'அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்.. வாசன் அவுட்.. மஞ்சள் வீரன் ஹீரோ இவர்தான்! - குஷியில் கூல் சுரேஷ்
மஞ்சள் வீரன் திரைப்படத்தில் கதாநாயகனாக டிடிஎஃப் வாசன் கமிட் செய்யப்பட்டு நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக நடிகர் கூல் சுரேஷ் கதாநாயகனாக கமிட் செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

'அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்.. வாசன் அவுட்.. மஞ்சள் வீரன் ஹீரோ இவர்தான்! - குஷியில் கூல் சுரேஷ்
தன்னை ‘மஞ்சள் வீரன்’திரைப்படத்தில் இருந்து தூக்கியது துரோகம் என்று டிடிஎஃப் வாசன் பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். அதற்கு மஞ்சள் வீரன் இயக்குநர் செல்அம் டிடிஎஃப் வாசன் ஊர் சுற்றிக்கொண்டு, ஷூட்டிங்கிற்கு ஒத்துழைப்பு தர மறுத்த காரணத்தினால்தான், அவரை படத்தில் இருந்து தூக்கினோம். அவர் தற்போது என்னைப் பற்றி வீடியோவில் பேசி தற்போது 3 லட்சம் வரைக்கும் அவர் சம்பாதித்து இருக்கிறார் என்று குற்றம் சாட்டினார். இந்த நிலையில் அந்தப்படத்தில் கதாநாயகனாக நடிகர் கூல் சுரேஷ் கமிட் செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.