“3 செகண்ட் இல்ல கண்ணா.. 30 செகண்ட்.. தனுஷூக்கே தக் லைஃப்.. சவால் விட்டு சம்பவம் செய்த நயன்தாரா!
தனுஷூக்கே தக் லைஃப்.. நயனின் ஆவணப்படத்தில் தனுஷை மீறி, 37 செகண்ட் அளவிலான காட்சிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதனை முன் வைத்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றன.

“3 செகண்ட் இல்ல கண்ணா.. 30 செகண்ட்.. தனுஷூக்கே தக் லைஃப்.. சவால் விட்டு சம்பவம் செய்த நயன்தாரா!- சம்பவம் தெரியுமா?
நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ஆவணப்படம் நயன்தாரா 'Beyond the Fairytale’ என்ற பெயரில் கடந்த நவம்பர் 18 நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த ஆவணப்படத்தில் நயன் நடித்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரெளடிதான் திரைப்படத்தில் தொடர்பான காட்சிகளை தயாரிப்பாளராக தனுஷ் பயன்படுத்தக்கூடாது என்றும் அப்படி பயன்படுத்தும் பட்சத்தில், 10 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இதில் கடுப்பான நயன்தாரா அண்மையில் தனுஷ் மீது பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.