சோபிதாவுடன் திருமணம்! கடைசி புகைப்படமும் டெலீட்..சமந்தாவை மொத்தமாக வாழ்க்கையில் இருந்து தூக்கிய நாக சைதன்யா
விரைவில் சோபிதாவுடன் திருமணம் நடக்க இருக்கும் நிலையில், சமந்தாவுடனான தனது புகைப்படங்கள் அனைத்தையும் டெலீட் செய்திருக்கும் நாக சைதன்யா, சமந்தாவை மொத்தமாக வாழ்க்கையில் இருந்து தூக்கியுள்ளார்.

தென் இந்திய சினிமாவில் ஸ்டார் தம்பதிகளாக இருந்த நாக சைதன்யா - சமந்தா ஆகியோர் இருந்தனர். கடந்த 2017இல் திருமணம் செய்து கொண்ட இவர்கள், 2021 கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தனர். இதைடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் நாக சைதன்யா, தெலுங்கு நடிகை சோபிதா துலிபாலா ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதனால் நாக சைதன்யா - சமந்தா ஜோடி மீண்டும் சேருவதற்கான வாய்ப்பு கதவுகள் மூடப்பட்ட நிலையில், சமந்தாவின் புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாவில் இருந்து நீக்குமாறு ரசிகர்கள் பலரும் நாக சைதன்யாவுக்கு குட்டு வைத்தனர்.
கடைசி புகைப்படமும் நீக்கம்
இதையடுத்து தற்போது சோபிதாவுடனான திருமணத்துக்கு முன்னர், தனது இன்ஸ்டாவில் இருக்கும் சமந்தாவின் கடைசி புகைப்படத்தையும் நீக்கியுள்ளார். தனது முன்னாள் மனைவியான சமந்தா தொடர்பான மூன்று பதிவுகள் நாக சைதன்யாவின் இன்ஸ்டா பீடில் இருந்துள்ளது. அதில் ஒன்றாக கடந்த அக்டோபர் 2021இல் சமந்தாவுடனான விவாகரத்து குறித்த பதிவாக உள்ளது.