அனிருத்துக்காக வரிசை கட்டி நிற்கும் டாப் ஹீரோக்களின் படங்கள் ! இத்தனை படங்களா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அனிருத்துக்காக வரிசை கட்டி நிற்கும் டாப் ஹீரோக்களின் படங்கள் ! இத்தனை படங்களா?

அனிருத்துக்காக வரிசை கட்டி நிற்கும் டாப் ஹீரோக்களின் படங்கள் ! இத்தனை படங்களா?

Suguna Devi P HT Tamil
Published Oct 20, 2024 12:17 PM IST

அனிருத்தின் அடுத்தடுத்த பட்டியலில் ஏராளமான படங்கள் உள்ளன. தமிழ் படங்களுக்கு மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களும் அதில் அடங்கும். அவற்றுள் சிலவற்றை காணலாம்

அனிருத்துக்காக வரிசை கட்டி நிற்கும் டாப் ஹீரோக்களின் படங்கள் ! இத்தனை படங்களா?
அனிருத்துக்காக வரிசை கட்டி நிற்கும் டாப் ஹீரோக்களின் படங்கள் ! இத்தனை படங்களா?

கூலி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் கூட்டணியில் வெளிவரவிருக்கும் படம் கூலி. இவ்விருவரது கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர், விக்ரம் & லியோ ஆகிய  படங்கள் அமோக வெற்றியை ருசித்தன. அதேபோல சூப்பர் ஸ்டாருக்கு இவர் பேட்ட, தர்பார், ஜெயிலர் மற்றும் வேட்டையன் என தொடர்ந்து வெற்றி படங்களையே கொடுத்திருக்கிறார். தற்போது இந்த லிஸ்டில் கூலியும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் ஜெயிலர் 2 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அனிருத் தான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 3

முதல்முறையாக ஷங்கருடன் கைகோர்த்த அனிருத் இந்தியன் 2 எனும் சுமாரான படத்தை கொடுத்தார். அப்படத்தின் பாடல்களும் பெரிய அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்தியன் 3 பாடல்களாவது வெற்றி பெறுமா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

தளபதி 69

அ வினோத் இயக்கத்தில் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம் என்று சொல்லக்கூடிய தளபதி 69 திரைப்படத்திற்கும் அனிருத்தே இசையமைக்கிறார். கத்தியில் தொடங்கி மாஸ்டர், பீஸ்ட் மற்றும் லியோ என தொடர் ஆல்பம் ஹிட்டுகளை விஜய்க்கு அளித்திருக்கிறார் அனிருத். அவரது இசையில் விஜய் ஆடிய நடனம் பேன் இந்தியா அளவுக்கு ஹிட் அடித்துள்ளது.விஜய்யுடன் அ வினோத் முதல் முறையாக கைகோர்த்து இருக்கிறார். அ வினோத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதும் இதுவே முதல்முறை. இத்திரைப்படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்டுகள் இனிவரும் காலங்களில் காணலாம்.

SK × ARM

சிவகார்த்திகேயனுடன் முதன்முதலாக கூட்டணி அமைத்திருக்கும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் படத்திற்கு தற்காலிகமாக SK × ARM எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. தளபதியிடமிருந்து துப்பாக்கியை கையில் வாங்கிய பிறகு SKவிற்கு முதன்முதலாக இசையமைக்க இருக்கிறார் அனிருத். இவர் SKவிற்கு கடைசியாக இசையமைத்த படம் டான் என்பது குறிப்பிடத்தக்கது. கம்பேக்-கிற்காக காத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் முருகதாஸிற்கு இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையுமா என்பதை பார்ப்போம்.

விடாமுயற்சி

நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருக்கும் அஜித்தின் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தவிர வேற எந்த அப்டேட்டுகளும் இதுவரை வெளிவரவில்லை. வேதாளம் & விவேகம் படங்களுக்கு அடுத்து அனிருத் AKவிற்கு இசையமைக்கும் படம் இது.

இது தவிர தமிழ்ப் படங்களான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) மற்றும் கவினின் அடுத்த திரைப்படத்திற்கும் இவரே இசையமைக்கிறார்.

தெலுங்கிலும் ஆதிக்கம் செலுத்தும் அனிருத்

பவன் கல்யாண் திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவுக்குள் 2018 ஆம் ஆண்டு காலடி எடுத்து வைத்த அனிருத் தற்போது மேஜிக், விஜய் தேவரகொண்டா திரைப்படம் (VD 12), Naniodela 2, தேவரா 2 என அரை டஜன் படங்களை தன் வசம் வைத்திருக்கிறார்.

இனிமே நான் தான் கிங்

பாலிவுட் பாட்ஷா என்று அறியப்படும் ஷாருக்கானின் அடுத்த திரைப்படமான ' கிங் ' திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ஜவான் திரைப்படம் மூலம் மெரினா டூ மும்பை சென்ற அனிருத் ஹிந்தியிலும் கோலூச்சுவாரென ஆவலுடன் எதிர்பார்ப்போம். காத்திருப்பும் வாழ்த்துகளும் !