டபுள் ஹீரோயின்..சத்யராஜ் அரசியல் நய்யாண்டி..பார்த்திபன்,வடிவேலு, விவேக் காமெடி அட்ராசிட்டி!தமிழில் இன்று வெளியான படங்கள்
Dec 03, 2024, 07:01 AM IST
டபுள் ஹீரோயின்..சத்யராஜ் அரசியல் நய்யாண்டி, பார்த்திபன்,வடிவேலு, விவேக் காமெடி அட்ராசிட்டி, பெண்கள் கொண்டாடிய குஷ்பூ நடித்த படம் என தமிழில் இன்று வெளியான படங்கள் லிஸ்டை பார்க்கலாம்
தமிழ் சினிமாவில் டிசம்பர் 3ஆம் தேதியான இன்று பெரிய ஸ்டார்கள் படம் எதுவும் வெளியாகிவில்லை. இருப்பினும் 80ஸ் மற்றும் 90ஸ்களில் முன்னணி ஹீரோக்களாக இருந்த சரத்குமார், சத்யராஜ், அர்ஜுன் போன்றோரின் ஹிட் படங்கள் இந்த நாளில் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் இன்று வெளியாகியிருக்கும் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
ஆயிரம் ரூபாய்
ஜெமினி கணேசன், சாவித்ரி நடிப்பில் கே.எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான படமான ஆயிரம் ரூபாய் படம் 1964ஆம் ஆண்டு வெளியானது. பேமிலி ட்ராமா பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் எம்.ஆர். ராதா, நாகேஷ், அசோகன் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். தீபாவளி ரிலீஸாக திட்டமிடப்பட்ட இந்த படம் டிசம்பரில் வெளியானது. பல்வேறு திருப்பங்களுடன் அமைந்திருந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. ஜெமினி கணேசனின் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்த ஆயிரம் ரூபாய் படம் வெளியாகி இன்றுடன் 60 ஆண்டுகள் ஆகிறது
ரோஜாவை கிள்ளாதே
அர்ஜுன், குஷ்பூ ஜோடியாக நடித்து சுரேஷ் கிருஷ்ண் இயக்கத்தில் 1993இல் வெளியான படம் ரோஜாவை கிள்ளாதே. இந்தியில் சூப்பர் ஹிட்டான டீசாப் என்ற படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த ரோஜாவை கிள்ளாதே படத்தில் டைகர் பிரபாகர், ராதா ரவி, கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்பட பலரும் நடித்திருப்பார்கள். ரொமாண்டிக் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கவுண்டமணி - செந்தில் காமெடி ரசிக்கும் விதமாக அமைந்திருந்தது.
புருஷ் லட்சணம்
ஜெயராம், குஷ்பூ நடித்து இயக்குநர் பி. வாசு கதை, திரைக்கதை எழுத, கே.எஸ். ரவிக்குமார் இயக்கியிருக்கும் படம் புருஷ லட்சமணம். பேமிலி ட்ராமா பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஆர். சுந்தரராஜன், ஸ்ரீவித்யா, ராஜா ரவீந்திரா, சார்லி, கே.எஸ். ரவிக்குமார் உள்பட பலரும் படித்தில் நடித்திருப்பார்கள். பெண்களை வெகுவாக கவர்ந்த படமாக அமைந்தது. தேவா இசையில் காக்கை சிரகினிலே என்ற பாடல் சிறந்த மெலடியாக இருந்தது. அதேபோல் ஒரு தாளி வரம் கேட்டு வந்தேன் என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. 1993ஆம் ஆண்டில் வெளியான இந்த படம் அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களின் லிஸ்டில் இணைந்தது. அத்துடன் படம் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட புருஷ லட்சணம் படம் வெளியாகி 31 ஆண்டுகள் ஆகிறது.
