தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  செட்டில்மெண்ட் எல்லாம் முடிந்தது.. விரும்பியபடி வாழ்வேன்! மனைவியிடம் விவாகரத்து பெற்றதை அறிவித்த சீரியல் நடிகர்

செட்டில்மெண்ட் எல்லாம் முடிந்தது.. விரும்பியபடி வாழ்வேன்! மனைவியிடம் விவாகரத்து பெற்றதை அறிவித்த சீரியல் நடிகர்

Dec 22, 2024, 09:40 PM IST

google News
செட்டில்மெண்ட் எல்லாம் முடிவடைந்துவிட்டது. ஐந்து ஆண்டு போராட்டமான சோதனையான காலகட்டத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டேன். எங்கள் முடிவுக்கு மதிப்பளிக்க அனைவரையும் வேண்டுகிறேன் என மனைவியிடம் விவாகரத்து பெற்றது குறித்து டிவி நடிகர் ஈஸ்வர் தெரிவித்துள்ளார்.
செட்டில்மெண்ட் எல்லாம் முடிவடைந்துவிட்டது. ஐந்து ஆண்டு போராட்டமான சோதனையான காலகட்டத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டேன். எங்கள் முடிவுக்கு மதிப்பளிக்க அனைவரையும் வேண்டுகிறேன் என மனைவியிடம் விவாகரத்து பெற்றது குறித்து டிவி நடிகர் ஈஸ்வர் தெரிவித்துள்ளார்.

செட்டில்மெண்ட் எல்லாம் முடிவடைந்துவிட்டது. ஐந்து ஆண்டு போராட்டமான சோதனையான காலகட்டத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டேன். எங்கள் முடிவுக்கு மதிப்பளிக்க அனைவரையும் வேண்டுகிறேன் என மனைவியிடம் விவாகரத்து பெற்றது குறித்து டிவி நடிகர் ஈஸ்வர் தெரிவித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் ஈஸ்வர் ரகுநாதன். சீரியல் நடிகையான மகாலட்சுமியுடன் நெருங்கி பழகி வருவதாக, நடிகர் ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீ குற்றச்சாட்டு முன் வைத்தார்.

இதையடுத்து ஜெயஸ்ரீயின் குற்றச்சாட்டில் உண்மையில்லை எனவும், தானும், மகாலட்சுமியும் நண்பர்களாக பழகி வருவதாகவும் ஈஸ்வர் தெரிவித்தார். இதற்கிடையே இந்த சம்பவம் இருவருக்கும் இடையே பிரச்னையை ஏற்படுத்திய நிலையில் மனைவி ஜெயஸ்ரீ விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தார்.

விருப்பப்படி வாழ்க்கையை வாழ உள்ளேன்

ஜெயஸ்ரீயை விவாகரத்து செய்ய சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் நடிகர் ஈஸ்வர். இந்த விவாகரத்து வழக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக ஜெயஸ்ரீயிடமிருந்து விவாகரத்து பெற்றதாக நடிகர் ஈஸ்வர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த பதிவில், "எனக்கு ஆதரவாக இருந்த நண்பர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துக்கொள்கிறேன். ஜெயஸ்ரீக்கும் எனக்கும் இடையேயான செட்டில்மெண்ட் எல்லாம் முடிவடைந்துவிட்டது. இனி என் விருப்பப்படி எனது வாழ்க்கையை வாழ உள்ளேன். நடிப்பதில் மட்டும் அதிக கவனம் செலுத்த போகிறேன். இந்த சவாலான காலகட்டத்தில் எனக்கு பக்கபலமாக இருந்த கடவுளுக்கு நன்றிகள்.

வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தில் நுழைந்திருக்கும் நான் நடிப்பு மீது ஆர்வத்தை செலுத்தி அது பற்றிய அப்டேட்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க்கையில் சந்தித்து பின்னடைவுகளில் இருந்து மீண்டு கம்பேக் கொடுப்பேன். பாஸிடிவான மனநிலையில் புதிய பயணத்தை அரவணைத்துகொள்ளவுள்ளன்

இந்த விவாகரத்து தொடர்பாக எந்த ஒரு பேட்டியும் அளிக்க மாட்டேன். ஐந்து ஆண்டு போராட்டமான சோதனையான காலகட்டத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டேன். எங்கள் முடிவுக்கு மதிப்பளிக்க அனைவரையும் வேண்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

ஜெயஸ்ரீ போலீசில் புகார்

முன்னதாக, மகாலட்சுமியுடனான உறவு கூறிய பேசியதற்காக ஈஸ்வர் தன்னை துன்புறுத்தியதாக ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கடந்த 2019ஆம் ஆண்டில் நடிகர் ஈஸ்வர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த பிறகு தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்த ஈஸ்வர், ஜெயஸ்ரீயை விவாகரத்து செய்யபோவது பற்றியும் தெரிவித்தார். தற்போது நீண்ட கால போராட்டத்துக்கு பின் மனைவியை பிரிந்துவிட்டதாக ரசிகர்களிடம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

திருமதி ஆன மகாலட்சுமி

சன் மியூசிக் சேனலில் ஆங்கராக இருந்து வந்த மகாலட்சுமி பின்னர் சன்டிவியில் ஒளிபரப்பான அரசி சீரியலில் பிரபலமானார். இவர் அனில் நெரிடிமில்லி என்பவரை திருமணம் செய்து 2019இல் பிரிந்தார். இதன் பின்னர் கடந்த 2022இல் ஃபேட்மேன் என்று அழைக்கப்படும் பிரபல சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரனை திருமணம் செய்து கொண்டார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் மகாலட்சுமிக்கு ஒரு மகன் உள்ளார்.

முன்னதாக, ஈஸ்வருடன் இணைத்து தன்னை பற்றி பல்வேறு செய்திகளும், வதந்திகளும் வெளியானதற்கு, எங்கள் இருவருக்கும் எந்த ஒரு தப்பான உறவு இல்லை என்று விளக்கமான விடியோ ஒன்றை வெளியிட்டு அந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மகாலட்சுமி. தற்போது மகாலட்சுமி பிஸியாக பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி