HBD MKT: தமிழ் சினிமா கண்ட சூப்பர் ஸ்டார்..வரலாறு படைத்த பாகவதர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Mkt: தமிழ் சினிமா கண்ட சூப்பர் ஸ்டார்..வரலாறு படைத்த பாகவதர்!

HBD MKT: தமிழ் சினிமா கண்ட சூப்பர் ஸ்டார்..வரலாறு படைத்த பாகவதர்!

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 01, 2024 06:00 AM IST

எம். கே. தியாகராஜ பாகவதரின் 114 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

தியாகராஜ பாகவதர் பிறந்த நாள்
தியாகராஜ பாகவதர் பிறந்த நாள்

படிப்பில் நாட்டம் இல்லாத தியாகராஜ பாகவதர் நாடகம் நடைபெறும் இடங்களை தேடிச்சென்றார். 1926ம் ஆண்டு பொன்மலையில் நடந்த பவளக்கொடி நாகத்தில் அர்ஜூனன் வேடத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பின் நாட்களில் தன் கந்தர்வக் குரலால் தமிழகத்தின் நாடக மேடைகளை தன் வசப்படுத்தினார். தமிழ் திரைப்படத்துறையில் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதா நாயகன் ஆவார். மேலும் கர்நாடக தமிழ் பாடகரும் ஆவார்.

கடந்த 1934ம் ஆண்டில் பவளக்கொடி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் சுமார் 15 தமிழ்த்திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 6 படங்கள் அன்றைய நாட்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

வசூலை வாரி தந்த திரைப்படங்கள்

 

1934ல் பவளக்கொடி நாடகத்தை திரைப்படமாக எடுத்த போது தியாகராஜன் கதாநாயகனாக நடித்தார். சாரங்கதாரா (1936), சத்தியசீலன்(1936), சிந்தாமணி(1937), அம்பிகாபதி (1937), திருநீலகண்டர் (1939), அசோக்குமார் (1941), சிவகவி (1943),என அனைத்து படங்களும் மாதக்கணக்கில் ஓடி வசூலை குவித்தது.

3 தீபாவளி கண்ட ஹரிதாஸ்

 

குறிப்பாக 1944ல் வெளியான ஹரிதாஸ் திரைப்படம் 3 ஆண்டுகள் சென்னையில் உள்ள பிராட்வே திரையரங்கில் ஓடியது. குறிப்பாக 3 ஆண்டு தீபாவளியை கண்ட ஒரே இந்திய திரைப்படம் என்ற சாதனையை அன்றைய நாட்களில் பெற்றது.

லட்சுமிகாந்தன் கொலை வழக்கும் பின்னடைவும்

 

தமிழகத்தின் இசை மாமேதையாகக் கருதப்பட்ட புதுக்கோட்டை தெட்சிணாமூர்த்தி பிள்ளை இவருக்கு பாகவதர் என்னும் பட்டத்தைச் சூட்டினார். தமிழ்த் திரையுலகின் முதல் உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்து பெற்ற தியாகராஜ பாகவதருக்கு , 1944 நவம்பர் 7-ம் தேதி நடைபெற்ற லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதில் கிட்டத்தட்ட 30 மாதங்களை சிறையில் கழித்தார். பின் தியாகராஜ பாகவதர், லண்டன் பிரிவு கவுன்சிலில் முறையீடு செய்து, தன்னைக் குற்றமற்றவர் என நிரூபித்து விடுதலையானார். அதற்குப் பின் அவர் மீண்டும் திரைப்படங்களில் நடித்தாலும், அவை பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

எம்.ஆர்.ராதா உதவி

 

இதனால் நடிப்புத் தொழிலைக் கைவிட்டு சென்னையிலிருந்து மீண்டும் திருச்சிக்குத் திரும்பினார். அதன்பின் வறுமையின் உச்சிக்குச் சென்ற தியாகராஜ பாகவதர், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை பொது மருத்துவமனையில் 1959-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி இறந்தார். தமிழ் திரையுலகில் அன்றைய புகழின் உச்சத்திலிருந்த நடிகர் எம்.ஆர்.ராதா உதவியுடன் அவரது உடல் திருச்சிக்குக் கொண்டு வரப்பட்டு, சங்கிலியாண்டபுரத்திலுள்ள சுடுகாட்டில் தந்தை, தாயாரின் உடலுக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டடது குறிப்பிடத்தக்கது.

எம். கே. தியாகராஜ பாகவதரின் 114 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. எப்போதும் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் இவர் என்ற வரலாறை யாராலும் தகர்க்க முடியாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.