தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  டிடிஎஃப் வாசன் ஊரவிட்டே ஓடிட்டான்.. வாதம் வேணாம்.. வதம் பண்ணட்டும்.. எதுகை மோனையில் பேசும் மஞ்சள் வீரன் டைரக்டர்

டிடிஎஃப் வாசன் ஊரவிட்டே ஓடிட்டான்.. வாதம் வேணாம்.. வதம் பண்ணட்டும்.. எதுகை மோனையில் பேசும் மஞ்சள் வீரன் டைரக்டர்

Oct 14, 2024, 02:12 PM IST

google News
யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு தைரியம் இருந்தால் நேரில் வந்து வாதம் செய்யாமல் வதம் செய்யட்டும் என மஞ்சள் வீரன் படத்தின் இயக்குநர் செல் அம் எதுகை மோனையில் பேசியுள்ளார்.
யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு தைரியம் இருந்தால் நேரில் வந்து வாதம் செய்யாமல் வதம் செய்யட்டும் என மஞ்சள் வீரன் படத்தின் இயக்குநர் செல் அம் எதுகை மோனையில் பேசியுள்ளார்.

யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு தைரியம் இருந்தால் நேரில் வந்து வாதம் செய்யாமல் வதம் செய்யட்டும் என மஞ்சள் வீரன் படத்தின் இயக்குநர் செல் அம் எதுகை மோனையில் பேசியுள்ளார்.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார் என்ற அறிப்பு வெளியாகி அந்தப் படத்தின் புகைப்படங்கள் சில வெளியாகி வந்தது. இதற்கிடையில், படம் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், டிடிஎஃப் வாசன் படத்திலிருந்து நீக்கப்படுவதாக அப்படத்தின் இயக்குநர் செல் அம் அறிவித்திருந்தார். மேலும், இப்படத்தின் புதிய கதாநாயகனை விரைவில் அறிமுகப்படுத்துவேன் என அறிவித்து பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில் தான் இன்று, டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிக்க இருந்த மஞ்சள் வீரன் படத்திற்கு புதிய கதாநாயகனாக கூல் சுரேஷ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களுடன் படத்திற்கான பூஜையும் போட்டுள்ளார்.

வாதம் வேண்டாம் வதம் செய்யட்டும்.

இந்த சமயத்தில், மஞ்சள் வீரன் திரைப்பட இயக்குநர் செல் அம் எஸ்எஸ் மியூசிக் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வைரலாகி இருக்கிறது. அதில், டிடிஎஃப் வாசன் நல்லவனா இருந்த இப்படி வாதம் பண்ண வேண்டாம். என்னை நேரில் வந்து வதம் பண்ண சொல்லுங்க என மஞ்சள் வீரன் படத்தின் இயக்குநர் செல் அம் பேசியுள்ளார். நான் அவருடன் நேருக்கு நேர் விவாதம் செய்யட்டும். நான் போகும் அனைத்து இன்டர்வியூவிலும் அவரை கூப்பிட்டு வருகிறேன். ஆளு தமிழ்நாட்டை விட்டே ஓடிவிட்டார். அவர் ஆல் இந்தியா டூர் சென்று கொண்டிருக்கிறார். அவர் இல்லாத காரணத்தால் இளைஞர்கள் எல்லாம் நல்லா இருக்காங்க. தமிழ்நாட்டில் டிடிஎஃப் வாசன் இல்லாததினால் இளைஞர்கள் நல்வழியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.

30% படம் முடிந்ததா?

கடந்த 2023ம் ஆண்டு ஜீன் 29ம் தேதி படத்திற்கு பூஜை போட்டோம். இப்போது வரை ஒன்றரை ஆண்டு சென்றுவிட்டது. இதுவரை 30 சதவீதம் படம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த எந்த தகவலும் வெளிவரவில்லையே என நெறியாளர் கேட்டதற்கு குதற்கமாக பதிலளித்துள்ளார்.

ஒரு பொண்ணும் பையனும் லவ் பண்ணி சுத்துறது எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நாள் தான் கணக்கு. நான் என்றைக்கு படத்திற்கு பூஜை போட்டேனோ அதுதான் கணக்கு. படத்தில் நடிப்பதற்காக நான் அவருடன் சுற்றிய நாட்கள் எல்லாம் கணக்கில் வராது எனக் கூறியிருக்கிறார்.

பணம் வாங்கி ஏமாற்றினேனா?

ஒரு பிரபலத்தை சுற்றி 10 நண்பர்கள் இருந்தால், அங்கு ஏதேனும் பிரச்சனை நடந்தால், பிரபலத்திற்கு துணையாக தான் எல்லோரும் இருப்பார்கள். அந்த நண்பன் ஏழையாக இருந்தால் அவன் பக்கம் யாரும் நிற்க மாட்டார்கள். அதுபோல தான் நான் 30 லட்சம் வாங்கியதாக கூறப்படுவதும். அதுவரை யார் வேண்டுமானாலும் வாயால் பேசியிருக்கலாம் நடிக்க உதவினேன், படம் எடுக்க காசு கொடுத்து உதவினேன் என்று, ஆனால், இதுவரை படத்திற்காக எனக்கு யாரும் எந்த உதவியும் செய்ய வில்லை என்பது தான் உண்மை.

இவரால் படம் ஒருஅடி கூட நகராது!

இந்தப் படத்தில் நடிக்க டிடிஎஃப் வாசனை அழைத்து வந்தோம். அதைத் தொடர்ந்து மற்ற கலைஞர்களை அழைத்தால் எதற்கும் டிடிஎஃப் வாசன் ஒத்துழைக்கவில்லை. இவர் இனி படத்தில் இருந்தால் படம் துளி அளவு கூட நகராது என்ற சூழ்நிலை வந்தபோது தான் படத்திலிருந்து டிடிஎஃப் வாசனை நீக்கினேன் எனக் கூறியுள்ளார்.

டிடிஎஃப் அவுட் கூல் சுரேஷ் இன்

முன்னதாக டிடிஎஃப் வாசனுடன் தான் பணியாற்ற விருப்பமாகத் தான் இருந்தேன், ஆனால், அவர் படப்பிடிப்பிற்கு வராமல் ஊர்சுற்றிக் கொண்டே இருக்கிறார். அவர் படப்பிடிப்பிற்கு போதிய ஒத்துழைப்புத் தரவில்லை என கூறியிருந்தார். இந்த நிலையில் தான் அவர் இன்று மஞ்சள் வீரன் படத்திற்கு நடிகர் கூல் சுரேஷை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி உள்ளார்.

டிடிஎஃப் வாசன் கோபம்

மஞ்சள் வீரன் திரைப்படத்தை பொறுத்த அளவுக்கு, ஒரே ஒரு போட்டோ ஷூட் மற்றும் பட பூஜை மட்டுமே நடந்திருக்கிறது. பட பூஜைக்கும், அவர்களது அலுவலக முன்பணத்திற்கும் நான்தான் பண உதவி செய்தேன். நான் அதற்காக பணத்தை ஏமாற்றி விட்டார்கள் என்றெல்லாம் கூற மாட்டேன். அவர் நெருக்கடியில் இருப்பதை என்னால் உணர முடிந்த காரணத்தால் நான் என்னால் முடிந்த உதவியை அவருக்குச் செய்தேன். அந்தக் காசெல்லாம் எனக்கு தற்போது திரும்ப வேண்டாம். போன் அடித்தால் அவர் எடுக்காமல் உடன் இருப்பவரை வைத்து பேச வைப்பதற்கான காரணம் கூட இதுவாக இருக்கலாம் என பேசியிருந்தார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி