சமந்தாவை அமைச்சருடன் தொடர்புபடுத்தி பேசிய விவகாரம்.. அமைச்சர் பேச்சை மொத்தமாக முடித்து விட்ட கோர்ட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சமந்தாவை அமைச்சருடன் தொடர்புபடுத்தி பேசிய விவகாரம்.. அமைச்சர் பேச்சை மொத்தமாக முடித்து விட்ட கோர்ட்!

சமந்தாவை அமைச்சருடன் தொடர்புபடுத்தி பேசிய விவகாரம்.. அமைச்சர் பேச்சை மொத்தமாக முடித்து விட்ட கோர்ட்!

Malavica Natarajan HT Tamil
Oct 26, 2024 07:44 AM IST

நடிகை சமந்தா விவாகரத்து பெற்றது குறித்து அமைச்சர் சுரேகா சர்ச்சையாக பேசிய வீடியோவை அனைத்து வித தளங்களில் இருந்தும் நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமந்தாவை அமைச்சருடன் தொடர்புபடுத்தி பேசிய விவகாரம்.. அமைச்சர் பேச்சை மொத்தமாக முடித்து விட்ட கோர்ட்!
சமந்தாவை அமைச்சருடன் தொடர்புபடுத்தி பேசிய விவகாரம்.. அமைச்சர் பேச்சை மொத்தமாக முடித்து விட்ட கோர்ட்!

இது, சினிமா உலகிலும், மக்களிடையேவும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் சுரேகா மீது நாக சைதன்யாவின் குடும்பத்தினர் ஹைதராபாத் நம்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனை விசாரித்த சிட்டி சிவில் நீதிமன்றம் அமைச்சரின் கருத்துக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தது. ஒரு பொறுப்புள்ள அமைச்சராக இருப்பவர் இப்படி பொதுவெளியில் பேசியது தவறானது என நீதிமன்றம் அமைச்சர் சுரேகாவை கண்டித்தது.

மேலும், சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து குறித்து அமைச்சர் பேசிய சர்ச்சைக் கருத்துகள் அடங்கிய வீடியோவை, அனைத்து தளங்களில் இருந்தும் அதாவது, சோசியல் மீடியா, செய்தி நிறுவனங்கள் என அனைத்திலிருந்தும் நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சினிமா எண்ட்ரி

தமிழ் ரசிகர்களின் மனங்களில் காதல் திரைப்படம் என்றால் இதுதான் என முத்திரை குத்திய படங்களில் ஒன்று தான் கௌதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா. இந்தப் படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் சமந்தா. பின் இதே படத்தின் தெலுங்கு வெர்ஷனில் திரிஷாவிற்கு பதிலாக கதாநாயகியாக அறிமுகமானார் சமந்தா. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நாக சைதன்யா.

திருமணம்- விவாகரத்து

இந்தப் படத்தின் மூலம் அறிமுகமான இருவரும் காதல் வலையில் விழுந்தனர். பின் இருவரும் அவர்கள் கெரியரை பார்த்துக் கொண்டே காதலர்களாக வலம் வந்தனர். இதற்கிடையில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சமந்தா முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கியிருந்தார்.

பின் சமந்தாவும்- நாக சைதன்யாவும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னும் இருவரும் சினிமாவில் நடித்து வரத் தொடங்கிய நிலையில், சமந்தா ரசிகர்கள் கொண்டாடும் மாபெரும் நடிகையாக உருவெடுத்தார்.

அந்த சமயத்தில் நாக சைதன்யாவிற்கும் சமந்தாவிற்கும் இடையே நாளுக்கு நாள் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தது. இந்தத் தகவல்கள் மீடியாவில் கசியத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இருவரும் கடந்த 2021ம் ஆண்டு திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக கூட்டாக அறிவித்தனர். இது அவர்களது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இவர்களின் பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், சமந்தா மீண்டும் கெரியரில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

டாப் கியரில் கெரியர்

ஆனால், சில நாட்களிலேயே அவர் மையோசிடிஸ் எனும் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டார். காதல் கணவரின் பிரிவும் நோயும் ஒருசேர சமந்தாவை தாக்கிய நிலையில், தமிழ், தெலுங்கு திரையுலக ரசிகர்கள் பலரும் சமந்தாவிற்காக சோகத்தில் மூழ்கினர்.

பின், சிகிச்சைக்காக சினிமாவிலிருந்து சில காலம் ஓய்வெடுத்து வந்தார். பின், சிகிச்சை முடிந்து நடிப்பைத் தொடங்கிய சமந்தா தற்போது டாப் கியரில் பறந்து வருகிறார். இவர் தற்போது திரைப்படங்களைத் தொடர்ந்து வெப் சீரிஸ்களிலும் முக்கியமாக கவனம் செலுத்தி வருகிறார். தனது அடுத்தடுத்த சினிமா பயணங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார்.

தொடரும் வதந்திகள்

இந்த நிலையில், சமந்தாவும் நாக சைதன்யாவுமே தங்களது திருமண வாழ்க்கை குறித்து மறந்துவிட்டு அடுத்தடுத்த கட்ட பணிகளில் ஈடுபட்டாலும், அவர்களை பற்றிய தகவல்கள் மட்டும் குறைந்தபாடில்லை. ஊ சொல்றியா பாடலுக்கு நடனமாடியது, சைதன்யாவின் தாய் அமலாவுடன் மனக்கசப்பு, குடும்ப வாழ்க்கை, குழந்தை பெற்றுக் கொள்வது, ஜீவனாம்சம் என இவர்கள் குறித்த தகவல்களும் வதந்திகளும் ஏராளம்.

பகீர் கிளப்பிய பெண் அமைச்சர்

அந்த வகையில், தற்போது புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார் தெலங்கானா அமைச்சர் சுரேகா. இவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமந்தா, நாக சைதன்யாவை பிரிந்து சென்றதற்கு காரணமே முன்னாள் அமைச்சர் கேடிஆர் தான். அந்த அமைச்சரால் சமந்தா மட்டுமல்ல, பல நடிகைகளும் சினிமா கலைஞர்களும் சினிமாவை விட்டு விலகி காணமலே போயுள்ளனர் எனக் கூறி மக்களிடம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

எழுந்த கண்டனங்கள்

இவரது இந்தப் பேச்சுக்கு சமந்தா, நாக சைதன்யா, அவரது குடும்பத்தினர் என பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை இப்படி விமர்சிப்பது இழிவான செயல் என நடிகர்கள், நடிகைகள் என பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

நீதிமன்ற உத்தரவு

இந்த நிலையில், அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாக சைதன்யாவின் குடும்பம் அமைச்சர் சுரேகா மீது நம்பள்ளி நீதிமன்றத்தில் புகாரளித்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், அமைச்சர் சுரேகா நடிகை சமந்தா விவாகர்த்கு குறித்து பேசிய வீடியோவை அனைத்துவிதமான தளங்களில் இருந்தும் நீக்க உத்தரவிட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.