Simran: எனக்குன்னு யாரும் இல்ல... இத்தோடு எல்லாத்தையும் நிறுத்திக்கோங்க... கொந்தளித்த சிம்ரன்-actress simran express angry on rumor about her self - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Simran: எனக்குன்னு யாரும் இல்ல... இத்தோடு எல்லாத்தையும் நிறுத்திக்கோங்க... கொந்தளித்த சிம்ரன்

Simran: எனக்குன்னு யாரும் இல்ல... இத்தோடு எல்லாத்தையும் நிறுத்திக்கோங்க... கொந்தளித்த சிம்ரன்

Malavica Natarajan HT Tamil
Sep 22, 2024 12:25 PM IST

Simran: சோசியல் மீடியாவில் தன்னைப் பற்றி வரும் வதந்திகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். இங்கு எனக்காக யாரும் நிற்கப் போவதில்லை. சினிமாத்துறையில் நேர்மை மிக அவசியம் என நடிகை சிம்ரன் கோவமாக பதிலளித்துள்ளார்.

Simran: எனக்குன்னு யாரும் இல்ல... இத்தோடு எல்லாத்தையும் நிறுத்திக்கோங்க... கொந்தளித்த சிம்ரன்
Simran: எனக்குன்னு யாரும் இல்ல... இத்தோடு எல்லாத்தையும் நிறுத்திக்கோங்க... கொந்தளித்த சிம்ரன்

இதற்கிடையில், சில நாட்களாக நடிகை சிம்ரன் குறித்து சில வதந்திகள் சோசியல் மீடியாக்களில் பரவி வருகிறது. இதை கண்டும் காணாமல் இருந்த சிம்ரன், தற்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக காட்டமான பதில்களை அளித்துள்ளார்.

வதந்திகளுக்கு விளக்கம்

இந்த வதந்திகள் குறித்து எக்ஸ் தளத்தில் சிம்ரன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சிலரால் எப்படி உணர்வு ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒருவரைப் பாதிக்கும் படி பேச முடிகிறது என்பதைப் பார்க்கும்போது மனது வருத்தமாக இருக்கிறது. நான் என் திரையுலக வாழ்வில் இதுவரை வெளியான எந்த வதந்திகளுக்கும் பதிலளித்தது கிடையாது. இப்படி வெளியாகும் வதந்களை தேவையில்லாத விஷயங்கள் என கடந்து செல்வேன். ஆனால் இப்போது என்னைப் பற்றிப் பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

எனக்கு ஆசையில்லை

இதுவரை நான் எந்த பெரிய கதாநாயகர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என ஆசைப்பட்டதில்லை. எனக்கான வாய்ப்புகள் வந்தபோது அதில் நடித்திருக்கிறேன். அவ்வளவுதான். இப்போது என் வாழ்வின் இலக்குகள் எல்லாம் முற்றிலும் மாறிவிட்டன.

இத்தனை நாள் சகித்து வந்தேன்

சமூக வலைத்தளங்களில் என் பெயரை, வேறு ஒருவருடன் இணைத்துப் பேசுவதைப் நான் பல ஆண்டுகள் சகித்துக் கொண்டு அமைதியாகத் தான் இருந்தேன். ஆனால், சுயமரியாதை என்பது எல்லாவற்றையும் விட முக்கியம். 'ஸ்டாப்' என்பது பவர்ஃபுல்லான வார்த்தை. அதை இப்போது, இந்த சமயத்தில் பயன்படுத்துவது சரியாக இருக்கும் என நம்புகிறேன்.

என் மீது இதுபோன்ற வதந்திகளை பரப்புவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்பதை இங்கு அழுத்தமாகக் கூற விரும்புகிறேன்.

மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்

இங்கு யாரும் எனக்கு ஆதரவாக நிற்கப் போவதில்லை. நாம் தான் நமக்கானக் குரல்கலை கொடுத்தாக வேண்டும். எனவே, எனக்காக நான் தான் பேசியாக வேண்டும். சினிமா துறையில் நேர்மை இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். என்னைப் பற்றி பொய்யான வதந்திகளைப் பரப்புபவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும்" என நடிகை சிம்ரன் அழுத்தம் திருத்தமாக பதிவிட்டுள்ளார்.

பரவிய வதந்தி

முன்னதாக நடிகை சிம்ரனிடம், நடிகர் விஜய்யின் 69வது படத்தில் நடிப்பீர்களா என கேள்வி எழுப்பியபோது, நடந்தால் நன்றாக இருக்கும் என பதலளித்தார். அதேபோல ஆன் ஸ்கிரீனில் மட்டுமல்ல ஆஃப் ஸ்கிரீனிலும் நடிகர் விஜய் தனக்கு மிகவும் பிடித்தமான ஜோடியாக இருக்கிறார் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், நடிகை சிம்ரன் விஜய்யிடம் சென்று நடிக்க வாய்ப்பு கேட்டார் எனவும் அதற்கு விஜய் மறுத்து விட்டார் எனவும் சிலர் வதந்தியை பரப்பி வந்தனர். 

அதற்குள்ளாக நடிகர் விஜய்யை வைத்து படம் தயாரிக்க சிம்ரன் ஆசைப்பட்டதாகவும் அதற்கும் விஜய் மறுத்துவிட்டதாகவும் வதந்தி பரவியது. இவ்வாறு தனிப்பட்ட நபருடன் தன்னை தொடர்ந்து இணைத்து பேசி வந்ததால், நடிகை சிம்ரன் அதற்கு முடிவு கட்ட எண்ணியும் அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாகவும் இந்த பதிவை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.