உன்னருகே நானிருந்தால்
பார்த்திபன், மீனா, ரம்பா, விவேக், வடிவேலு, மனோரமா உள்பட பலர் நடித்து ரெமாண்டிக் காமெடி பாணியில் உருவாகியிருந்த படம் உன்னருகே நானிருந்தார். செல்வ இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படம் சந்தர்ப்பு சூழ்நிலையால் பார்த்திபன் - மீனா சந்திப்பதும், அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்து பல்வேறு சிக்கலை கடந்த எப்படி இணைகிறார்கள் என்பதை விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நிறைந்த திரைக்கதையும் படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும். வடிவேலு, விவேக் காமெடி ட்ராக்குகள் தனித்தனியே வந்தாலும் இரண்டும் வயிறு குலுங்கி சிரிக்க வைக்கும். அதேபோல் பார்த்திபன் - மீனா இடையிலான காதல் காட்சியும் ரசிக்க வைக்கும் விதமாக அமைந்திருந்தது. தேவா இசையில் எந்தன் உயிரே என்ற மெலடி சூப்பர் ஹிட்டானது. ரசிகர்களை கவர்ந்து ஹிட்டான இந்த படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது.
டைம்
பிரபு தேவா, சிம்ரன், ராதிகா செளத்ரி உள்பட பலர் நடித்து வெளியான ரெமாண்டிக் படம் டைம். தெலுங்கு சினிமா இயக்குநர் கீதா கிருஷணன் தமிழில் அறிமுகமான இந்த படத்தில் முதலில் பிரசாந்தை வைத்து சில காட்சிகள் படமாக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் அவர் படத்தை விட்டு விலகிய நிலையில், அஜித் நடிப்பார் என தகவல்கள் வெளியாகின. அதன் பின்னர் அஜித்தும் நடிக்க முடியாமல் போக பிரபு தேவா நடித்தார். 1999இல் வெளியான இந்த படத்தில் ப்பலூ ப்ருத்விராஜ், சார்லி, மணிவண்ணன், நாசர். அம்பிகா உள்பட பலரும் நடித்திருப்பார்கள். படம் பெரிய அளவில் வரவேற்பை பெறாத போதிலும் இளையராஜா இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. காதல் நீதான், தவிக்கேறேன், முத்து நிலவே போன்ற பாடல்கள் அந்த காலகட்டத்தில் பல இடங்களில் ஒலிக்கும் பாடலாக இருந்தது. படத்தின் திரைக்கதையை காட்டிலும் ஒளிப்பதிவு, படமாக்கப்பட்ட லெக்கேஷன்கள் போன்றவை வெகுவாக பாராட்டப்பட்டது
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
தமிழ் சினிமாவில் 1980களில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் மறைந்த இயக்குநர் ராம நாரயணன். இவரது 100வது படமாக திருப்பதி ஏழுமலை வெங்கடேசா வெளியானது. படத்தில் பிரபு, எஸ்வி சேகர், வடிவேலு, ரோஜா, ஊர்வசி, கோவை சரளா பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். வெண்ணிற ஆடை மூர்த்தி, வாகை சந்திரசேகர், மாஸ்டர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரித்தில் நடித்திருப்பார்கள். மறைந்த நடிகர் விவேக்கும் சிறிய கேமியோ வேடத்தில் தோன்றியிருப்பார்.
காமெடி கலந்த குடும்பசித்திரமாக இந்த படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கும் இயக்குநர் ராமநாரயணன், பணம் மீது குறியாக இருந்தால் வாழ்க்கையில் என்னெவெல்லாம் இழக்க நேரிடும் என்பதையும் மெசேஜாக சொல்லியிருப்பார். தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி படங்களில் ஒன்றாகவும், சிறந்த டைம்பாஸ் படமாகவும் இருந்து வரும் திருப்பதி ஏழுமலை வெங்கடேசா வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது
மகா நடிகன்
சத்யராஜ், நமிதா, மும்தாஜ், மனோஜ், இயக்குநர் வாசு, இயக்குநர் ராஜ் கபூர், விசு, ரமேஷ் கண்ணா உள்பட பலரும் நடித்து ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் அரசியல் நையாண்டி படம் மகா நடிகன். ஹீரோக்கள், அரசியல்வாதிகளுக்கு இடையிலான உறவை நய்யாண்டியாக சொல்லும் விதமாக காமெடியுடன் கூடிய திரைக்கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சத்யராஜுக்கு ஹிட்டாக அமைந்த இந்த படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது.
டாபிக்ஸ்