அஜித் வீட்டுக்கே வந்துட்டாரு.. நா உட்காந்து அழுவேன்.. எந்த விருதுக்கு பின்னாடியும் ஓடற ஆள் நான் இல்ல.. மனம் திறந்த யுவன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அஜித் வீட்டுக்கே வந்துட்டாரு.. நா உட்காந்து அழுவேன்.. எந்த விருதுக்கு பின்னாடியும் ஓடற ஆள் நான் இல்ல.. மனம் திறந்த யுவன்

அஜித் வீட்டுக்கே வந்துட்டாரு.. நா உட்காந்து அழுவேன்.. எந்த விருதுக்கு பின்னாடியும் ஓடற ஆள் நான் இல்ல.. மனம் திறந்த யுவன்

Pandeeswari Gurusamy HT Tamil
Nov 06, 2024 11:01 PM IST

அன்லக்கி மியூசிக் டைரக்டர்ன்னே ஸ்டாம்ப் பண்ணி இருந்தாங்க ஒரு பீரியட் ஆப் டைம். தீனா வரைக்கும் அப்படித்தான். தீனா வந்துதான் எல்லாத்தையும் அப்படியே புரட்டி போட்டுச்சு. அதுவரைக்கும் எல்லாரும் யுவன் போனா படம் சரியா ஓடல. அப்படின்ற ஒரு மித்ல இருந்தாங்க

அஜித் வீட்டுக்கே வந்துட்டாரு.. நா உட்காந்து அழுவேன்.. எந்த விருதுக்கு பின்னாடியும் ஓடற ஆள் நான் இல்ல.. மனம் திறந்த யுவன்
அஜித் வீட்டுக்கே வந்துட்டாரு.. நா உட்காந்து அழுவேன்.. எந்த விருதுக்கு பின்னாடியும் ஓடற ஆள் நான் இல்ல.. மனம் திறந்த யுவன்

கேள்வி : ஆரம்ப காலத்தில் உங்களுடைய பாட்டு ஹிட் ஆகும். ஆனா படம் ஹிட் ஆகாது. அந்த மாதிரி ஒரு பீரியட் இருந்தது. அத எப்படி ஹேண்டில் பண்ணீங்க

பதில் : ஆமா அன்லக்கி மியூசிக் டைரக்டர்ன்னே ஸ்டாம்ப் பண்ணி இருந்தாங்க ஒரு பீரியட் ஆப் டைம். தீனா வரைக்கும் அப்படித்தான். தீனா வந்துதான் எல்லாத்தையும் அப்படியே புரட்டி போட்டுச்சு. அதுவரைக்கும் எல்லாரும் யுவன் போனா படம் சரியா ஓடல. அப்படின்ற ஒரு மித்ல இருந்தாங்க , நம்ம சினிமாவுல இருக்கற ஒரு சென்டிமெண்ட்டுல அந்த மாதிரி ஒன்னு வச்சுருந்தாங்க. அந்த டைம்ல நான் உட்காந்து அழுவேன். என்ன ஆச்சு. என்ன நடக்குது. நா நல்லாத்தான பண்றேன். ஏன் எதுனால வந்து இப்படி நடக்குது. படம் ஓடலனா நா என்ன பண்ணுவேன்னு இருந்தேன். ஆனா ஒரு டைம்ல அஜித் சார் வந்து யுவன் இந்த படம் நீதான் பண்ற அப்படினார். அவரே வீட்டுக்கு வந்திருந்தார். நா ஒரு படம் குடுக்குறேன். நீ உன் பெஸ்ட்ட கொடு என்றார்.

பூவெல்லாம் கேட்டுப்பார் படம் சரியா போகலன்னு நினைக்குறே. பூவெல்லாம் கேட்டுப்பார்க்கு அப்பறம் 3 ல இருந்து 4 வருஷம் எனக்கு எந்த படமுமே கிடையாது. சோ அதுக்கப்பறம் எனக்கு தீனா வந்து மாட்டுது தீனாவோட துள்ளுவதோ இளமையும் வந்தது. இப்படித்தான் ஆரம்பித்தது.

கேள்வி : 25 ஆண்டுகளில் 190 க்கும் மேற்பட்ட படங்களில் எத்தனை பாடல்கள் ஹிட் ஆனது என்பதையும் தாண்டி, அவன் அவன் பத்திரமா வச்சுக்கிற பாட்டுன்னு ஒன்னு இருக்குல. அத லூப்ல போட்டு பிளே பண்ற யுவனோட பாட்டுலா நிறைய இருக்கு. இந்த நம்பர் ஆப் ஹிட்டோட கம்பேர் பண்றப்ப நம்பர் ஆப் ரெக்கனேஷன்ஸ் யுவன்க்கு கம்மி அப்படின்ற பீல் உங்க ஃபேன்ஸ்க்குமே இருக்கு. அத நீங்க எப்படி பாக்குறீங்க.

பதில் : ஆமா இருக்கு.. அத நா எதிர்பாக்கல.. ஏன்னா எப்போதுமே என்னோட ஃபேன்ஸ்தான் என்னோட ஸ்ட்ரென்த். ஏன்னா எப்போதுமே நா மியூசிக் பண்றது அவங்களுக்காக. அவங்க அத கனெக்ட் பண்றாங்களா இல்லையா.. இததான் பார்ப்பேன். இப்ப எனக்கு நேஷனல் அவார்ட் வேணு.. இல்ல ஒரு அவார்ட்டுகு பின்னாடி போகணும்.. ஏன் எனக்கு கிடைக்கல.. நா அப்படி போக மாட்டேன். என்னுடைய அவார்ட்டுன்றது என்னோட ஃபேன்ஸ்தான். அவங்க என்ன கொடுக்குறாங்கன்றது தான்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.