திருமணத்துக்கு பின் டாக்டராக கம்பேக்.. முதல் முறையாக த்ரில்லர் வெப்சீரிஸில் நடிகை மேகா ஆகாஷ்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  திருமணத்துக்கு பின் டாக்டராக கம்பேக்.. முதல் முறையாக த்ரில்லர் வெப்சீரிஸில் நடிகை மேகா ஆகாஷ்

திருமணத்துக்கு பின் டாக்டராக கம்பேக்.. முதல் முறையாக த்ரில்லர் வெப்சீரிஸில் நடிகை மேகா ஆகாஷ்

Dec 21, 2024 09:42 AM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 21, 2024 09:42 AM , IST

  • Megha Akash: தமிழ்நாட்டை சேர்ந்த நடிகையான மேகா ஆகாஷ், கடந்த செப்டம்பரில் தனது நீண்ட நாள் காதலன் சாய் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டார். தற்போது திருமணத்துக்கு பின் வெப்சீரிஸ் மூலம் நடிப்புக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் மகனான சாய் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்ட மேகா ஆகாஷ், தற்போது முதல் முறை வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். தெலுங்கில் உருவாகியிருக்கும் விகடகவி என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

(1 / 6)

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் மகனான சாய் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்ட மேகா ஆகாஷ், தற்போது முதல் முறை வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். தெலுங்கில் உருவாகியிருக்கும் விகடகவி என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

ஜீ தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த வெப்சீரிஸில் மேகா ஆகாஷ் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1970களில் நடக்கும் த்ரில்லர் கதையாக விகடகவி சீரிஸ் அமைந்துள்ளது. இந்த தொடர் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது

(2 / 6)

ஜீ தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த வெப்சீரிஸில் மேகா ஆகாஷ் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1970களில் நடக்கும் த்ரில்லர் கதையாக விகடகவி சீரிஸ் அமைந்துள்ளது. இந்த தொடர் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது(meghaakash/instagram)

கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி தனது காதலன் சாய் விஷ்ணுவை மணமுடித்தார் மேகா ஆகாஷ். இதன் பின்னர் ஹனிமூனுக்கு வெளிநாடு சென்றிருந்த அவர் அதன் புகைப்படங்களை பகிர்ந்தார். திருமணத்துக்கு பின் எந்த படத்திலும் கமிட்டாகமல் இருந்து வந்த மேகா ஆகாஷ் தற்போது இந்த வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

(3 / 6)

கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி தனது காதலன் சாய் விஷ்ணுவை மணமுடித்தார் மேகா ஆகாஷ். இதன் பின்னர் ஹனிமூனுக்கு வெளிநாடு சென்றிருந்த அவர் அதன் புகைப்படங்களை பகிர்ந்தார். திருமணத்துக்கு பின் எந்த படத்திலும் கமிட்டாகமல் இருந்து வந்த மேகா ஆகாஷ் தற்போது இந்த வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்(meghaakash/instagram)

சென்னையில் பிறந்த மேகா ஆகாஷ், தமிழில் காளிதாஸ் ஜெயராம் ஜோடியாக ஒரு பக்க கதை என்ற படத்தில் கமிட்டாகி ஹீரோயின் ஆனார். ஆனால் இவரது நடிப்பில் லை என்ற தெலுங்கு படம்தான் முதலில் வெளியானது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நிதின் ஜோடியாக நடித்திருந்தார்

(4 / 6)

சென்னையில் பிறந்த மேகா ஆகாஷ், தமிழில் காளிதாஸ் ஜெயராம் ஜோடியாக ஒரு பக்க கதை என்ற படத்தில் கமிட்டாகி ஹீரோயின் ஆனார். ஆனால் இவரது நடிப்பில் லை என்ற தெலுங்கு படம்தான் முதலில் வெளியானது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நிதின் ஜோடியாக நடித்திருந்தார்(meghaakash/instagram)

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் அவரது வளர்ப்பு மகள் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் மேகா ஆகாஷ். அத்துடன் சிம்புவுடன் இணைந்து வந்த ராஜாவாத்தான் வருவேன் என்று படத்திலும் நடித்துள்ளார்

(5 / 6)

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் அவரது வளர்ப்பு மகள் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் மேகா ஆகாஷ். அத்துடன் சிம்புவுடன் இணைந்து வந்த ராஜாவாத்தான் வருவேன் என்று படத்திலும் நடித்துள்ளார்(meghaakash/instagram)

தமிழில் ஒரு சான்ஸ் குடு, தப்பு பண்ணிட்டேன் என்ற மியூசிக் விடியோக்களில் நடித்திருக்கும் மேகா ஆகாஷ், சிங்கிள் சங்கரணும் ஸ்மார்போன் சிம்ரனும் பாடல் ஒன்றையும் பாடி பாடகியாகவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்

(6 / 6)

தமிழில் ஒரு சான்ஸ் குடு, தப்பு பண்ணிட்டேன் என்ற மியூசிக் விடியோக்களில் நடித்திருக்கும் மேகா ஆகாஷ், சிங்கிள் சங்கரணும் ஸ்மார்போன் சிம்ரனும் பாடல் ஒன்றையும் பாடி பாடகியாகவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்(meghaakash/instagram)

மற்ற கேலரிக்கள்