Aindham Vedham Series: "ஆயிரம் வருசத்துக்கு ஒரு முறை நடக்கும் அதிசியம்.."மர்மதேசம் நாகாவின் ஐந்தாம் வேதம் வெப்சீரிஸ்
Aindham Vedham Series: ஆயிரம் வருசத்துக்கு ஒரு முறை நடக்கும் அதிசியம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக கதையம்சத்தில் முழுக்க பேணிடஸி கலந்த புராண சாகச கதையாக ஐந்தாம் வேதம் என்ற பெயரில் வெப்சீரிஸ் உருவாகிறது. மர்மதேசம் புகழ் நாகா இந்த சீரிஸை இயக்குகிறார்.
கடந்த 1990களில் ஒளிபரப்பான டிவி சீரியல்களில் மிகவும் பேமஸ் ஆக இருந்தது மர்மதேசம். இந்த மர்மதேசம் சீரிஸில் ரகசியம், விடாது கருப்பு, செர்ணா ரேகை, இயந்திர பறவை, எதுவும் நடக்கும் என மொத்தம் 5 தொடர்கள் வெளியாகின.
இதில் விடாது கருப்பு தொடர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவராலும் வெகுவாக ரசிகப்பட்டது. மர்மதேசம் சீரிஸில் ரகசியம், விடாது கருப்பு, எதுவும் நடக்கும் தொடர்களை இயக்கியா இயக்குநர் நாகா தற்போது அதே போன்றதொரு த்ரில் தொடரை வெப்சீரிஸ் ஆக இயக்கவுள்ளார்.
ஐந்தாம் வேதம்
இந்த புதிய சீரிஸ் ஐந்தாம் வேதம் என்ற பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன் இதன் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் இந்த சீரிஸின் டைட்டில் எழுத்துகள் பிரிக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கு க்ளூவாக கொடுக்கப்பட்டது.
இதையடுத்து இந்த சீரிஸின் டைட்டிலை டீகோட் செய்த பலரும் ஐந்தாம் வேதம் என்ற சரியான டைட்டிலையும் கண்டறிந்த பகிர்ந்துள்ளனர்.
புராண சாகச கதை
"ஆயிரம் வருசத்துக்கு ஒரு முறை குரு, சுக்கிரன், சனி, செவ்வாய் ஆகிய 4 கிரகங்களும் சூரியனை பார்த்தது போல் ஒரே நேர்கோட்டில் நிற்கும். அப்போது ஒரு அதிசயம் நடக்கும் என்பது ஐதீகம். வேதம் என்பது ஒன்று அதில் பல பாகங்கள் இருக்கிறது. இதில் ஐந்தாம் பாகம் தற்போது வெளியாக போகிறது" என வாய்ஸ் ஓவர் ஒலிக்க இதன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஐந்தாம் வேதம் சீரிஸில் சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், தேவதர்ஷினி, கிரிஷா குருப், ஒய்ஜி மகேந்திரன், ராம்ஜி, பிரஜ்னா ரவி பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஜீ5 பிற வெப் சீரிஸ்
தமிழ் ஓடிடி தளத்தில் பல்வேறு வகையான த்ரில்லர் வெப்சீரிஸ்கள் இடம்பிடித்திருக்கும் தளமாக ஜீ5 இருந்து வருகிறது. 1980களின் இறுதியில் தமிழகத்தை உலுக்கிய க்ரைம் மன்னன் ஆட்டோ ஷங்கர் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட ஆட்டோ ஷங்கர் வெப் சீரிஸ், சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் வாழ்க்கைய அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கோஸ்முனுசாமி டாக்குமென்டரி சீரிஸ் ஜீ5 தளத்தில் தான் உள்ளன.
அத்துடன் ஜி. வசந்த பாலன் இயக்கத்தில் கிஷோர், ஷ்ரேயா ரெட்டி, கனி குஸ்ருதி, பரத், ரம்யா நம்பீசன் உள்பட பலர் நடித்து அரசியல் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் தலைமை செயலகம் எந்ற வெப்சீரிஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் கடந்த மே மாதம் வெளியானது. மொத்தம் 8 எபிசோடுகளை கொண்டிருக்கும் இந்த சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதுடன், விமர்சக ரீதியாகவும் பாராட்டை பெற்றது.
இதேபோல் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் வாணி போஜன், கலையரசன், சரத் லோகிதாஸ்வா, விஜி சந்திரசேகர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க அரசியல் த்ரில்லர் வெப்சீரிஸாக வெளியாகி வரவேற்பை பெற்ற செங்களம் மற்றும் முத்துகுமார் இயக்கத்தில் அபி நட்சத்திரா, அனுமோல் உள்பட பல நடித்து விமர்சக ரீதியாக பாராட்டை பெற்று, ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அயலி போன்ற வெப்சீரிஸும் ஜீ5 தளத்தில் உள்ளது.