தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அதிக டேக் போகும்.. உபேந்திரா சாரின் அந்த குணம் என வியந்த யு.ஐ. நடிகை ரேஷ்மா.. ஹீரோயினை கலாய்த்த உபேந்திரா

அதிக டேக் போகும்.. உபேந்திரா சாரின் அந்த குணம் என வியந்த யு.ஐ. நடிகை ரேஷ்மா.. ஹீரோயினை கலாய்த்த உபேந்திரா

Marimuthu M HT Tamil

Dec 22, 2024, 11:43 AM IST

google News
அதிக டேக் போகும்.. உபேந்திரா சாரின் அந்த குணம் என வியந்த யு.ஐ. நடிகை ரேஷ்மா.. ஹீரோயினை கலாய்த்த உபேந்திரா
அதிக டேக் போகும்.. உபேந்திரா சாரின் அந்த குணம் என வியந்த யு.ஐ. நடிகை ரேஷ்மா.. ஹீரோயினை கலாய்த்த உபேந்திரா

அதிக டேக் போகும்.. உபேந்திரா சாரின் அந்த குணம் என வியந்த யு.ஐ. நடிகை ரேஷ்மா.. ஹீரோயினை கலாய்த்த உபேந்திரா

யு.ஐ. திரைப்படத்தின் ஹீரோ உபேந்திராவும், நடிகை ரேஷ்மாவும் பிஹைண்ட்வுட்ஸ்-க்கு அளித்த பேட்டியின் தொகுப்பினைக் காணலாம்.

ரேஷ்மா உபேந்திரா சார் படத்தில் நடிக்குறீங்க. எப்படி ஃபீல் செய்றீங்க?

பதில்: இது பான் இந்தியப் படம் மட்டுமல்ல, இது பான் வெர்ல்டு திரைப்படம். உபேந்திரா சார் ரொம்ப எளிமையானவர். அவர் வந்து என்னை எப்போதும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார். எல்லோரும் யு.ஐ. படத்துக்காக காத்திருந்தாங்க. ரொம்ப வருஷத்துக்குப் பின், உபேந்திரா சார் டைரக்‌ஷனுக்குத் திரும்பி இருக்கிறார்.

எல்லா இடத்திலும் உபேந்திரா சாரின் ரசிகர்கள், எப்போது டைரக்‌ஷனுக்கு வருவார் என்று கேள்விகேட்டபார்கள்.

உபேந்திரா சார் சூட்டிங் ஸ்பாட்டில் எப்படி இருப்பார்? (ரேஷ்மாவிடம் கேட்டது)

பதில்: உபேந்திரா சார் மிக மென்மையானவர். அவர் பெரிய டைரக்டர். எனக்கு ஒவ்வொரு காட்சியிலும் சார் எப்படி ரியாக்‌ஷன் எதிர்பார்க்குறாங்கனு எனக்குத் தெரியாது. சில நேரங்களில் அதிக டேக் எடுப்பேன். சார் ரொம்ப பொறுமையாக அமைதியாக சொல்லித்தருவார். பல தடவை கேட்டாலும் சீன் குறித்து விவரிப்பார்.

110 நாட்களில் டைரக்‌ஷன், ஆக்‌ஷன் எல்லாம் செய்திட்டு கதாநாயகிக்கு சொல்லிக்கொடுக்கும்போது நிச்சயம் கோபம் வரும். அதை எப்படி கையாண்டீங்க? (உபேந்திராவிடம் கேட்டது)

பதில்: இவ்வளவு அழகான திறமையான ஆர்ட்டிஸ்ட் வந்தால், எப்படியிருந்தால் சொல்லித்தரலாம். டேக்கே இல்லை, நாங்கள் வேணும்னா இன்னொன்னு கேட்கணும். அவ்வளவு தான். அவ்வளவு திறமையான நடிகை ரேஷ்மா. நிஜமாகவே. அவங்க டான்ஸரும் கூட.

யு.ஐ படம் குறித்து நீங்கள் என்ன சார் சொல்றீங்க? (உபேந்திராவிடம் கேட்டது)

இந்தப் படம் என்னடா இப்படி இருக்குன்னு தோணும். அதற்கெல்லாம், ஒரு விவரிப்பு படத்தில் இருக்கும். எல்லாத்திலேயும் ஒரு உவமை இருக்கும். படத்தில் நிறைய லேயர்கள் இருக்கும். நார்மலாக பார்த்தால் நார்மலாக இருக்கும். அரசியலாகப் பார்த்தால் அரசியலாக இருக்கும். சமூகம் சார்ந்து பார்த்தால், இப்படம் சமூகம் சார்ந்ததாக இருக்கும். தத்துவம் சார்ந்து பார்த்தால், தத்துவமாகவும் இருக்கும்.

உங்களுடைய ஃபேவரைட் ஃபுட் என்ன? (உபேந்திராவிடம் கேட்டது)

பசி இருக்கும்போது என்ன கொடுத்தாலும் நான் ரொம்ப என்ஜாய் செய்து சாப்பிடுவேன்.

எப்படி உடம்ப ஒரே மாதிரி வைச்சுக்குறீங்க? (உபேந்திராவிடம் கேட்டது)

ஜிம் போவேன். அந்த மாதிரி சில விசயங்கள் எல்லாம் இருக்கும். டைரக்டராக இருந்தால் மூளை அதை டாமினேட் செய்யும்.

புனீத் ராஜ்குமார் பத்தி சொல்லுங்க? (உபேந்திராவிடம் கேட்டது)

ஒரு வொர்க் செய்யும்போது ராஜ்குமார் சார், பார்வதி அம்மாள் அவர்களிடம் டிஸ்கஸ் செய்றேன். அப்போதே காலேஜ் போகுற பையன் புனீத் ராஜ்குமார். அப்போதே, துருதுருன்னு இருப்பார். புனீத்துடைய டான்ஸ் எல்லாம் பார்த்து இருக்கீங்கல்ல, அப்படி ஆடுவார். அவர் சின்ன வயசிலேயே தேசிய விருது வாங்கினவர்.

உங்களுடைய ஃபேவரைட் டைரக்டர் யார்? (உபேந்திராவிடம் கேட்டது)

புட்டண்ண கனகாவில் இருந்து இருக்கு லிஸ்ட். காஸி நாத் சார் அவங்க எல்லோரும்

யு.ஐ. படத்தில் மியூஸிக் பத்தி சொல்லுங்க? (உபேந்திராவிடம் கேட்டது)

அஜ்னீஷ் லோக்நாத் சார் நல்லா செய்திருக்காங்க. பான் இந்திய மியூஸிக் டைரக்டர். எல்லா மொழியிலும் பிஸியாக இருக்கிறார். எங்களோடு உட்கார்ந்து கரெக்‌ஷன் கேட்டு கோப்ரேஷன் செய்து பண்ணிக்கொடுத்தாங்க. நல்லா ஆடுற மாதிரி இருந்தது.

நன்றி: பிஹைண்ட்வுட்ஸ் யூட்யூப்

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி