தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "எனது கொள்கை சுயமரியாதை"! இந்தியாவின் சார்லி சாப்லின்.. மக்களை நகைச்சுவையால் சிரிக்கவும்,சிந்திக்கவும் வைத்த மகா கலைஞன்

"எனது கொள்கை சுயமரியாதை"! இந்தியாவின் சார்லி சாப்லின்.. மக்களை நகைச்சுவையால் சிரிக்கவும்,சிந்திக்கவும் வைத்த மகா கலைஞன்

Nov 29, 2024, 06:40 AM IST

google News
எனது கொள்கை சுயமரியாதை என்ற வெளிப்படையாக சொன்ன மகா கலைஞன் என். எஸ். கிருஷ்ணன். அதை தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றி மெய்பித்தும் காட்டினார். மக்களை தனது நகைச்சுவையால் சிரிக்கவும்,சிந்திக்கவும் வைத்துள்ளார்.
எனது கொள்கை சுயமரியாதை என்ற வெளிப்படையாக சொன்ன மகா கலைஞன் என். எஸ். கிருஷ்ணன். அதை தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றி மெய்பித்தும் காட்டினார். மக்களை தனது நகைச்சுவையால் சிரிக்கவும்,சிந்திக்கவும் வைத்துள்ளார்.

எனது கொள்கை சுயமரியாதை என்ற வெளிப்படையாக சொன்ன மகா கலைஞன் என். எஸ். கிருஷ்ணன். அதை தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றி மெய்பித்தும் காட்டினார். மக்களை தனது நகைச்சுவையால் சிரிக்கவும்,சிந்திக்கவும் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்ற சொல்லுக்கு அர்த்தம் ஏற்படுத்தி தந்த முதல் நடிகராக திகழ்ந்தவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் என்றால் அது மிகையாகாது. இந்திய சினிமாவின் சார்லி சாப்ளின் என்கிற மற்றொரு பெயரும் இவருக்கு உண்டு. சார்லி சாப்ளின் போல் எந்த வசனமும் இல்லாமல் உடல்மொழியில் மக்களை சிரிக்க வைத்த கலைஞனாக இருந்துள்ளார்.

நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் என பன்முக கலைஞனாக திரையில் ஜொலித்துள்ளார். 1935 முதல் 1960 வரை சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தோன்றி மக்களை மகிழ்வித்துள்ளார்.

சினிமா பயணம்

என்.எஸ். கிருஷ்ணன் என்ற பெயரான நாகர்கோவில் சுடலைமுத்துக் கிருஷ்ணன் என்பதன் சுருக்கம் தான். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த என். எஸ். கிருஷ்ணன் வறுமையின் காரணமாக நாடகக் கொட்டகையில் சோடா விற்கும் பையனாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். அப்போது நடிப்பில் மீது ஆர்வம் ஏற்பட்டு நாடக நடிகராக உருமாறினார். சொந்த ஊரான ஒழுகினசே‌ரியில் நாடகம் போட வந்த ஒ‌ரி‌ஜினல் பாய்ஸ் கம்பெனியில் அவரை சேர்த்துவிடுகிறார். சிறுவனின் நாடக வாழ்க்கை ஆரம்பமாகிறது.

கிடைக்கும் வேஷங்களை திறன்பட செய்த இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. சதிலீலாவதி என்ற படம் மூலம் நடிக்கும் வாய்ப்பை அவர் பெற்றபோதிலும், இரண்டாவதாக நடித்த மேனகா படம் தான் முதலில் வெளியானது. மற்ற நடிகர்களிடமிருந்து மாறுபட்டு தனக்கென தனி பாணியை நடிப்பில் கடைப்பிடித்த என். எஸ். கிருஷ்ணன், மக்களை மகிழ்வித்ததோடு அவரது காமெடி பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்தது.

நகைச்சுவையில் புதுமை

அந்த காலகட்டத்தில் சினிமாக்களில் நகைச்சுவை என்றாலே முகபாவனை, உடல்மொழியை வித்தியாசமாக வெளிப்படுத்துவது என்று இருந்தது. இதையும் மீறி உரையாடல்களிலும், வார்தைகளில் ஜாலம் செய்தும், வசன உச்சரிப்புகளால் சிரிக்க வைப்பதுடன், சிந்திக்கவும் வைக்கலாம் என்று நகைச்சுவையில் புதுமை புகுத்தினார். குறிப்பாக பாடலை பாடியும் சிரிக்க வைத்தது பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவத்தை தந்தது. தீவிர திராவாட பற்றாளராக இருந்து வந்த இவர், சினிமாக்களில் இடையிடையே பகுத்தறிவு சிந்தனைகளையும் புகுத்தினார். அப்படி பார்க்கையில் சினிமாக்களில் பகுத்தறிவை கொண்டு வந்ததில் முன்னோடியாக திகழ்ந்தார்.

சினிமாவில் ஹீரோக்களாக தியாகராஜர் பாகவதர், பி.யு. சின்னப்பா போன்றோர் கொடிகட்ட பறந்து வந்த காலகட்டத்தில் நகைச்சுவையில் கதாநாயகனாக வலம் வந்தார்.

தமிழ் சினிமாவின் முதல் ஸ்டார் தம்பதி

'வசந்தசேனா' படப்பிடிப்பு புனேவின் நடைபெற்றது. அங்கு சென்றபோது நடிகை டி.ஆர். மதுரத்துடன் காதல் ஏற்பட்டது. திருமணத்தில் முடிந்த இந்த காதல் உறவு, தமிழ் சினிமாவில் ஸ்டார் தம்பதிகள் என்ற பெருமையை பெற செய்தது. திருமணத்துக்கு பின்னர் இருவரும் இணைந்து தொடர்ந்து பல படங்களில் நடித்து புகழை பெற்றனர்.

விடாத நாடக கலை

தனது நடிப்பு திறமைக்கு விதை போட்ட நாடக கலையை, சினிமாவில் நடிகரான பின்னரும் விடாமல் தொடர்ந்து வந்தார். நாடகத்தால் கிடைக்கும் வருமான சினிமாவை காட்டிலும் மிகவும் குறைவாக இருந்தாலும், நாடக கலைஞர்களின் நலனுக்காக தொடர்ந்து நாடகங்களில் நடிப்பது, கிடைக்கும் வருவாயை கலைஞர்களுக்கு கொடுத்து ஊக்குவிப்பது என செய்து வந்துள்ளார்.

நாடககலையுடன் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவற்றையும் நடத்தி சகலகலா வல்லவனாக திகழ்ந்தார். இவர் பாடிய பல பாடல்கள் இன்றளவும் சில கிளாசிக் பாடல்களாக வலம் வருகின்றன.

தனது கொள்கை சுயமரியாதை என்பதை வெளிப்படையாக சொன்ன கலைஞனாக திகழ்ந்த இவர், அதை தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றி மெய்பித்தும் காட்டினார். இதன் காரணமாகவே இவருக்கு பம்மல் சம்மந்த முதலியரால் கலைவாணர் என்ற பட்டம் கிடைத்தது. தமிழ் சினிமா பேசும்படமாக உருமாறிய காலகட்டத்தில் உரையாடல்கள் வழியே மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவராக திகழ்ந்த என்.எஸ். கிருஷ்ணன் 116வது பிறந்தநாள் இன்று.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி