தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "வேற வழி இல்லாம அனிரூத் பாட்டு ஹிட் ஆகுது.. என்னைக்கும் நம்பர் 1 ரஹ்மான் தான்".. பத்த வைத்த இசையமைப்பாளர்..

"வேற வழி இல்லாம அனிரூத் பாட்டு ஹிட் ஆகுது.. என்னைக்கும் நம்பர் 1 ரஹ்மான் தான்".. பத்த வைத்த இசையமைப்பாளர்..

Oct 26, 2024, 11:15 AM IST

google News
அனிருத் பாடல்கள் இல்லாமல் இன்றைய பெரிய படங்கள் இல்லை என்ற நிலை உள்ள நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அனிருத் பற்றி கூறியுள்ள கருத்து அவரது ரசிகர்களை கோபமூட்டியுள்ளது.
அனிருத் பாடல்கள் இல்லாமல் இன்றைய பெரிய படங்கள் இல்லை என்ற நிலை உள்ள நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அனிருத் பற்றி கூறியுள்ள கருத்து அவரது ரசிகர்களை கோபமூட்டியுள்ளது.

அனிருத் பாடல்கள் இல்லாமல் இன்றைய பெரிய படங்கள் இல்லை என்ற நிலை உள்ள நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அனிருத் பற்றி கூறியுள்ள கருத்து அவரது ரசிகர்களை கோபமூட்டியுள்ளது.

தற்போது வெளியாகும் அனிருத்தின் பாடல்களில் உள்ள இசை, ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு சவாலாக இல்லை. அதை நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. அது சினிமா ரசிகர்களுக்கே தெரியும். ஆனால், இப்போது வெளியாகும் அனிருத்தின் பாடல்கள் எல்லாம் வேறு வழி இல்லாமல் ஹிட் ஆகி வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் தான் நம்பர் 1

பெரிய தயாரிப்பாளர்களும், ஷங்கர் போன்ற பிரம்மாண்ட பட இயக்குநர்களும் அவர்களின் படத்தில் அனிருத்தின் இசை வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் உலக அளவில் நம்பர் ஒன் இசையமைப்பாளர் என்றால் அது ஏ.ஆர். ரஹ்மான் தான். அனிருத்தின் பாடல்கள் ஹிந்தி, தெலுங்கில் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. ஆனால், ரஹ்மானின் பாடல்கள் சர்வதேச அளவில் ரீச் ஆகியவை. அவற்றை இப்போது வரை யாராலும் தொட முடியவில்லை என கூறி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ரஜினியின் உறவினர்

நடிகர் ரஜினிகாந்த்தின் உறவினர் என்ற முறையில் தனுஷிற்கு அறிமுகமானார் அனிருத். இவர்கள் இருவரும் சேர்ந்து சில பாடல்களை உருவாக்கி வந்த நிலையில், தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 திரைப்படத்தில், அனிருத் இசையமைக்கத் தொடங்கினார்.

அந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து அவர் உருவாக்கிய ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகளவில் ஹிட் அடித்தது. இதையடுத்து, அவர் எதிர் நீச்சல், மாரி, நானும் ரவுடி தான் போன்ற படங்களுக்கு அமைத்த இசை இளைஞர்களைக் கவர்ந்தது. அவரது துள்ளலான இசை இளைஞர்களைக் கவர்ந்த நிலையில், முன்னணி நடிகர்களின் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்.

முன்னணி நடிகர்களின் சாய்ஸ்

அவர் அப்படி இசையமைத்த மாஸ்டர், பீஸ்ட், விக்ரம், லியோ, ஜெயிலர், இந்தியன் படங்களின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது. தங்களின் படம் மக்களிடம் விரைவில் கொண்டு போய் சேர அனிருத் உதவுவதாக பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் நம்புகின்றனர்.

அதன் காரணமாக, சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் தொடர்ந்து அவர்களின்படத்தில் இசையமைக்க அனிருத்தை தேர்வு செய்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், இவர் இசையமைக்கும் படத்தில் குறைந்தபட்சம் ஒரு பாடலாவது இந்திய அளவிலும் உலகளவிலும் ட்ரெண்ட் செய்யப்படுகிறது. இதனால், கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், டோலிவுட்டிலும் இவரின் இசைக்கு இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் காத்திருக்கின்றனர்.

இந்தியாவின் ஏ.ஆர். ரஹ்மான்

அனிருத் சமீபத்தில் ஜூனியர் என்டிஆரின் தேவாரா 1 படத்தின் பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். இந்த பாடல்களைக் கேட்ட ஜூனியர் என்டிஆர், அனிருத் தான் இந்தியாவின் அடுத்த ஏ.ஆர். ரஹ்மான் என புகழ்ந்திருப்பார்.

இது ஒருபுறம் இருக்க, அனிருத்தின் இசையை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இவரது இசை பல திரைப்படங்களில் இருந்தும், ஆல்பம் பாடல்களில் இருந்தும் எடுக்கப்பட்டவை. ஓரே இசையை ஏற்ற இரக்கங்களுடன் பல படங்களுக்கு பயன்படுத்தி ஹிட் கொடுத்து வருகிறார் என கிண்டல் செய்து வந்தனர்.

விமர்சிக்கும் ஜேம்ஸ் வசந்தன்

அப்படி இருக்கும் சமயத்தில் தான், தற்போது வெளியாகும் அனிருத்தின் பாடல்களில் உள்ள இசை, ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு சவாலாக இல்லை. அதை நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. அது சினிமா ரசிகர்களுக்கே தெரியும். ஆனால், இப்போது வெளியாகும் அனிருத்தின் பாடல்கள் எல்லாம் வேறு வழி இல்லாமல் ஹிட் ஆகி வருகிறது.

பெரிய தயாரிப்பாளர்களும், ஷங்கர் போன்ற பிரம்மாண்ட பட இயக்குநர்களும் அவர்களின் படத்தில் அனிருத்தின் இசை வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் உலக அளவில் நம்பர் ஒன் இசையமைப்பாளர் என்றால் அது ஏ.ஆர். ரஹ்மான் தான்.

10 மாதத்தில் 50 பாடல்கள்

அனிருத்தின் பாடல்கள் ஹிந்தி, தெலுங்கில் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. ஆனால், ரஹ்மானின் பாடல்கள் சர்வதேச அளவில் ரீச் ஆகியவை. அவற்றை இப்போது வரை யாராலும் தொட முடியவில்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அனிருத்,அடுத்த 10 மாதங்களில் 50 பாடல்களை உருவாக்க வேண்டும் என பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி