‘என்ன நடந்தாலும் சிரிச்சிட்டு போயிட்டே இருப்போம்..’ நெகட்டிவிட்டிக்கு பதிலடி தந்த ஜோடிப் புறாக்கள்..
Dec 18, 2024, 06:33 PM IST
வாழ்க்கையில் என்ன நடந்தாலும் சிரிச்சிட்டு போயிட்டே இருப்போம் என நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி கூறியுள்ளனர்.
நயன்தாரா- விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டதில் இருந்தே இந்த தம்பதியினர் பல விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர்.
சில நாட்களாக இவர்கள் பற்றிய பேச்சுகள் குறைந்த நிலையில், நயன்தாராவின் ஆவணப்படமான நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பிரச்சனை தொடங்கியது. இந்த ஆவணப் படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் 3 வினாடி க்ளிப்புகளை பயன்படுத்தியதற்காக தனுஷ் இவர்களின் மீது நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
பிரச்சனையை பெரிதாக்கிய போஸ்ட்
இதனால், கோவமடைந்த நயன்தாரா தனுஷை விமர்சித்து 3 பக்க அறிக்கையை வெளியிட்டார். அத்துடன் விக்னேஷ் சிவனும் பொது இடங்களில் பேசுவது போல் நடந்துகொள்ள வேண்டும் எனவும் கூறி தன் கருத்தை முன் வைத்தார்.
இதையடுத்து தொடங்கிய பஞ்சாயத்துகள் இன்றுவரை ஓய்ந்த பாடில்லை. நயன்தாராவின் அறிக்கை, விக்னேஷ் சிவனின் போஸ்ட்டை நெட்டிசன்களும், பத்திரிகையாளர்களும், யூடியூபர்களும் பேசுபொருளாக்கிய நிலையில், இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் நிலைக்கு வந்தனர்.
சிக்கித் தவிக்கும் விக்கி
இந்த சமயத்தில் நயன்தாரா 3 யூடியூபர்களை விமர்சிக்க போய், அது மேலும் பூதாகரமாக வெடித்து பிரச்சனையை ஏற்படுத்தியது. இதனால், நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் தொடர் சிக்கலில் இருந்து வந்தனர். குறிப்பாக விக்னேஷ் சிவன் அவருடைய சின்னச் சின்ன செயல்களுக்காகவும் விமர்சிக்கப்பட்டார். பின் அதற்கான விளக்கத்தையும் அளித்து வந்தார்.
நயன்- விக்கி போஸ்ட்
நிலைமை இப்படி இருக்கத் தான் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் எடுத்த வீடியோவையும் புகைப்படங்களையும் இணைத்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளிப்படுத்தி உள்ளார்.
அந்தப் பதிவில், என்ன வேண்டுமென்றாலும் நடக்கட்டும் சிரித்துக் கொண்டே அனைத்தையும் கடந்து விட வேண்டும் எனக் கூறி இருக்கிறார். இவரது இந்தப் பதிவை நயன்தாரவும் ஷேர் செய்து ஸ்டோரியாக வைத்துள்ளார். இவர்கள் இருவரின் இந்த போஸ்ட் தான் இப்போது கோலிவுட் வட்டாரத்தின் பேசு பொருளாகவே மாறியுள்ளது.
அவரை கல்யாணம் செய்யாமலே இருந்திருக்கலாம்
முன்னதாக ஹாலிவுட் ரிப்போர்ட் சேனலுக்கு நயன்தாரா அளித்த பேட்டியில், "விக்னேஷ் சிவனை திருமணம் செய்யாமலே இருந்திருக்கலாமோ என யோசித்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். அவர் அளித்த பேட்டியில், நான் பல நேரங்களில் விக்னேஷ் சிவனை கல்யாணம் செய்யாமல் இருந்திருக்கலாம். நாங்கள் ஒன்றாக இல்லாமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று யோசித்திருக்கிறேன்.
நான் தான் அவரை காதலித்தேன். அவரை திருமணம் செய்து கொள்ள நினைத்தேன், ஒருவேளை அவர் என்னை திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் ஒரு இயக்குநராக, பாடலாசிரியராக, எழுத்தாளராக அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கிகாரத்தை பெற்றிருப்பார்." என்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்