நாக சைதன்யா- சோபிதா திருமணம் எப்போது? சத்தமே இல்லாமல் நடக்கும் கல்யாண வேலைகள்!
Oct 30, 2024, 05:21 PM IST
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்கும் அவரது காதலி சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெறும் நாள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒருவரை ஒருவர் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் ஜோடி பொருத்தத்தைப் பார்த்து இந்திய திரையுலகமோ பொறாமைப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு இருவரும் திருமண வாழ்க்கையிலிருந்து பரஸ்பரமாக பிரிந்து வாழ இருப்பதாக அறிவித்தனர்.
இவர்கள் இருவரின் பிரிவுக்கும் இதுவரை எந்த காரணமும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காத நிலையில், சினிமா வட்டாரங்கள், பிரபலங்கள் என பலரும் பல தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்த வதந்திகள் இன்றளவும் முடியாமல் உள்ள நிலையில், நாக சைதன்யா தற்போது நடிகை ஷோபிதா துலிபாலாவை காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமண ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
நாக சைதன்யா- ஷோபிதா நிச்சயதார்த்தம்
கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் நாக சைதன்யா, தெலுங்கு நடிகை சோபிதா துலிபாலா ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. . இதனை நாக சைதன்யாவின் தந்தையும், தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான நாகார்ஜுனா தனது சமூக வலைத்தளபக்கத்தில் பகிர்ந்தார். இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நாகசைதன்யா - சோபிதா இடையிலான உறவு குறித்தும், டேட்டிங் குறித்தும் உலா வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் செய்த சைதன்யா
சமந்தாவிடம் காதலை வெளிப்படுத்திய ஆக்ஸ்ட் 8ஆம் தேதியிலேயே, தற்போது சோபிதாவுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார் நாக சைதன்யா. கடந்த மே 2022இல் நாக சைதன்யா - சோபிதா ஜோடி முதல் முறையாக சந்தித்ததாக கூறப்படும் நிலையில், அவ்வப்போது ஐரோப்பிய நாடுகளில் இருவரும் ஜோடியாக ஊர் சுற்றியுள்ளனர்.நிச்சயதார்த்தம் முடியும் வரை தங்களுக்குள் இருக்கும் உறவை வெளிப்படுத்தவில்லை.
எப்போது திருமணம்
தற்போது இவர்களின் திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், சோபிதா திருமண சடங்குகளில் பங்கேற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. தெலுங்கு திருமணங்களில் முக்கிய சடங்காக இருக்கும் உலக்கை, உரலில் மஞ்சள் அடிக்கும் நிகழ்வு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் இவர்களின் திருமண தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
திருமண ஏற்பாடுகள்
இவை அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும் பலரும் இந்தத் தகவலை பரப்பி வருகின்றனர். ஆனால், நாக சைதன்யா- சோபிதா திருமணம் எங்கு நடைபெறுகிறது, திருமணத்தில் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்வார்களா அல்லது திரையுலகமே கலந்துகொள்ளுமா என்ற எந்தத் தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.
திரைக் குடும்பத்தின் திருமணம்
ஏனெனில், தெலுங்கு திரையுலகில் 3 தலைமுறையாக கோலோச்சி வருகிறது நாக சைதன்யாவின் குடும்பம், அதுமட்டுமின்றி, நாகார்ஜூனா தெலுங்கு மட்டுமல்லாமல் பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளதால், அவருக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். அதே சமயம், ஷோபிதாவும், டோலிவுட் மட்டுமல்லாமல், கோலிவுட், பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். இதனால், இந்திய திரையுலகமே இவர்கள் இருவரின் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், இவர்கள் இருவரின் திருமண ஏற்பாட்டால் நடிகை சமந்தா ரசிகர்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர்.
டாபிக்ஸ்