பிக்பாஸ் சீசன் 8-ல் கோபத்தை அதிகம் கட்டுப்படுத்துவது இவர் தான்.. இவர் டைட்டில் அடிக்கலாம்.. ரவீந்தர்
பிக்பாஸ் சீசன் 8-ல் கோபத்தை அதிகம் கட்டுப்படுத்துவது இவர் தான்.. இவர் டைட்டில் அடிக்கலாம்.. ரவீந்தர்
பிக்பாஸ் சீசன் 8-ல் கோபத்தை அதிகம் கட்டுப்படுத்துவது இவர் தான் என்றும்; இவர் எளிதில் டைட்டில் அடிக்கலாம் என்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ரவீந்தர் லிட்டில் டாக்ஸ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் தொகுப்பு இது?
’’உங்கள் எலிமினேஷனுக்கு என்ன காரணம் இருக்கும்ன்னு நினைக்குறீங்க?
பதில்: அக்கறை தான். அன்பு தான். வேறு எதுவுமே கிடையாது. நான் இந்த வாரத்தில் யாரை காப்பாத்துனங்க என்பதைப் பார்த்துட்டு, யாரை எலிமினேட் பண்ணுறாங்க என்பதைப் புரிஞ்சுகிட்டேன். பிக்பாஸ் சீசன் 8ல் காப்பாத்துனவங்க மேல் இருந்த அதிக அக்கறையை விட, இவரை சேவ் பண்ணிடனும்னு நினைச்சு ஓட்டுப்போடாமல்போன அக்கறையைத் தான் நான் பெரிதாகப் பார்க்கிறேன்.
உங்களுடைய பார்வையில் யார் ஸ்ட்ராங்க் பிளேயர் அப்படின்னு நினைக்குறீங்க?
பதில்: ஸ்ட்ராங்க் பிளேயர் என்றால், அவன் வந்த நோக்கத்தின் முனைப்போடு விளையாடுறான் அப்படின்னா, அது முத்துக்குமரன் தான்.
பிக்பாஸ் சீசன் 8-ல் விஜய் சேதுபதியின் தொகுப்பாளர் பணியை எப்படி பார்க்குறீர்கள்?
பதில்: பிக்பாஸ் ஏழு சீசன் கேள்விகளுக்கு, எட்டாவது சீசனில் ஒரு வாரத்தில் மக்கள் மனதில் இருந்த கேள்விகளைக் கேட்டு, பதிலை எங்கள் வாயில் இருந்தே வரவைச்சு, மக்களுக்கும் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்த ஃபேண்டாஸ்டிக் நபர். அடிச்ச அடி உள்ளுக்குள்ள பொறி கலங்கிடுச்சு. இரண்டாவது வாரத்தில் ஸ்மைலைக் கொண்டு வந்திட்டார். அப்பப்போ இதுவும் நடந்தால் நல்லாயிருக்கும். இல்லையென்றால் தாங்காது சார் பாடி.
பிக்பாஸ் சீசன் 8-ல் கோபத்தை அதிகம் கட்டுப்படுத்துவது யார்?
பதில்: ஆண்களில் பார்த்தீங்க என்றால் ரஞ்சித், அருண் எனச் சொல்லலாம். பெண்களில் பார்த்தீங்க என்றால் பவித்ரா என்று சொல்லலாம். அதாவது கன்ட்ரோல் அப்படி என்றால், அதை வெளியில் எமோட் பண்ணக்கூடாதுன்னு மெனக்கெடுறாங்க. சண்டைபோடும்போது எக்ஸ்பிரஸ்ஸிவ் ஆக இல்லாமல் இருந்தது அவங்க தான்.
பிக்பாஸ் சீசன் 8 வீட்டில் கற்றுக்கொண்டது என்ன?
பதில்: ஒழுக்கம் தான். இரண்டு விஷயத்தைக் கத்துக்கிட்டேன். ஒன்று விமர்சித்து ஈஸியாக விளையாடும் விஷயமில்லை அப்படிங்கிறதைப் புரிஞ்சுக்கிட்டேன். பிரச்னைகள் எழும்போது அதை எப்படி தீர்க்கிறாங்க அப்படின்னு பார்க்கும்போது, நாம இதுக்கு முன்னாடி பல விமர்சனங்களில் நான் இந்த ஷோவை பற்றி பேசுனது வேறு ஒரு நினைப்பில் பேசியிருக்கிறேன். சிலருக்கு சில வாய்ப்புகள் கிடைக்காது. நான் என்னுடைய பணிகளை நானே முழுமையாக செய்து கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு இந்த ஷோவில் கிடைச்சது. மேலும் என்னைப் பொறுத்தவரை நான் ரன்னிங் ரேஸ் ஓடியது கிடையாது, ஹை ஜம்ப் பண்ணுனது இல்லை. வாழ்க்கையில் ஜெயிக்கணும் என்றால் பிசினஸ் தான் அப்படின்னு இல்லை. பல தரப்பட்ட கலாசார மக்கள்கிட்ட வாழ்ந்து, என்ன நம்ம தனித்துவம் அப்படிங்கிறதை மக்கள்கிட்ட காட்டுறதும் இந்த விளையாட்டில் இருந்து கற்றுக்கொள்ளணும் என்று நினைக்கிறேன்.
இந்த வாரம் நீங்கள் எவிக்ட் ஆகவில்லையென்றால், யார் எலிமினேட் ஆகியிருப்பார்?
பதில்: இதை கிண்டலாக சொல்லல. என்னை நாமினேட் செய்த அந்த ஐந்து பேரையும் நினைப்பேன். மக்களுக்குத் தெரியும். செளந்தர்யா, அருண், ரஞ்சித் சார் யார் போயிருந்தாலும் அதற்குத் தகுதியானவர்கள் தான்.
பிபி ஹவுஸில் விளையாட்டைச் சரியாகக்கொண்டுபோவது யார்?
பதில்: பெண்களில் தர்ஷிகா, ஜாக்குலின், சுனிதா, பவித்ரா இவங்க நான்கு பேரும். ஆண்களில் விஷால், முத்துக்குமரன், தீபக் இவங்க மூன்று பேரும்ன்னு சொல்லலாம்.
யார் டைட்டில் வின்னுவாங்கன்னு நினைக்குறீங்க?
பதில்: யார் சரியாக விளையாண்டு, மக்கள் ஆதரவைப் பெறுறாங்களோ, அவங்க தான் ஜெயிப்பாங்க. பெரும்பாலும் பெண்ணுக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. முதல் நாள் நான் பார்த்த முத்துக்குமரனின் கேம் புரிதல், அணுகுமுறை இதெல்லாம் அவன் ஜெயிப்பான்னு தோணுது. இப்பப் பிரச்னை என்னவென்றால், அவனுடைய அணுகுமுறை தான். அது நாள் ஆக ஆக ஃபைன் டியூன் ஆனால், அவனை அடிச்சுக்கிறது ரொம்ப கஷ்டம்’’என்றார், ரவீந்தர்.
நன்றி: லிட்டில் டாக்ஸ்
டாபிக்ஸ்