Ajith Kumar: விஜயகாந்திடம் அஜித் கொடுத்த அந்த செக்.. இன்னைக்கும் ஒன்றும் கெட்டுபோகல.. நடிகர் சங்கம் ஏன் இத செய்ய கூடாது-ajith kumar that check that ajith gave to vijayakanth nothing will go bad even today why shouldnt the actors union - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajith Kumar: விஜயகாந்திடம் அஜித் கொடுத்த அந்த செக்.. இன்னைக்கும் ஒன்றும் கெட்டுபோகல.. நடிகர் சங்கம் ஏன் இத செய்ய கூடாது

Ajith Kumar: விஜயகாந்திடம் அஜித் கொடுத்த அந்த செக்.. இன்னைக்கும் ஒன்றும் கெட்டுபோகல.. நடிகர் சங்கம் ஏன் இத செய்ய கூடாது

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 20, 2024 07:00 AM IST

Ajith Kumar : அஜித் 10 லட்ச ரூபாய் செக்கை எடுத்து விஜயகாந்திடம் கொடுத்தார். என்னுடைய இந்த ஸ்டேட்டஸில் ஒரு 10 லட்ச ரூபாய் நடிகர் சங்கத்திற்கு டொனேஷன் கொடுப்பதில் பெரிய சிக்கல் இல்லை. என்னைப்போல் ஒரு 10 நடிகர்கள் சினிமாவில் இருக்க மாட்டார்களா? ஆளுக்கு 10 லட்ச ரூபாய் போட்டா அந்த கடனை நாமே அடைச்சுடலாமே

Ajith Kumar : விஜயகாந்துக்கு அஜித் கொடுத்த அந்த செக்.. இன்னைக்கும் கெட்டுபோகல.. நடிகர் சங்கம் ஏன் செய்ய கூடாது!
Ajith Kumar : விஜயகாந்துக்கு அஜித் கொடுத்த அந்த செக்.. இன்னைக்கும் கெட்டுபோகல.. நடிகர் சங்கம் ஏன் செய்ய கூடாது!

ஆனால் நடிகர் அஜித் குமார் நிகழ்ச்சிக்கு வர மறுப்பு தெரிவித்தார். இதனால் விஜயகாந்த் அஜித்தை ஏன் வர முடியாது என்று நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு கேட்டு கொண்டார். இதையடுத்து நடிகர் சங்கத்திற்கு நானும், சுரேஷ் சந்திராவும் அஜித்தும் சென்றோம்.  அப்போது அஜித் கேப்டன் விஜயகாந்திடம் சிங்கப்பூர், மலேசியாவில் நடக்க உள்ள கலை நிகழ்ச்சிக்கு நான் வர வில்லை என்றார். அதற்கு காரணம் தமிழகத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியாவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் தான் நடிகர் சங்கத்தின் நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்க வருவார்கள். அவர்களின் உழைப்பை சுரண்டி அந்த காசை வைத்து நாம் நடிகர் சங்க கடனை அடைக்க வேண்டுமா என்று அஜித் கேள்வி எழுப்பினார். இதைக்கேட்ட விஜயகாந்த் ஷாக் ஆகி விட்டார்.

10 லட்சத்திற்கு செக் கொடுத்த அஜித்

மேலும் அஜித் 10 லட்ச ரூபாய் செக்கை எடுத்து விஜயகாந்திடம் கொடுத்தார். என்னுடைய இந்த ஸ்டேட்டஸில் ஒரு 10 லட்ச ரூபாய் நடிகர் சங்கத்திற்கு டொனேஷன் கொடுப்பதில் பெரிய சிக்கல் இல்லை. என்னைப்போல் ஒரு 10 நடிகர்கள் சினிமாவில் இருக்க மாட்டார்களா? ஆளுக்கு 10 லட்ச ரூபாய் போட்டா அந்த கடனை நாமே அடைச்சுடலாமே.. நாம் ஏன் சிங்கப்பூர், மலேசியோ போய் தமிழர்களை சுரண்டி பணம் எடுத்து வர வேண்டும் என்றார்.

இதைக்கேட்ட விஜயகாந்த் சீரியசாக யோசிக்க ஆரம்பித்து விட்டார். நீங்க சொல்வது சரிதான். நாம அத செஞ்சிருக்கலாம். இந்த பாயிண்ட் ஆப் வியூல நாம யோசிக்கவே இல்லையே.. ஆனா இப்ப சிக்கல் என்னனா.. நிகழ்ச்சிக்கு எல்லா நடிகர்களும் வர்றோம் என்று சொல்லியாச்சு.. எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டோம்.. டிக்கெட்டுகளும் விற்று முடிந்து விட்டது. இதுக்கு மேல நாம் நிகழ்ச்சியை கேன்சல் செய்தால் அது ரொம்ப தப்பாகி விடும் என்றார். பின்னர் நடைபெற்ற அந்த கலை நிகழ்ச்சியில் அஜித் கலந்து கொள்ளவில்லை.

நிகழ்ச்சி முடிந்த பிறகு கேப்டன் விஜயகாந்த் அஜித் அன்று கொடுத்த செக்கை திரும்பி வாங்கிக் கொள்ளுமாறு பல முறை அஜித் அவர்களிடம் விஜயகாந்த் கேட்டுக்கொண்டார். ஆனால் அஜித் இல்ல .. நான் கொடுத்த அந்த செக்கை திரும்பி வாங்க கூடாது என்று என்னிடம் சொல்லிவிட்டார். கடைசி வரை அந்த செக் அங்கயேதான் இருந்தது.

இப்ப இந்த சூழலில் நடிகர் சங்க கட்டிடத்தை பிரம்மாண்டமாக கட்டி முடிக்க பணத் தேவைக்காக துபாய் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஆனால் அன்று விஜயகாந்திடம் அஜித் சொன்ன காலகட்டத்தில் நடிகர்கள் லட்சங்களில் சம்பளம் வாங்கினர். ஒரு சிலர் தான் கோடிகளில் வாங்கினர்.

கட்டிடத்தை கட்டி முடிச்சாதா கல்யாணம்

ஆனால் இன்று சாதாரண நடிகர்கள் கூட 10 கோடி, 25 கோடி, 50 கோடி, 100 கோடின்னு சம்பளம் வாங்குகின்றனர். பான் இண்டியா மூவின்னு பொருளாதார ரீதியா சினிமா வேற லெவலில் வளர்ந்திருக்கு. நடிகர்கள் ஆளுக்கு 2 கோடி போட்டா கூட அந்த கட்டிடத்தை மிகவும் பிரம்மாண்டமாக கட்டி விட முடியும். ஆனால் திரும்பவும் ஒரு கலை நிகழ்ச்சி நடத்துவது எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை. நீங்க துபாய் போனாலும் ஏற்கனவே அங்கு செட்டில் ஆன தமிழர்களோ அல்லது வேலை செய்ய புலம்பெயர்ந்து போய் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் தமிழர்களோ தான் டிக்கெட் வாங்க போறாங்க. அந்த பணத்தை வாங்கி வந்து இப்படி ஒரு சொகுசான கட்டிடம் கட்ட வேண்டுமா என்று ஒரு கேள்வியாக உள்ளது என்று சுந்தர் தெரிவித்துள்ளார். இந்த கட்டிடத்தை கட்டி முடிச்சாதான் விஷால் கல்யாணம் முடிப்பேன் என்று சொல்லி இருக்கிறார். அதுக்காகவாது அந்த கட்டிடத்தை கட்டி முடிக்கணும் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை விரிவாக அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சினிமா தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பெற இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்!

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.