அட கொடுமையே..குறி வச்ச நாளில் இரை விழுந்துடுச்சா? வேட்டையன் முதல் நாள் வசூல் இவ்வளவுதான்
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வேட்டையன் படம் முதல் நாளில் நல்ல வசூலை பெற்றிருப்பதாக கூறப்பட்டாலும், ரஜினி படத்துக்கான ஓபனிங் இல்லை என கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
தசரா விடுமுறை ஸ்பெஷலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் அக்டோபர் 10 (நேற்று) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கும் வேட்டையன் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 25 கோடி வசூலை ஈட்டியிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேட்டையன் முதல் நாள் வசூல் நிலவரம்
Sacnilk.com படி, வேட்டையன் படம் ரிலீஸ் ஆன வியாழக்கிழமை பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படம் இந்தியாவில் (nett) அனைத்து மொழிகளிலும் முதல் நாளில் சுமார் 25.27 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
திரையரங்கு ஆக்கிரமிப்புக்கு வரும்போது, தமிழில் 53.96% ஆகவும், தெலுங்கில் 34.15%, இந்தியில் 8.11% மற்றும் கன்னடத்தில் துறையில் 10.79% என இருந்துள்ளது.
கடந்த மாதம் வெளியான தளபதி விஜய்யின் தி கோட் படத்தின் முதல் நாள் வசூலை விட இது கம்மிதான் என கூறப்படுகிறது. தி கோட் படம் முதல் நாளில் ரூ. 25.55 கோடி வசூலித்து இருந்தது.
அத்துடன் வழக்கமான ரஜினி படத்துக்கான ஓபனிங் வேட்டையன் படத்துக்கு இல்லை எனவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால், இன்று முதல் வரும் ஞாயிறு வரை பேமிலி ஆடியன்ஸ் வருகையும் இருக்கும் என்பதால் வேட்டையன் படத்தின் வசூல் நிலவரம் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்டையன் படம் பற்றி ரசிகர்கள் கருத்து
இதற்கிடையே, படம் குறித்து சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. சிலர் நடிகர்கள் மற்றும் படத்தினஅ மேக்கிங்கை பாராட்டுகிறார்கள். இதே விஷயத்தை பலரும் விமர்சிக்கவும் செய்கிறார்கள்.
பெரும்பாலனோர் திரைக்கதை சுவாரஸ்யமாக இருப்பதாகவும், சமூகத்தில் இருக்கும் முக்கிய பிரச்னைகளை பேசும் விதமாக இருப்பதாகவும் கூறுகிறஆர்கள்.
பலரும், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை தனது தோளில் சுமந்து செல்கிறார்”
மேலும், “நாம் எப்போதும் ஒரு மாஸ் படம் அல்லது சமூக செய்தி தொடர்பான படம் மட்டுமே காண முடியும். ஆனால் மிகவும் அரிதானது இவை இரண்டு கலந்த புல்லரிக்க வைக்கும் படத்தை பார்க்கலாம்" என்று கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
அதேபோல், ஜெயிலர் அளவுக்கு படம் இல்லை என ரசிகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். "இது வழக்கமான ரஜினிகாந்த் படம் இல்லை, ஞானவேல் படமாகத்தான் உள்ளது.
கன்டெண்ட் நன்றாக இருந்தாலும் பெரும்பாலான மாஸ் காட்சிகள் கவரும் விதமாக இல்லை. ஃபஹத் பாசில் நடிப்பில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். ரஜினி - ஃபாஃபா காம்போ காட்சிகள் புத்துணர்ச்சியாக இருக்கின்றன.
திரையரங்குகளில் பார்க்கத் தகுந்த படமாக இருந்தாலும், ஜெயிலர் போன்று இருக்கும் என எதிர்பார்க்க வேண்டாம்" என அவர் கூறியுள்ளார்.
வேட்டையன் கதை
கன்னியாகுமரி எஸ்.பி அதிகாரியாக இருக்கும் அதியன் ( ரஜினி) என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டாக ரவுடிகளை அடுத்தடுத்து சுட்டுத் தள்ளுகிறார். அந்த மாவட்டத்தில், அரசு பள்ளியில் நேர்மையான ஆசிரியையாக இருக்கும் சரண்யா ( துஷாரா) நீட் தேர்வுக்கு எதிராக சில வேலைகளை பார்க்க, அதில் கோபமான தனியார் நீட் கோச்சிங் நிறுவனர் நட்ராஜ் ( ராணா) கூலிப்படை ஏவி அவரை கொடூரமாக கொலை செய்கிறார்.
அந்த வழக்கு விசாரணை தெரிந்தே தவறான முறையில் நடந்து இருக்க, அது தெரியாமல் கடைசி நேரத்தில் வந்த அதியன், அதில் சம்பந்தப்படாத ஒருவரை என்கவுண்டர் செய்து விடுகிறார். அந்த வழக்கு மனித உரிமை அதிகாரியும், நீதிபதியுமான சத்ய தேவ் ( அமிதாப்) விசாரணை குழுவிடம் செல்கிறது.
அந்த அப்பாவிக்கு நீதி கிடைக்கும் விவகாரத்தில் ஜெயித்தது காக்கிச் சட்டையா? கருப்புச் சட்டையா?.. சரண்யா கொலையின் பின்னணியில் நடந்த கார்பரேட்டின் சதி வேலை என்ன உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே வேட்டையன் படத்தின் கதை!
டாபிக்ஸ்