அஜித்துடன் வடிவேலு நடிக்காததன் மர்மம்.. இருவருக்கும் அப்படி என்ன தான் வாய்க்கால் தகராறு.. வடிவேலு பாச்சா பலிக்காதது ஏன்!
Nov 06, 2024, 08:56 PM IST
அஜித் டென்ஷன் ஆகிவிட்டார். கிட்டதட்ட ஒரு வார சூட்டிங்கில் வடிவேலு கூப்பிடுவது. அவரது நடை உடை எல்லாமே மாறி விட்டது. வடிவேலுவின் இந்த சேன்ஜ் ஓவர் அஜித்துக்கு டென்ஷனை ஏற்படுத்தியது. ஒரு வழியாக அந்த படத்தை முடித்து விட்டார்.
பூவெல்லாம் உன் வாசம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார் - ஜோதிகா - இயக்குநர் எழில் கூட்டணி அமைத்த படம் ராஜா. பூவெல்லாம் உன் வாசம் போல் பெரிய அளவில் படம் வெற்றி பெறவில்லை என்றாலும் சராசரி ஹிட்டாக அமைந்து கணிசமான வசூலையும் ஈட்டியது. படத்தில் அஜித்தின் மாமா கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருப்பார். இந்த படித்தில் அஜித் வடிவேலு இருவருக்கும் இடையிலான காமெடி ரசிக்கும் விதமாக அமைந்திருந்தது. ஆனாலும் ராஜா படத்திற்கு பின் அஜித் - வடிவேலு கூட்டணி அதன் பின் தமிழ் சினிமாவில் இன்று வரை அமையவே இல்லை. அதற்கு சினிமா வட்டாரங்களில் பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தது.
நடிகர் அஜித் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு மூத்த பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் தனது VK Sundar updates யூ டியூப் சேனலில் பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் வடிவேலுவும் அஜித்தும் இணைந்து நடிப்பதில்லை.. அவர்கள் இருவருக்குள்ளும் என்ன பிரச்சினை என்று கேட்ட ரசிகர் ஒருவரின் கேள்விக்கு தன் சேனலில் அவர் பதில் அளித்துள்ளார். அதில், "இங்கு கேள்வி கேட்கப்பட்டதால் சொல்கிறேன். நான் இதுவரை யாருக்கும் பொது வெளியில் சொன்னதில்லை. அஜித் எப்போதும் ஒருவருடன் அறிமுகமாகும் போது 'I am Ajith Kumar' என்று சொல்லித்தான் கைகொடுப்பார். நீங்க திரும்ப அவர் பெயரை சொல்லி கூப்பிட்டால் ரொம்ப சந்தோசப்படுவார். ஏனென்றால் அவரே என்னை பெயர் சொல்லி கூப்பிடுங்கள் என்றுதான் சொல்லி இருக்கிறார். பொதுவெளியிலேயே சொல்லி இருக்கிறார்.
எழில் இயக்கத்தில் ராஜா என்ற படத்தில் அஜித்தும் வடிவேலுவும் இணைந்து நடித்திருந்தனர். அந்த படத்தின் அஜித்தும் வடிவேலுவும் முதல் நாள் சந்தித்தனர். சந்தித்த போது அஜித் வழக்கம் போல் கைகொடுத்து I am Ajith Kumar என்று சொன்னார். வடிவேலு முதலில் சார் என்று சொல்ல ஆரம்பித்து பின்னர் வாங்க போங்க என்று சொல்லி ஒரு கட்டத்தில் வாடா , போடா என்ற அளவிற்கு போய் விட்டார். அஜித் டென்ஷன் ஆகிவிட்டார். கிட்டதட்ட ஒரு வார சூட்டிங்கில் வடிவேலு கூப்பிடுவது. அவரது நடை உடை எல்லாமே மாறி விட்டது. வடிவேலுவின் இந்த சேன்ஜ் ஓவர் அஜித்துக்கு டென்ஷனை ஏற்படுத்தியது. ஒரு வழியாக அந்த படத்தை முடித்து விட்டார்.
அதன் பிறகு எந்த படமும் வடிவேலுவுடன் இணைந்து நடிக்க வேண்டாம் என்று அஜித்தே சொல்லி விட்டார். அதுதான் நடந்த உண்மை. பொது வெளியில் இதுவரை யாரிடமும் சொல்லவில்லை. உங்கள் கேள்வி மூலமாக சொல்கிறேன்' என்றார்.
நடிகர் அஜித்துக்கும், வடிவேலுவுக்கும் இடையில் இப்படியான இந்த ஊடல் தவிர்க்கப்பட்டிருந்தால் இருவரும் இணைந்து பல காட்சிகளில் ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்