விஜய் மீது சீமானுக்கு ஒரு சாஃப்ட் கார்னர்.. புனீத் மீதான கன்னட மக்களின் அன்பு.. பத்திரிகையாளர் சங்கர்
- விஜய் மீது சீமானுக்கு ஒரு சாஃப்ட் கார்னர்.. புனீத் மீதான கன்னட மக்களின் அன்பு பற்றி பத்திரிகையாளர் சங்கர் பேசிய பேச்சைக் காணலாம்.
- விஜய் மீது சீமானுக்கு ஒரு சாஃப்ட் கார்னர்.. புனீத் மீதான கன்னட மக்களின் அன்பு பற்றி பத்திரிகையாளர் சங்கர் பேசிய பேச்சைக் காணலாம்.
(1 / 6)
விஜய் மீது சீமானுக்கு ஒரு சாஃப்ட் கார்னர் உள்ளது எனவும், புனீத் மீதான கன்னட மக்களின் அன்பு பற்றியும் பத்திரிகையாளர் சங்கர் பேட்டியளித்துள்ளார்.
(2 / 6)
இதுதொடர்பாக ஆகாயம் சினிமாஸ் யூட்யூப் சேனலுக்கு பத்திரிகையாளர் சங்கர் அளித்த பேட்டியில், ‘’விகடன் சமீபத்தில் வெளியிட்ட எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவே ஒரு செட் அப். முதலில் இந்தப் புத்தகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட, அதை ராகுல் காந்தி பெற்றுக்கொள்ள, திருமா அதில் பங்கேற்பதாக தான் இருந்தது. முதலில் முதலமைச்சர் ஸ்டாலின் அதில் கலந்துக்க முடியல. அடுத்து ராகுல் காந்திக்கும் பங்கேற்க முடியாத நிலை. அதன்பின், விகடன் விஜயை நோக்கிப் பயணித்ததால் திருமாவளவன் திட்டமிட்டே அந்த நிகழ்வைத் தவிர்த்திட்டார்.அப்படி விகடன் விஜய்க்கு மேடை அமைச்சு கொடுத்தது. த.வெ.க முதல் மாநாட்டுக்குப் பின், விஜயை யாரும் எங்கும் பேச அழைக்கவில்லை. அதனால், விஜய் விகடன் மேடைக்கு வந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின், விஜய் அரசியலில் ஆழமான புரிதல் இல்லாத நபர் என்ற பார்வை வந்திடுச்சு எல்லாருக்கும். அந்தப் புத்தகத்தை முழுமையாக படிச்சிருந்தால் விஜய், அம்பேத்கரை பற்றி நன்கு பேசியிருக்கமுடியும். மட்டமான கூட்டணி அரசியலை மட்டும் பேசிட்டுப்போயிட்டாங்க. உண்மையிலேயே அம்பேத்கர் பற்றி நினைத்திருந்தால், அவரைப் பற்றி நிறைய பேசியிருக்கலாம். கூட்டணியை உடைக்கிறதுக்கா கட்சி ஆரம்பிச்சிருக்கீங்க''.
(3 / 6)
‘’மனிதர்களிடம் இந்த நிகழ்ச்சி கேலிக்கூத்தாகத்தான் மாறியிருக்கு. விஜய் அம்பேத்கரை இப்போதுதான் படிக்க ஆரம்பிச்சிருக்கார். இல்லையென்றால், நீதிபதி சந்துருவின் பேச்சை அடியொற்றியாவது பேசியிருக்கலாம். அதையெல்லாம் விட்டுட்டு கூட்டணியைப் பற்றி விஜய் பேசியிருக்கக் கூடாது''.(PTI)
(4 / 6)
'இந்த மாதிரி எந்த ஒரு நடிகரும் செய்ததில்லை. இவ்விவகாரத்தில் சீமான் பாராட்டிய நிலையில், அவர் விஜய்யோடு சுமுகமாகப் பயணிக்கும் நிலைக்கு வந்துவிட்டார் என்பதே தெரியுது.விஜய்யுடைய அரசியலில் எதுவும் பாஸிட்டிவ் ஆக தெரியவில்லை. ஏனென்றால், அவர் இன்னும் வெளிப்படையாக வரவில்லை.கட்சி மாநாட்டுக்குப் பின் கிடைத்த மேடையை அவர் முழுமையாகப் பயன்படுத்தவில்லை. அதை பிரஸ் மீட் வைச்சு பேசியிருக்கலாம். அதுதான் பொதுவான மக்களுக்கு கோபம்'.(PTI)
(5 / 6)
‘’அடுத்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரை பொறுத்தவரை மிகவும் நல்லவர். தனது சொத்துக்களை மக்களுக்கு எழுதி வைத்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. அவரது தம்பி புனீத் ராஜ்குமார்னு சொன்னாலே கண்கலங்கி நிற்கும் ரசிகர்களைப் பார்க்கமுடியும். நான் ஒருமுறை பெங்களூரு போயிருந்தபோது, ஒரு உணவகத்தில் இருக்கும் நபர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். அப்போது அங்கு கன்னடா பேசும் நபர், புனீத் ராஜ்குமார் சமாதியைப் போய் பார்த்திட்டு போகச் சொல்கிறார். இதை அவர் ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறார்.அதற்குக் காரணம் என்னவென்றால், கன்னட மக்களுக்கே அவர் தனது சொத்தை எழுதிவைச்சிட்டார்.''(PTI)
(6 / 6)
‘’சீமானுக்கு விஜய் மீது ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு. சீமான் சொன்ன மாதிரி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை நேரில் போய் விஜய் பார்த்திருக்கலாம். ஏனென்றால், நிறைய மக்களுக்கு விஜய் நம்மைப் பார்க்க இவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்காரே என்ற ஆறுதல் கிடைத்திருக்கும். இவ்வளவு பெரிய ஆள் வந்திருக்காரே என்ற உணர்வு, நீங்கள் கொடுக்கும் பல்லாயிரக்கணக்கான பொருட்களைவிட பெரியது.முதலமைச்சரோ, துணைமுதலமைச்சரோ மக்களைத் தேடிப்போய் நிற்கக் காரணம் என்னவென்றால் அப்படி இருந்தால் தான், மக்களின் இணக்கத்தை அவர்கள் பெறமுடியும். வீட்டில் அழைத்து நிவாரணப்பொருட்களை வழங்கியது என்பது எனக்குத்தெரிந்து தமிழ்நாட்டு அரசியலில் இப்போதுதான் நான் பார்க்கிறேன்''.(PTI)
மற்ற கேலரிக்கள்