‘சொன்னா கேளுங்க பிக்பாஸ் வேணாம்’ - ரவீந்தருக்கு நோ சொன்ன மகாலட்சுமி - காரணம் என்ன தெரியுமா? - அவரே கூறிய விளக்கம்!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் ரவீந்தர் நுழைவதற்கு மகாலட்சுமி நோ சொல்லி இருக்கிறார். அதற்கான காரணத்தை அவரே தற்போது கூறியிருக்கிறார்.

‘சொன்னா கேளுங்க பிக்பாஸ் வேணாம்’ - ரவீந்தருக்கு நோ சொன்ன மகாலட்சுமி - காரணம் என்ன தெரியுமா? - அவரே கூறிய விளக்கம்!
உலகளவில் அதிக பார்வையாளர்களை கொண்டு, மக்கள் விரும்பும் ரியாலிட்டி ஷோவாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி. சந்தோஷம், கோபம், நட்பு, காதல், நகைச்சுவை, கொண்டாட்டம், துரோகம், போட்டி என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். கடந்த 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்ள இருப்பதாக அறிவித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.