கமலை வைத்து காய் நகர்த்தும் ஷங்கர்.. ஓடிடி வெளியீட்டிலும் தடுமாறும் இந்தியன் 3! தக் ஃலைப் செய்வாரா கமல்?
நடிகர் கமல் ஹாசன் நடித்துள்ள இந்தியன் 3 நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு பக்காவாக காய் நகர்த்தி வருகிறார் இயக்குநர் ஷங்கர்.
நடிகர் கமல் ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால், இந்தியன் 3 படத்திற்கு போதிய வரவேற்பு இல்லாமல் இருக்கிறது. இதனால், இந்தப் படத்தினை நேரடியாக ஓடிடியில் வெளியிடலாம் என படக்குழு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இந்த நிலையில், இந்தியன் 3யின் வசூலை ஓரளவுக்காவது அதிகரிக்க வாய்ப்புள்ளதா என இயக்குநர் ஷங்கர் பலகட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்த நிலையில், அதற்காக முக்கிய முடிவு ஒன்றையும் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
தக் ஃலைப்-க்காக காத்திருக்கும் ஷங்கர்
அந்தத் தகவலின் படி, இயக்குநர் மணிரத்னத்தின் தக் ஃலைப் படத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சில முக்கிய நடிகர்களும் நடித்துள்ள நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னதாக முடிவடைந்தது.
இந்நிலையில், தக் ஃலைப் திரைப்படத்தை விரைவில் வெளியிட படக்குழு தீவிரமாக வேலை செய்து வருகிறது. இதனை தனக்கான வாய்ப்பாக எடுத்துக் கொண்ட ஷங்கர், முதலில் கமல் ஹாசன் நடித்த தக் ஃலைப் திரைப்படம் ரீலிஸ் செய்யப்படட்டும். அதற்கு மக்கள் அளிக்கும் ஆதரவைப் பார்த்த பின், இந்தியன் 3 படத்தை ஓடிடியில் வெளியிடுவது குறித்து முடிவு செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளாராம்.
இந்தியன் 2 ஆசை
நாட்டில் நடக்கும் ஊழலுக்கு எதிராக கமல் ஹாசன், இந்தியனாக கொடுத்த குரல் தமிழக மக்களிடம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த தாக்கம் இன்றளவும் இருப்பதை உணர்ந்த, கமல் ஹாசனும், அப்படத்தின் இயக்குநர் ஷங்கரும் இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாகத்தை எடுக்க தயாராகினர்.
சுமார் 5 ஆண்டுகளாக இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மட்டும் நடந்து வந்ததாலும், தாத்தா வராரு கதறவிட போறாரு என்ற பாடலும் மேலும், படத்திற்கான ஹைப் கூடியது.
அதிகரித்த எதிர்பார்ப்பு
இதனால், பிரம்மாண்ட இயக்குநர் இந்தியன் 2 படத்தில் என்ன சொல்ல வருகிறார் என்பதை மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு சென்றனர். ஆனால், தாத்தா நிஜமாகவே ரசிகர்களை கதறவிட்டுவிட்டார். படத்தின் பாதி இடங்கள் கமல் பேசுவதாகவே இருக்கிறது. கொலை செய்ய வந்தவனிடமும் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருக்கிறார். இதனால், ரசிகர்கள் பொறுத்துக் கொள்ள முடியாமல் கதறினர்.
மேலும், படத்தில் உள்ள பல லாஜிக் குறைகள் பட்டி தொட்டி எங்கும் வேகமாக பரவியது. இதனால், படம் எதிர்பார்த்த அளவு மக்களிடம் வரவேற்பை பெறாமல் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெறும் தோல்வியை சந்தித்தது.
பயத்தில் ஷங்கர்
இதன் தாக்கம் நிச்சயம் இந்தியன் 3 படத்திலும் இருக்கும் என இயக்குநர் ஷங்கர் நினைத்திருந்தார். அதேசமயம் அவர் இயக்கும் அடுத்தடுத்த படத்திலும் இதன் தாக்கம் இருக்கும் எனவும் அச்சப்பட்டதால், இப்படி ஒரு முடிவை இயக்குநர் ஷங்கர் எடுத்துள்ளார் என பலரும் கூறி வருகின்றனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்