டிடிஎஃப் வாசன் ஒரு குப்பை..பெத்த தாயை புழல் சிறை வாசலில் நிக்க வைச்சவன்..மஞ்சள் வீரன் இயக்குநர் செல்அம் பரபரப்பு பேட்டி
TTF Vasan: டிடிஎஃப் வாசன் ஒரு குப்பை.. பெத்த தாயை புழல் சிறை வாசலில் நிக்க வைச்சவன்.. மஞ்சள் வீரன் புகழ் செல்அம் பரபரப்பு பேட்டியளித்தார்.
TTF Vasan: டிடிஎஃப் வாசன் ஒரு குப்பை என்றும்; பெத்த தாயை புழல் சிறை வாசலில் நிற்க வைத்தவன் என மஞ்சள் வீரன் புகழ் இயக்குநர் செல்அம் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக மஞ்சள் வீரன் புகழ் இயக்குநர் செல்அம் பிஹைண்ட்வுட்ஸ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
’’ஏன் அவரிடம் கூட சொல்லாமல் டிடிஎஃப் வாசனை பத்திரிகையாளரை அழைத்து பொதுவெளியில் வைத்து மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நீக்கினீர்கள்?
பதில் - சொல்லிட்டு செய்யுற அளவுக்கு டிடிஎஃப் வாசனின் செயல்கள் உயர்வாக என் கண்களுக்குத் தெரியவில்லை. முதலில் அவரைப் பார்க்கும்போது தங்கமாக தெரிஞ்சார். இப்போது குப்பையாகிட்டார் அதுதான் காரணம். குப்பைத்தொட்டியில் போடுறபொருள் ஒன்று நமக்குத் தேவையில்லாத ஒன்று. இன்னொன்று, அந்தப் பொருளை வீட்டிலேயே வைத்திருந்தால் நாற்றம் அடிச்சிரும். டி.டி.எஃப்-க்கு ஒரு குட்பை. ஒருத்தர் வாழ்நாள் முழுக்க பொய்பேசக் கூடாது.
இத்தனை நாட்களாக தங்கமாக தெரிந்த டி.டி.எஃப், இப்போது எப்படி குப்பையாக மாறினார்?
பதில் - செயல்பாடுகளில் ஒரு மனிதன் ஓரளவுக்குத் தவறு செய்யலாம். வாழ்நாள் முழுக்க தவறு செய்யக்கூடாது. தம்பியை ஏன் பத்திரிகையாளர் சந்திப்பில் நீக்குறோம் அப்படின்னு தான் சொல்லியிருக்கிறேன். அந்த பிரஸ் மீட்டிலேயே நினைத்தால், தம்பி உடைய எல்லா விஷயங்களையும் சொல்ல முடியும். ஒருத்தன் வேண்டாம் என்று சொன்னபிறகு விட்டுவிடுவோம். அவனுக்கு சுய அறிவு இருந்தால் ஜெயிச்சு வரட்டும். சீட்டிங் 2 மீ அப்படின்னு என்னை வைச்சு ஒருமணி நேரம் பேசி ஒரு வீடியோ போடுறான். அந்த வீடியோவை இதுவரை 11 லட்சம் பேர் பார்த்திருக்காங்க. அதன்மூலமாக, ரூ. 3 லட்சம் சம்பாதிச்சுட்டான். அதாவது என் உழைப்பை இன்னிக்கும் அவன் சாப்பிட்டுதான் இருக்கான். எனக்கு வந்து யூட்யூப் சேனல் கிடையாது.
’பெத்த தாயை புழல் சிறைவாசலில் நிற்கவைச்சவன்’
அதை சொல்லிட்டு கேசுவலாக போயிட்டான். அவன்கிட்ட ஒரு போன் இருக்கு. ஒரு சேனல் இருக்கு. நம்மகிட்ட எதுவுமே கிடையாது. நான் ஒரு சாதாரண பட்டன் போன் தான் வைச்சிருக்கேன். எது சொன்னாலும் கேட்கமாட்டான். பெத்த தாயை புழல் சிறைவாசலில் நிற்கவைச்சவன்.
இப்போது கூட பொய் சொல்லியிருக்கார் தம்பி. அதாவது நான் மூன்று வருஷமாக படமெடுக்கல அப்படின்னு சொன்னார். அதுவே சுத்தப்பொய். அவரும் நானும் சுத்துனது எல்லாம் கணக்கில் வராது. பட பூஜை எப்போது போட்டோம். மஞ்சள் வீரன் பூஜை போட்டது ஜூன் 29, 2023. டிடிஎஃப் வாசன் பிறந்தநாள் அன்னிக்கு போட்டோம். கிட்டத்தட்ட ஒன்றே கால் வருஷம் தான் ஆகுது. இதுவே மூன்று வருஷம் சொன்னது சுத்தப்பொய். நான் இதை மக்கள்கிட்ட சொல்றேன் என்றால், சொல்லவில்லை என்றால் மக்களுக்குத் தெரியாது. கண்களின் வழியே நீர் விட்டுப்பேசும்போது, என்னை தவறான ஆளான்னு கமாண்ட் பண்றாங்க.
ஒரு பக்கம் குப்பைன்னு சொல்றீங்க, மறுபக்கம் சூப்பர் ஸ்டார்ன்னு சொல்றீங்க. இப்படி மாற்றி மாற்றிபேசும்போது டிடிஎஃப் சொல்றது சரிதானே?
பதில் - இப்பவும் சொல்றேன் டிடிஎஃப் தான் அடுத்த சூப்பர் ஸ்டார். தம்பி தன்னோட செயல்களைத் திருத்தணும். பைக் ஓட்டி, கார் ஓட்டி வீடியோ போட்டு இளைஞர்களைக் கெடுப்பதை நிறுத்தணும். அந்த இடத்தை விட்டு வெளியே வரணும். உயர்ந்த சிந்தனைகளை வைச்சுக்கணும். பொய்சொல்லாமல், இதெல்லாம் மாத்திட்டு நல்லவனாக மாறினால், அதை அடையும் தகுதி அவனுக்கு இருக்கு. என்கிட்டே இல்லையென்றால், இன்னொரு இயக்குநர் மூலம் அப்பட்டி ஆவான்.
திருந்தி வாழாத நபரை ஏன் மஞ்சள் வீரன் படத்தில் நடிக்கத் தேர்வு செய்தீங்க?
பதில் - அதில் பைக் ஓட்டுற சீன் இருக்கு சார். ஆனால், முன்னாடி வீலைத் தூக்கிட்டு வீலிங் செய்யக்கூடாது.
போஸ்டரிலேயே நீங்கள் அப்படிதானே வீலிங் செய்யிற மாதிரி வைத்துள்ளீர்கள்?
பதில் - அது வீலிங்கே கிடையாது. என்ஃபீல்டு பைக்கில் வீலிங் செய்யமுடியாது. ஒரு பைட் சீனில் இந்த மாதிரி காட்சி இருக்கிறது. அது அதற்கான மாதிரி காட்சி.
ஒருநாள் கூட சூட் போகாத படத்துக்கு நீ எப்படி செலவுபண்ணியிருப்ப. ஜூன் 29 மாத கடைசி. ஜூலை, ஆகஸ்ட் மாதம் ஸ்ரீதர் மாஸ்டர்கிட்ட பிராக்டீஸ் போயிருந்தார். 11 மணி கிளாஸுக்கு 1 மணிக்குத்தான் போவார். பைட் கிளாஸ் நேரம் கடந்துரும். அப்போது அஸிஸ்டெண்ட்க்கு எல்லாம் சும்மாவே பேட்டா கொடுப்போம்.
செப்டம்பர் சூட் போற நேரத்தில் யாரிடமும் சொல்லாமல் மகாராஷ்டிரா போகிறார். அப்போது நம்மளை நம்பி பணம்போட்ருக்காங்கன்னு சொல்றேன். உடனே பதில், ‘நான் கோவையில் இருந்து காஷ்மீருக்கு நிற்காமலே பைக்கில் போயிருக்கேன். நான் யார்ன்னு தெரியும்ல டிடிஎஃப் அப்படிங்குறான்.
பிறகு, செப்டம்பர் மாதம் காஞ்சிபுரத்தில் கீழே விழுந்துட்டார். பிறகு, செப்டம்பர், அக்டோபர், நவம்பர் வரை புழல் ஜெயிலில் தான் இருக்கார். டிசம்பர் வரைக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டுட்டு இருக்கார். படத்தில் மூன்று பைட் சீன் இருக்கு. ஏற்கனவே விபத்தில் முதுகு முழுவதும் அடி. கையில் அடி. மருத்துவர் கொஞ்சம் சரியாகட்டும்ன்னு சொல்லிட்டார். இதில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் போயிடுச்சு. ஏப்ரலில் சூட்டிங் போகலாம்ன்னு கூப்பிட்டேன். அப்போது மைக்கை வைச்சிக்கிட்டு தேர்தல் பிரசாரம் பண்ணிட்டு இருக்கார். இதில் எல்லா தயாரிப்பாளர்களும் வெளியில் போய்ட்டாங்க’’ என பேசினார், மஞ்சள் வீரன் பட இயக்குநர் செல்அம்.
நன்றி: பிஹெண்ட்வுட்ஸ்
டாபிக்ஸ்