட் படத்தின் முதல் நாள் வசூலை விட இது கம்மிதான் என கூறப்படுகிறது. தி கோட் படம் முதல் நாளில் ரூ. 25.55 கோடி வசூலித்து இருந்தது.

தனுஷின் இட்லி கடை ஷுட்டிங் ஸ்பாட் விடியோ லீக்

தனுஷ் குபேரா படத்தில் நடித்து வருவதுடன் இட்லி கடை படத்தையும் இயக்கி வருகிறார். தேனி சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இட்லி கடை ஷுட்டிங் ஸ்பாட்டில் விறுவிறுப்பாக தனுஷ் இயங்கி வரும் விடியோ ஒன்று லீக்காகியுள்ளது.

சமீபத்தில் கூலி, குட் பேட் அக்லி படங்களை தொடர்ந்து தற்போது இட்லி கடை ஷுட்டிங் ஸ்பாட் விடியோ வெளியாகி வைரலாகியுள்ளது

சர்ப்ரைசாக ஓடிடியில் வெளியான நந்தன்

கடந்த மாதம் சசிக்குமார் நடிப்பில் வெளியான படம் நந்தன். இரா. சரவணன் இயக்கியிருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானது. தற்போது இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் சர்ப்ரைசாக வெளியாகியுள்ளது

 

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை