"நீங்க எப்படி அந்த வார்த்தைய சொல்லலாம்" அல்லு அர்ஜூன் மேல் போலீஸ் கம்ப்ளையண்ட் செய்த நபர்..
Dec 01, 2024, 02:47 PM IST
மும்பையில் புஷ்பா 2 தி ரூல் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய வார்த்தையை குறிப்பிட்டு ஒருவர் அல்லு அர்ஜூன் மீது புகாரளித்துள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2 தி ரூல்.
2021ம் ஆண்டு வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்தப் படங்களை இயக்குநர் சுகுமார் இயக்கி உள்ளார். மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
புஷ்பா 2 புரொமோஷன்
புஷ்பா 2 திரைப்படம் வரும் 5ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்திற்கான புரொமோஷன் பணியில் படக்குழு இறங்கியுள்ளது. இதற்காக பீகார், சென்னை, கேரளா, மும்பை ஆகிய இடங்களில் படக்குழு விழா நடத்தி ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், மும்பையில் நடந்த படத்தின் புரொமோஷன் விழாவில் நடிகர் அல்லு அர்ஜூன் பேசி. வார்த்தை தற்போது அவருக்கே எதிராக முடிந்துள்ளது.
நடிகர் அல்லு அர்ஜூன் மீது புகார்
இந்நிகழ்ச்சியில் அல்லு அர்ஜூன் பேசிய வார்த்தையை குறிப்பிட்டு ஒருவர் காவல் நிலையத்தில் அல்லு அர்ஜூனுக்கு எதிராக புகாரளித்து உள்ளார்.
வெளியான தகவலின் படி பார்த்தால், சீனிவாஸ் கவுட் என்ற நபர் ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர் நகர் காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் மீது புகார் அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.
கடுப்பான ஸ்ரீனிவாஸ்
பசுமை, அமைதி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் சேகரிப்பு அறக்கட்டளையின் தலைவராக உள்ளவர் ஸ்ரீனிவாஸ். இவர் தான் அல்லு அர்ஜூனுக்கு எதிராக புகாரளித்துள்ளார். பின், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுன் மீது தனது ரசிகர் பட்டாளத்திற்கு இராணுவம் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என்று புகார் அளித்துள்ளோம்.
ராணுவம் என்பது கௌரவமான பதவி. அவர்கள் தான் நம் நாட்டை பாதுகாக்கிறார்கள். எனவே உங்கள் ரசிகர்களை அப்படி அழைக்க முடியாது. அதற்குப் பதிலாக அவர் பயன்படுத்தக்கூடிய வேறு பல சொற்கள் உள்ளன" என மிகவும் காட்டமாக பேசி இருந்தார்.
அல்லு அர்ஜுன் என்ன சொன்னார்?
முன்னதாக மும்பையில் புஷ்பா 2 படத்தை புரமோஷன் செய்த அர்ஜுன், "எனக்கு ரசிகர்கள் இல்லை. என்னிடம் ஒரு படை இருக்கிறது. நான் என் ரசிகர்களை நேசிக்கிறேன். அவர்கள் என் குடும்பம் போன்றவர்கள். அவர்கள் என்னுடன் நிற்கிறார்கள். என்னைக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் எனக்காக ஒரு இராணுவம் போல நிற்கிறார்கள். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். உங்களை பெருமைப்படுத்துவேன். இந்த படம் பெரிய வெற்றி பெற்றால் எனது ரசிகர்கள் அனைவருக்கும் சமர்ப்பிப்பேன்" என்று பேசி இருந்தார்.
ரிலீஸுக்கு முன் சிக்கல்
இதில் அவர் தன் ரசிகர்களை ராணுவம் எனக் கூறியதால், ஆத்திரமடைந்த ஸ்ரீனிவாஸ் தற்போது ஹைதராபாத்தில் புகாரளித்துள்ளார். படம் வெளியாக இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், படத்தின் நாயகன் அல்லு அர்ஜூனுக்கு எதிராக புகாரளித்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்