தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Shiva Rajkumar And Rishab Shetty And Others Remember Puneeth Rajkumar

Puneeth Rajkumar: ‘மக்கள் உங்களில் கடவுளைக் காண்கிறார்கள்' - தம்பி புனீத்தின் பிறந்தநாளில் கரைந்த சிவராஜ்குமார்!

Marimuthu M HT Tamil
Mar 17, 2024 06:21 PM IST

புனீத் ராஜ்குமாரின் 49-வது பிறந்த நாளை ஒட்டி, கன்னட திரையுலகினர் பலரும் உருக்கமாக வாழ்த்துப் பதிவினை வெளியிட்டுள்ளனர்.

இன்று உயிருடன் இருந்திருந்தால் புனீத்துக்கு 49 வயது - தழுதழுத்த பிரபலங்கள்!
இன்று உயிருடன் இருந்திருந்தால் புனீத்துக்கு 49 வயது - தழுதழுத்த பிரபலங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

1975ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி லோஹித் என்னும் இயற்பெயரில் சென்னை மாநகரில் பிறந்தவர், நடிகர் புனீத் ராஜ்குமார். இவர் அக்டோபர் 21, 2021அன்று மாரடைப்புக் காரணமாக இறந்தார். புனீத், நடிகரும் அரசியல்வாதியுமான டாக்டர் ராஜ்குமார் மற்றும் பர்வதம்மாவின் ஐந்தாவது மற்றும் இளைய மகன் ஆவார். இவர் 1999ஆம் ஆண்டு அஸ்வினி ரேவ்நாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1976ஆம் ஆண்டில் ஆறு மாத குழந்தையாக இருந்தபோது ‘’பிரேமதா கனிகே'' என்ற படத்தில் நடித்தார். 

2002ஆம் ஆண்டில், பூரி ஜெகன்நாத் இயக்கிய ‘’அப்பு'' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அவரது கடைசி படமான, ‘’கந்தடா குடி'' 2022ஆம் ஆண்டு, அவரது மரணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டது.

தனது சகோதரர் குறித்து சிவ ராஜ்குமார் உருக்கமாக எழுதியது:-

சிவ ராஜ்குமார், தனது சகோதரர் புனீத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, கன்னடத்தில் ஒரு உணர்ச்சிகரமான குறிப்பை எழுதியதை நினைவு கூர்ந்தார். அதில், "ஹேப்பி பர்த்டே அப்பு" என்று பதிவிட்டுள்ளார். அவர் எழுதிய குறிப்பில், "தம்பி, நீங்கள் எங்கள் வாழ்வில் பரிசாக வந்து அனைவரின் இதயங்களிலும் புனீத் ஆனீர்கள். மக்கள் உங்களில் கடவுளைக் காண்கிறார்கள். நீங்கள் பலருக்கு வழிகாட்டியாக இருக்கிறீர்கள். அவர்களின் அன்பான தெய்வம், மில்லியன் கணக்கானவர்களால் நேசிக்கப்படும் சக்தி நட்சத்திரம் நீங்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை, நீங்கள் எப்போதும் என் சிறிய சகோதரர். என் கையைப் பிடித்தபடி நடந்த என் தோழன், என் மகிழ்ச்சியை உன் புன்னகையில் கண்டேன், என் ஆறுதல் என் மார்பில் கிடந்தது. நீங்கள் ஒரு ராஜாவைப் போல என்றென்றும் என் இதயத்தில் வாழ்கிறீர்கள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பு’’ என்று பதிவிட்டுள்ளார்.

புனீத்தின் மனைவி அஸ்வினியும் இன்ஸ்டாகிராமில், "அப்புவின் பிறந்தநாள் நினைவேந்தல்.. என்றென்றும் எங்கள் இதயங்களில் அவர் வாழ்கிறார்’’ என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். 

கன்னட நடிகரான ரக்ஷித் புனீத்தை நினைவு கூர்ந்து ஒரு பதிவை எழுதினார், "என் அன்பான அப்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். கன்னட சினிமாவுக்கு அவரது நிகரற்ற பங்களிப்பு இருந்திருக்கிறது. எங்கள் அன்புக்குரிய அப்பு சாரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன். அவரது பாரம்பரியம் வாழட்டும்’’ என்றார். 

புனீத்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய காந்தாரா படப்புகழ், ரிஷப் ஷெட்டி கூறுகையில், "நம் அனைவரின் இதயங்களிலும் எப்போதும் உறையும் பரமாத்மாவாக, சிரித்த முகம் கொண்டவராக இருந்தார், கர்நாடக ரத்னா டாக்டர். புனீத் ராஜ்குமார் சாரின் நினைவாக" என்று எழுதியிருந்தார். மேலும், கன்னட நடிகர் தனஞ்செயா எழுதினார், "அன்பான பவர் ஸ்டார் அப்புவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. உங்கள் சிறப்பு நாளில் அன்புடனும் நன்றியுடனும் உங்களை நினைவு கூர்கிறேன்’’என்றார். 

அனைவரின் முகத்திலும் புன்னகையை வரவழைக்கும் நாள் இது என்று கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சுதீப் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளதாவது, " அப்பு புனீத் ராஜ்குமாரின் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் இன்று ஒரு நல்ல நாள். இந்த நாள் அனைவரின் முகத்திலும் புன்னகையைக் கொண்டு வரட்டும். நீங்கள் எப்போதும் என் நண்பர் புனீத் ராஜ்குமாரை மிஸ் செய்வீர்கள். அனைவருக்கும் இனிய மார்ச் 17 வாழ்த்துகள்" என உற்சாகப் பதிவிட்டுள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்