ஜிஎஸ்டி நோட்டீஸை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஜிஎஸ்டி நோட்டீஸை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஜிஎஸ்டி நோட்டீஸை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Suguna Devi P HT Tamil
Oct 11, 2024 11:40 PM IST

ஜி.எஸ்.டி நோட்டீஸ்க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஹாரிஸ் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை தற்போது நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

ஜிஎஸ்டி நோட்டீஸை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஜிஎஸ்டி நோட்டீஸை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இவர் தற்போது தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த இசையாமைப்பாளராக இருந்து வருகிறார். தொடர்ந்து இசை அமைத்து வந்த ஹாரிஸ் கடந்த 2019 இல் காப்பான், 2022 இல் தி லெஜெண்ட்  ஆகிய படங்களைத் தவிர  அண்மையில் எந்த படத்திற்கும் இசை அமைக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் வரும் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் ஜெயம் ரவியின் பிரதர் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் இவருக்கு சிறந்த கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹாரிஸ் இசைக்கு ஜி. எஸ். டி 

ஹாரிஸ் இசையமைத்த படங்களுக்கு சேவை வழங்கியதாக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பாக, இவருக்கு ஜி.எஸ்.டி இணை இயக்குநர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இது கடந்த 2018 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீஸ் ஆகும். இந்த ஜி.எஸ்.டி நோட்டீஸ்க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஹாரிஸ் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை தற்போது நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். 

ஜி.எஸ்.டி நோட்டீஸ்க்கு எதிராக ஹாரிஸ் தரப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 'ஹாரிஸ் தனது படைப்புகள் முழுவதையும் தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக பதிப்புரிமை வழங்கி விட்டதால் தனக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடியாது எனவும், வரி விதிப்பு தொடர்பாக அனுப்பபட்ட இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்” எனவும் கோரப்பட்டிருந்தது.

5 வருடங்கள் கழித்து விசாரணை 

கடந்த 2019 இல் தாக்கல் செய்த மனு, 5 ஆண்டுகளுக்கு பின் நேற்று (அக்டோபர் 10)உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் சரவணன் ஆகியோர் அமர்வு தலைமையில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் குழு, 'ஜி.எஸ்.டி வரி விதிப்பது தொடர்பான நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தான் சென்று முறையிட வேண்டும் என உயர் நீதிமன்றம் ஏற்கனவே ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளதைச் சுட்டிக் காட்டியது. 

மேலும், ஜி.எஸ்.டி இணை இயக்குனர் அனுப்பிய நோட்டீசுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் பதிலளிக்கலாம் எனவும், அதில் ஆட்சேபணைகளை முன்வைக்கலாம் எனவும் அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.மேலும், ஹாரிஸ் ஜெயராஜின் ஆட்சேபணைகளை பரிசீலித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என ஜி.எஸ்.டி அதிகாரிகளுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 5 வருடங்களுக்கு பின்னர் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹாரிஸ் தரப்பினர் ஜி.எஸ்.டி இணை இயக்குனரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கவும், ஆட்சேபணை தெரிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.