புஷ்பா 1 vs புஷ்பா 2: பட்ஜெட், பிசினஸ், கதை எல்லாம் ஒன்னைவிட இரண்டு அதிகம் தான்.. கிடைத்த டேட்டா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  புஷ்பா 1 Vs புஷ்பா 2: பட்ஜெட், பிசினஸ், கதை எல்லாம் ஒன்னைவிட இரண்டு அதிகம் தான்.. கிடைத்த டேட்டா

புஷ்பா 1 vs புஷ்பா 2: பட்ஜெட், பிசினஸ், கதை எல்லாம் ஒன்னைவிட இரண்டு அதிகம் தான்.. கிடைத்த டேட்டா

Marimuthu M HT Tamil
Nov 30, 2024 05:48 PM IST

புஷ்பா 1 vs புஷ்பா 2: பட்ஜெட், பிசினஸ், கதை எல்லாம் ஒன்னைவிட இரண்டு அதிகம் தான்.. கிடைத்த டேட்டா பற்றி பார்ப்போம்.

புஷ்பா 1 vs புஷ்பா 2: பட்ஜெட், பிசினஸ், கதை எல்லாம் ஒன்னைவிட இரண்டு அதிகம் தான்.. கிடைத்த டேட்டா
புஷ்பா 1 vs புஷ்பா 2: பட்ஜெட், பிசினஸ், கதை எல்லாம் ஒன்னைவிட இரண்டு அதிகம் தான்.. கிடைத்த டேட்டா

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் பிரமாண்டமாக வெளியாகிறது. புஷ்பா 2 படத்தின் புரோமோஷன் முழுவதையும் அல்லு அர்ஜுன் தானே பார்த்துக்கொள்கிறார்.

புஷ்பா 2 படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் சுகுமார், இதுவரை ஒரு புரமோஷன் நிகழ்ச்சியில் கூட நடிக்கவில்லை. அதனால், பெரும்பாலான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகாவே கலந்துகொள்கின்றனர்.

1000 கோடி ரூபாய் டார்கெட்டில் புஷ்பா 2:

புஷ்பா தி ரைஸ்(புஷ்பா 1) படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா 2 பெரும் எதிர்பார்ப்பை குவித்துள்ளது. படம் எளிதாக 1000 கோடியை தாண்டும் என்கின்றனர், வர்த்தக வட்டாரம். வசூலைப் பொறுத்தவரை, டோலிவுட்டின் முந்தைய சாதனைப் படங்களின் வசூலை புஷ்பா 2 முறியடிக்கும் எனக் கூறப்படுகிறது.

சர்வதேச அளவில்...

புஷ்பா பாகம் ஒன்றுடன் ஒப்பிடுகையில் புஷ்பா 2 படத்தில் நிறைய மாற்றங்களை செய்திருக்கிறார், இயக்குநர் சுகுமார். ட்ரெய்லர் மற்றும் டீசரை பார்க்கும்போது படத்தின் மொத்தக் கதையும் மாறியிருக்கிறது. புஷ்பா பார்ட் 1 படத்தில் கடத்தல் கும்பல் தலைவனாக இருந்த புஷ்பராஜ், இந்த இரண்டாம் பாகத்தில் சர்வதேச அளவில் கடத்தல் தலைவனாக இருப்பார் எனத் தெரிகிறது.

யாரெல்லாம் நடித்துள்ளனர்?

புஷ்பா 2 படத்தில் ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். முதலமைச்சராக ஜெகபதி பாபு நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

முதலமைச்சருடனான புஷ்பராஜின் விரோதத்தின் பின்னணியில் இதன் இரண்டாம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சௌரப் சச்தேவா மற்றும் சில புதிய நடிகர்கள் புஷ்பா 2 படத்தில் நடித்துள்ளனர்.

புஷ்பா பாகம் ஒன்றில் சமந்தா ஒரு ஐட்டம் பாடலில் நடித்தார். புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலா நடித்திருக்கிறார். அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்ரீலீலாவின் கிஸ்கிஸ்கிஸிக் பாடல் ட்ரெண்டிங்கில் உள்ளது.

புஷ்பா முதல் பாகத்தின் பட்ஜெட் இருநூற்றைம்பது கோடிக்கும் குறைவு. புஷ்பா 2 படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. முதல் பாக வெற்றியின் பின்னணியில் சமரசம் செய்யாமல் இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கியுள்ளனர்.

நான்கு இசையமைப்பாளர்கள்:

புஷ்பா பாகம் ஒன்றிற்கு தேவிஸ்ரீபிரசாத் மட்டுமே இசையமைத்துள்ளார். இதன் இரண்டாம் பாகத்தை நான்கு இசையமைப்பாளர்கள் உருவாக்கி வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் தவிர, இதன் பின்னணி இசையை தமன், சாம் சி.எஸ். மற்றும் அஜனீஷ் லோகநாத் ஆகியோர் அமைத்துள்ளனர்.

புஷ்பா பாகம் ஒன்று திரைப்படமானது 2 மணி நேரம் 39 நிமிடங்கள் ஓடக்கூடியது. இதன் தொடர்ச்சி மூன்று மணி நேரம் பதினைந்து நிமிடங்களுக்கும் அதிகமான ரன்னிங் டைமில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

புஷ்பா பாகம் இரண்டு 3டி மற்றும் ஐமேக்ஸ் பதிப்புகளிலும் வெளியாகிறது. உலகம் முழுவதும் சுமார் 12,000 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

ரிலீஸுக்கு முன்பே இவ்வளவு வருவாயா?:

புஷ்பாவின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ரூ.150 கோடியாக உயர்ந்துள்ளது. புஷ்பா 2 படத்தின் தியேட்டர் மற்றும் தியேட்டர் அல்லாத உரிமை ரூ.1085 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

ரூ.30 கோடிக்கு புஷ்பா பாகம் ஒன்றின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம், புஷ்பா 2 படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ.275 கோடிக்கு நெட்பிளிக்ஸிடம் விற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.