நயன்தாராவைத் தொடர்ந்து சைதன்யாவை குறிவைத்த நெட்பிளிக்ஸ்.. 50 கோடிக்கு விலை போன திருமண ஒளிபரப்பு..
Nov 26, 2024, 12:37 PM IST
நாக சைதன்யா சோபிதா துலிபாலா திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளதாகவும் இதற்காக இந்த ஜோடிக்கு சுமார் 50 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர்கள் சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா ஆகியோரின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் 4ம் தேதி இவர்களுக்கு திருமணம் நடக்க உள்ளது.
திரைப் பிரபலங்கள் பலர் இவர்களது திருமணத்தில் பங்கேற்க உள்ளதால் பிரம்மாண்டமாக திருமணம் நடத்த முடிவு செய்ததாகக் கூறப்பட்ட நிலையில், பாரம்பரிய முறைப்படி இவர்கள் இருவரின் திருமணமும் அன்னப்பூர்ணா ஸ்டூடியோவில் நடத்தப்பட உள்ளது.
சைதன்யாவை குறிவைத்த நெட்பிளிக்ஸ்
இந்நிலையில், நாக சைதன்யா - சோபிதா துலிபாலா ஆகியோரின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இவர்களின் திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை ரூ.50 கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.
எனவே, இதற்காகத் தான் நாக சைதன்யாவும் சோபிதாவும் நெருங்கிய உறவினர்களையும் நண்பர்களையும் மட்டும் திருமணத்திற்கு அழைக்கின்றரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ 2 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகி சினிமா உலகில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், தற்போது 2ம் திருமணம் செய்யும் நாக சைதன்யாவும் திருமணத்தை ஒளிபரப்ப இருக்கிறார். இதனால் நாக சைதன்யா சோபிதா திருமணத்திற்கு வருவோருக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கும் என தெரிகிறது.
திருமண நிச்சயதார்த்தம்
கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் நாக சைதன்யா, தெலுங்கு நடிகை சோபிதா துலிபாலா ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. . இதனை நாக சைதன்யாவின் தந்தையும், தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான நாகார்ஜுனா தனது சமூக வலைத்தளபக்கத்தில் பகிர்ந்தார். இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நாகசைதன்யா - சோபிதா இடையிலான உறவு குறித்தும், டேட்டிங் குறித்தும் உலா வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சோபிதாவிற்கு மஞ்சள் சடங்கு
நாக சைதன்யா- சோபிதா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், மக்கள் இவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், திருமணம் பற்றிய அறிவிப்புகளை இருவர் தரப்பிலிருந்தும் வெளிவராத நிலையில், கடந்த மாதம் சோபிதாவிற்கு உறவினர்கள் சூழ பாரம்பரிய முறைப்படி மஞ்சள் சடங்கு நடைபெற்றது. இதற்கான புகைப்படங்களை சோபிதா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
டிசம்பர் 4ல் டும் டும் டும்
தெலுங்கு திருமணங்களில் முக்கிய சடங்காக இருக்கும் உலக்கை, உரலில் மஞ்சள் அடிக்கும் நிகழ்வு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் இவர்களின் திருமண தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவியது.
எளிமையான திருமணம்
சைதன்யாவும் சோபிதாவும் தனக்கு ஆடம்பரமாக திருமணம் செய்ய விருப்பம் இல்லை எனக் கூறினர். அதனால் தான் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டும் திருமணத்திற்கு அழைத்துள்ளோம். மேலும், சைதன்யா அவரது திருமண ஏற்பாடுகளை அவரிடமே விட்டுவிடுமாறு கூறினார்.
இது எனக்கு பெரிய நிவாரணத்தை தந்தது. இதனால், நானும் சைதன்யாவிடமே அனைத்து பொறுப்புகளையும் கொடுத்து விட்டேன். இதனால், அவர்களுக்கான பொறுப்புகளும் அதிகரிக்கத் தொடங்கியது என நடிகரும் நாக சைதன்யாவின் தந்தையுமான நாகார்ஜூனா கூறியுள்ளார்.
சம்பவம் செய்த சைதன்யா
சமந்தாவிடம் காதலை வெளிப்படுத்திய ஆக்ஸ்ட் 8ஆம் தேதியிலேயே, தற்போது சோபிதாவுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார் நாக சைதன்யா. கடந்த மே 2022இல் நாக சைதன்யா - சோபிதா ஜோடி முதல் முறையாக சந்தித்ததாக கூறப்படும் நிலையில், அவ்வப்போது ஐரோப்பிய நாடுகளில் இருவரும் ஜோடியாக ஊர் சுற்றியுள்ளனர்.நிச்சயதார்த்தம் முடியும் வரை தங்களுக்குள் இருக்கும் உறவை வெளிப்படுத்தவில்லை.
திரைக் குடும்பத்தின் திருமணம்
ஏனெனில், தெலுங்கு திரையுலகில் 3 தலைமுறையாக கோலோச்சி வருகிறது நாக சைதன்யாவின் குடும்பம், அதுமட்டுமின்றி, நாகார்ஜூனா தெலுங்கு மட்டுமல்லாமல் பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளதால், அவருக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். அதே சமயம், ஷோபிதாவும், டோலிவுட் மட்டுமல்லாமல், கோலிவுட், பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். இதனால், இந்திய திரையுலகமே இவர்கள் இருவரின் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்