"மாலை டும் டும்.. மத்தளம் டும் டும்" வெளியானது நாக சைதன்யா கல்யாண பத்திரிக்கை.. ஹார்ட் விடும் ரசிகர்கள்!
ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த நாக சைதன்யா திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குடும்பத்தினரால் அச்சடிக்கப்பட்டாதா அல்லது ரசிகர்கள் தயாரித்த ஒன்றா என்ற தகவல் இப்போது வரை வெளியாகவில்லை.

நடிகர்கள் சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா ஆகியோரின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் 4ம் தேதி இவர்களுக்கு திருமணம் நடக்க உள்ளது என்ற தகவல் வேகமாகப் பரவியது. மேலும், திரைப் பிரபலங்கள் பலர் இவர்களது திருமணத்தில் பங்கேற்க உள்ளதால் பிரம்மாண்டமாக திருமணம் நடத்த முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இவர்கள் இருவரின் திருமணமும் அன்னப்பூர்ணா ஸ்டூடியோவில் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் பரவியது.
வைரலாகும் கல்யாண பத்திரிக்கை
வெளியான தகவலின் படி திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், சோபிதா- நாக சைதன்யா திருமண பத்திரிக்கை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தப் பத்திரிக்கையை பலரும் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இந்தத் திருமண பத்திரிக்கையில் இந்தியாவின் தென்மாநிலங்களின் பாரம்பரியங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த பத்திரிக்கையில் ஒரு கோயில், விளக்குகள், மாடுகள், மணிகள் போன்றவை இடம் பெற்றுள்ளன. மணமகன் மற்றும் மணமகளின் பெயர்களுடன் அவர்களின் குடும்ப விவரங்களும் இடம்பெற்றன. திருமண தேதி டிசம்பர் 4, 2024 ஆகும். இது ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.