Naga Chaitanya-Sobhita: முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்: ரகசிய டேட்டிங் முதல் நிச்சயம் வரை!-nagarjun announced that nagachaitanya and sobhita dhulipala s engagement is off - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Naga Chaitanya-sobhita: முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்: ரகசிய டேட்டிங் முதல் நிச்சயம் வரை!

Naga Chaitanya-Sobhita: முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்: ரகசிய டேட்டிங் முதல் நிச்சயம் வரை!

Marimuthu M HT Tamil
Aug 08, 2024 05:16 PM IST

Naga Chaitanya-Sobhita: நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் வெற்றிகரமாக முடிந்தது.

Naga Chaitanya-Sobhita: முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்: ரகசிய டேட்டிங் முதல் நிச்சயம் வரை!
Naga Chaitanya-Sobhita: முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்: ரகசிய டேட்டிங் முதல் நிச்சயம் வரை!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு, நடிகை சமந்தா ரூத் பிரபுவை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி 2021-ல் பிரிவதாக அறிவித்தனர். 2022ஆம் ஆண்டு முதல், நடிகர் நாகசைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்துவருவதாக வதந்தி ஒன்று சுற்றி வருகிறது. இருவரும் தங்கள் உறவை இதுவரை உறுதிப்படுத்தாமல் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளில் அதிகம் முறை கிசுகிசுக்கப்பட்ட நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் நிச்சயம் உறுதியாகியுள்ளது. நாக சைதன்யாவின் சூப்பர் ஸ்டார் தந்தை நாகார்ஜுனா நிச்சயதார்த்த விழாவின் முதல் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் காதல் கதை எப்போது மலரத் தொடங்கியது?

திருமணமான 4 ஆண்டுகளுக்குப் பிறகு, நாக சைதன்யாவும் அவரது நடிகை மனைவி சமந்தாவும் அக்டோபர் 2021-ல் பிரிந்தனர். சில மாதங்களுக்குப் பிறகு 2022-ல், நாக சைதன்யா ’மேட் இன் ஹெவன்’ வலைத்தொடரில் நடித்த நடிகை சோபிதாவுடன் தனது ஹைதராபாத் வீட்டில் காணப்பட்டார். அப்போது கிடைத்த செய்தி அறிக்கைகளின்படி, இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் நண்பர்களாக இருந்தனர். அதே நேரத்தில் நாக சைதன்யா சோபிதாவுக்கு தனது புதிய வீட்டிற்கு அழைத்துச் சென்று, ஒரு ஹோம் டூரை காட்டினார். சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவர்கள் ஒரே காரில் ஒன்றாக வெளியேறினர். அப்போது இருந்து நாக சைதன்யா மற்றும் சோபிதாவுக்கு இடையில் காதல் கிசுகிசுக்கள் மெல்ல மெல்ல வதந்திகளாகத் தொடங்கின

லண்டன் விடுமுறை:

கடந்தாண்டு மார்ச் 2023-ல், லண்டன் சென்றிருந்த நாக சைதன்யா, தனது ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட படத்தின் பின்னணியில் சோபிதா காணப்பட்டார். அதன் பிறகு, நாகசைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் இடையே இருக்கும் வதந்தி அலை இன்னும் வேகமாக பரவத் தொடங்கியது.

மிச்செலின் ஸ்டார் செஃப் சுரேந்தர் மோகன் லண்டனில் உள்ள தனது உணவகத்தில் நடிகர் நாகசைதன்யாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்திலும் சோபிதா இருந்தார். அவர் நாக சைதன்யாவுடன் போஸ் கொடுத்தபோது, சோபிதாவை பின்னணியில் கழுகுக் கண்கள் கொண்ட நெட்டிசன்கள் பார்த்து கிசுகிசுத்தனர். இந்த புகைப்படம் பின்னர் சமையல்காரரால் நீக்கப்பட்டது. அதே மாதம், இந்த ஜோடியினர் வேகமான ஃபார்முலா கார்கள் மீதான தங்கள் அன்பு குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

ஜங்கிள் சஃபாரி:

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சோபிதா ஒரு ஜங்கிள் சஃபாரியில் எடுக்கப்பட்ட படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் ஒரு செல்ஃபியை இணையத்தில் பகிர்ந்தார். எதிர்தரப்பில் நாகசைதன்யாவும் ஒரு சஃபாரி ஜீப்பில் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் படத்தை வெளியிட்டார். இது சோபிதாவும், நாக சைதன்யாவும் டேட்டிங்கில் ஈடுபடுவதை துல்லியமாக காட்டியது.

பல இணைய பயனர்கள் சோபிதா மற்றும் சைதன்யா ஆகியோர் தங்கள் உறவை 'மென்மையாகத் தொடங்குகிறார்கள்' என்று யூகித்தனர்.

ஐரோப்பாவில் சோபிதாவும் நாகசைதன்யாவும்:

ஜங்கிள் சஃபாரி முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, சோபிதாவும் சைதன்யாவும் ஐரோப்பாவில் விடுமுறைக்கு புறப்பட்டனர். இருவரும் தங்கள் உறவைப் பற்றி தொடர்ந்து மௌனமாக இருந்தபோது, இந்த கவர்ச்சியான விடுமுறையில் அவர்கள் மதுவை ருசிக்கும் படம் இணையத்தில் கசிந்தது. கையில் ஷாப்பிங் பைகளுடன் தெருக்களில் நடந்து செல்லும் சோபிதா மற்றும் நாகசைதன்யாவின் கிளிப்பும் சமூக ஊடகங்களில் வைரலானது.

நிச்சயதார்த்தம்:

இந்நிலையில் இன்று காலை, சோபிதா மற்றும் நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம் பற்றிய செய்தி வெளியானது. தெலுங்கு சூப்பர்ஸ்டார் நாகார்ஜுனா தங்கள் மகன் நாகசைதன்யாவின் நிச்சயப் படங்களை ஒரு இனிமையான குறிப்புடன் பகிர்ந்துள்ளார். அதில், "இன்று காலை 9:42 மணிக்கு சோபிதா துலிபாலாவுடன் எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கு நடந்த நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவளை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மணமக்களுக்கு வாழ்த்துகள்! அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன். 💐கடவுள் ஆசீர்வதிப்பார்!❤️8.8.8 எல்லையற்ற அன்பின்❤️ ஆரம்பம்.

சோபிதா மற்றும் சைதன்யா ஆகியோர் இந்த அற்புதமான பயணத்தை ஒன்றாக தொடங்கும்போது அவர்களுக்கு அனைத்து அன்பையும் மகிழ்ச்சியையும் வாழ்த்துவோம்’’ எனக் குறிப்பிட்டார். இச்செய்தி இணையத்தில் ஆக்கிரமித்தது.

லண்டனில் நாகசைதன்யா ரசிகருடன் போட்டோ எடுக்கும்போது பின்னணியில் சோபிதா
லண்டனில் நாகசைதன்யா ரசிகருடன் போட்டோ எடுக்கும்போது பின்னணியில் சோபிதா
ஜங்கிள் சஃபாரி
ஜங்கிள் சஃபாரி

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.