Reshma pasupuleti: அசிங்கமான கமெண்டுகள்…பாதியில் கைவிட்ட ஜிம் பாடி கணவர்.. - ரேஷ்மா காதல் கதை!
பாக்கியலட்சுமி ரேஷ்மா தன்னுடைய காதல் கதையை பகிர்ந்து இருக்கிறார்
(1 / 5)
"என்னுடைய மகனுக்கு தமிழ் தெரியாது; ஆங்கிலமும் தெரியாது. முழுக்க முழுக்க ஒரு அமெரிக்கன் போல வாழ்கிறான். இங்கு இருந்தாலும், ஆன்லைனில் அமெரிக்காவில் உள்ள பள்ளியில் தான் படிக்கிறான். அவனுக்கு வெளி உலகம் தெரியாது. அவனை மிகவும் பொத்தி பொத்தி வளர்த்து வருகிறேன். என்னுடைய முன்னாள் கணவர் மிகவும் உயரமானவர். பயங்கரமாக ஒரு பாடி பில்டர் போல இருப்பார். அதனால்தான் என்முடைய மகன் இப்படி வளர்த்தியாக இருக்கிறான்.
(2 / 5)
எல்லோரும் என்னிடம் உங்களுக்கு இவ்ளோ பெரிய பையன் இருக்கிறாரா? என்று கேட்கிறார்கள். அப்படி இல்லை; அவனுக்கு கிட்டத்தட்ட 13 வயது தான் ஆகிறது. எங்களுக்குள் விவாகரத்து நடந்த பின்னரும் அவர் ஈகோ பார்க்காமல் என்னுடைய கேரியருக்கு அவர் வாழ்த்துக்கள் சொன்னார். நிறைய தவறு செய்து விட்டேன். ரேஷ்மா மகனை கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார். அதில் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்று அவர் சொல்லியிருக்கிறார்.
(3 / 5)
நானும் அவரும் மிகவும் சிறிய வயதில் திருமணம் செய்து கொண்டோம். சமூகத்தில் ஒரு தம்பதி விவகாரத்து செய்து பிரிந்தால் இந்த சமூகம் அந்தப் பெண் தான் ஏதாவது செய்திருப்பாள். இப்படி எல்லாம் இருந்தால் இப்படித்தான் நடக்கும் என்றெல்லாம் சொல்வார்கள். ஒருவேளை தவறு ஆண் பக்கம் இருந்தால் கூட அதை யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
(4 / 5)
என்னுடைய குடும்பத்தில் எல்லோருக்கும் தெரியும் என் மீது அதில் தவறு இல்லை என்று. அப்பாவியாகத்தான் நான் இருந்தேன் என்று அவர்களுக்கு தெரியும். அதை நான் ஒவ்வொருத்தருக்கும் சொல்ல முடியாது. இது நிறைய பேருக்கு நடக்கிறது. என்னுடன் வேலை பார்க்கக்கூடிய பலருக்கு இது போன்ற விவகாரத்து பிரச்சினைகள் நடக்கின்றன. அவர்கள் வீட்டில் பெண்கள் மேலேயே குற்றத்தை சுமத்துகிறார்கள்.
(5 / 5)
குழந்தை பிறந்த பின்னர் ,உங்களுக்கெல்லாம் மீடியா எதற்கு என்கிறார்கள். அவர்கள் யார் சொன்னாலும் கேட்டபாடில்லைஇப்போது நானும் கணவரும் ஒருவருக்கொருவர் மன்னித்துக் கொண்டோம். இப்போது என்னை இன்னொரு திருமணம் செய்து கொள் என்று அவர் சொல்லி இருக்கிறார் அப்படி சொல்வதற்கு கூட அவர் மனம் வேண்டும்.” என்றார்நன்றி: கலாட்டா!
மற்ற கேலரிக்கள்