3 Movie: ஒய் திஸ் கொலைவெறி.. 11 ஆண்டுகளை கடந்த 3 திரைப்படம்
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படம் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகிறது.

3 திரைப்படம்
பானுப்ரியா மற்றும் பிரபுவின் செல்ல மகன் ராம் (தனுஷ்). அவர் ஜனனியை (ஸ்ருதி) மிக இளம் வயதிலேயே காதலிக்கிறார். இதை ஜனனி வீட்டில் அவர்களது பெற்றோர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
ஆனால் வீட்டை எதிர்த்து ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு, அவர்கள் ஒன்றாக வாழ்க்கையை வாழ தொடங்கும்போது, விதி ஒரு கொடூரமான அடியை கொடுக்கிறது.
ராம் இருமுனையப் பிறழ்வு கோளாறால் பாதிக்கப்பட்டு, தீவிர மனநிலை மாற்றத்தால் அவதிப்படுகிறார். ராம் தனது மனைவி ஜனனிக்கு இந்த நோயை எதிர்த்துப் தான் போராடுவது தெரிய கூடாது என நினைத்தார். இதனால் ராமுக்கு என்ன நடந்தது என்பதே கதை.