'நயன்தாரா புருஷனுக்கு புத்திமதி சொல்லுங்க.. கருமம்.. சிக்கி சீரழியுறாங்க' வச்சு செய்த சேகுவேரா
இயக்குநர் விக்னேஷ் சிவன், புதுச்சேரி அரசின் ஹோட்டலை விலைக்கு கேட்ட சம்பவத்தில், அவருக்கு யாராவது புத்திமதி சொல்லுங்கள் என பத்திரிகையாளர் சேகுவாரா பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகில் அதிக சர்ச்சைகளில் சிக்கும் ஜோடியாக நயன்தாரவும் விக்னேஷ் சிவனும் இருந்து வரும் நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் புதிய விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
ஹோட்டலை விலை பேசி சிக்கிய விக்கி
காரணம், புதுச்சேரி மாநிலத்துக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சொகுசு காரில் வந்துள்ளார். அங்கு சட்டப்பேரவை வளாகத்துக்குள் சென்று, புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சரான லட்சுமி நாரயணனை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, புதுச்சேரி கடற்கரை சாலையில் அரசுக்கு சொந்தமான சீகல்ஸ் ஹோட்டலை விலை பேசியுள்ளாராம். இந்த செய்தி வெளியானது தான் இயக்குநர் விக்ன்ஷ சிவன் மீதான இத்தனை ட்ரோலுக்கும் காரணம்.
நயன்தாரா புருஷன்
இந்நிலையில், பத்திரிகையாளர் சேகுவாரா REALONE MEDIA எனும் யூடியூப் சேனலுக்கு இந்த சம்பவம் குறித்து பேட்டி அளித்துள்ளார். இந்த வீடியோவில் "நயன்தாரா புருஷன் எனக் குறிப்பிட்டால் தான் மக்களுக்கு விக்னேஷ் சிவன் யார் என்பது தெரியும்" எனவும் விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கே இதுதான் நிலை
மேலும், "ஒரு அரசு கட்டடத்தை டெண்டர் அறிவிக்காமல் வாடகைக்கு கூட எடுக்க முடியாது. ஆனால், இங்கு நேரடியாக அமைச்சரிடம் போய் விலை பேசினால் அவரால் என்ன செய்ய முடியும்.
ஜெயலலிதா முதன்முதலில் சிக்கியதே டான்சி வழக்கில் தான். அரசு இடத்தை வாங்கிவிட்டு பின் அது மிகப் பெரிய பிரச்சனை ஆன பின்னால், அந்த இடத்தை திரும்பக் கொடுத்தார்.
ஒரு முதல்வருக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களுக்கு எப்படி. நமக்கு முன் பல எடுத்துக்காட்டுகள் இருக்கும் போது அனைத்தையும் யோசித்து தான் செய்ய வேண்டும்.
எல்லாம் பயம் தான்
அந்தக் கட்டடம் மேல் அவர்களுக்கு ஏதாவது விருப்பம் இருந்தால், சட்டப்படி ஒகு வக்கீலை வைத்து இதை எப்படி வாங்கலாம் என அவர்கள் பேசி இருக்கலாம். இப்படி எந்த விஷயத்தையும் செய்யாமல் நேரடியாக சென்று இப்படி அசிங்கப்பட்டது எப்படி எனத் தெரியவில்லை.
புதுச்சேரியில் நடந்துவரும் ரங்கசாமியின் அரசுக்கு நேர்மையான அரசாங்கம் என்ற பெயர் உள்ளது. இப்போது, விக்னேஷ் சிவன் அமைச்சரிடம் பேசியதை வெளியில் சொல்லாமல் இருக்கலாம். ஆனால், இது பின்னாளில் வெளியே வந்தால், அரசு ஹோட்டலை விற்க அமைச்சரிடம் ரகசிய பேரம் நடத்தப்பட்டது என செய்திகள் வெளிவரும். இதற்கெல்லாம் பயந்து தான் அவர்கள் இந்த செய்தியை உடனே வெளியே தெரிவித்துள்ளனர்.
நயன்தாரா ஒரு மண்ணும் கிடையாது
நயன்தாரா நைட்டு 12 மணிக்கு எனக்கு அந்த ஹோட்டல் வேணும்னு அழுதுருக்கும். இத பாக்க முடியாத நயன்தாரா புருஷன் ஹோட்டல விலை பேச கெளம்பி இருப்பாரு, இதுதான் அங்க நடந்திருக்கும்.
நயன்தாரா யாரு வெறும் ஒரு நடிகை அவ்ளவுதான். தத்துவ மேதையோ,ஞானியோஅரசியல் சக்தியோ கிடையாது. அவர் ஒரு மண்ணும் கிடையாது. அதிகாரம் எல்லாம் இவரிடம் இருக்கும் என நினைச்சிக்கக் கூடாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களுடன் உறவிலோ நட்பிலோ இருக்கலாம். அதற்காகவே தான் நென்சச்சசை எல்லாம் சாதிக்கலாம் என நினைக்கக் கூடாது.
தான்தோன்றித்தனம்
தான் மட்டும் தான் பெரியவர் என்றும் அதிகாரம் எல்லாம் என் கையில் இருக்கிறது என நினைத்துக் கொண்டு தான்தோன்றித் தனமான வேலையில் ஈடுபட்டதால் தான், 30 செகணட் வீடியோ போட்டு சிக்கி சீரழியவும் அதான் காரணம். நயன்தாராவுக்கு முன்னாடியே லேடி சூப்பர் ஸ்டாராக இருந்த விஜயசாந்தி, குப்புற கெடக்குறாங்க. அவங்களே சினிமா அரசில்ல செல்லாக் காசு ஆகிட்டாங்க.
நயன்தாரா புருஷனுக்கு முதல்ல புத்திமதி சொல்லனும். கருமம், இங்கு யாருக்கு யாரு புத்திமதி சொல்றதுன்னு தெரியல. புகழ்பெற்ற நடிகையோட புரஷனா இருந்தாலும் அதிகாரத்த மீறி உங்களால செயல்பட முடியாது எனக் கூறியுள்ளார்".
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்