TTF Vasan: ஒன்னே முடியல அதுக்குள்ள ரெண்டாவதா.. அதிரடி காட்ட தயாராக இருக்கும் டிடிஎஃப் வாசன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ttf Vasan: ஒன்னே முடியல அதுக்குள்ள ரெண்டாவதா.. அதிரடி காட்ட தயாராக இருக்கும் டிடிஎஃப் வாசன்

TTF Vasan: ஒன்னே முடியல அதுக்குள்ள ரெண்டாவதா.. அதிரடி காட்ட தயாராக இருக்கும் டிடிஎஃப் வாசன்

Aarthi Balaji HT Tamil
Jun 16, 2024 11:15 AM IST

TTF Vasan: முதல் படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள் அடுத்த படத்தில் கமிட்டாகி இருக்கிறார், டிடிஎஃப் வாசன். ஐபிஎல் (IPL) என படத்திற்கு பெயரிடப்பட்டு உள்ளது.

ஒன்னே முடியல அதுக்குள்ள ரெண்டாவதா.. அதிரடி காட்ட தயாராக இருக்கும் டிடிஎஃப் வாசன்
ஒன்னே முடியல அதுக்குள்ள ரெண்டாவதா.. அதிரடி காட்ட தயாராக இருக்கும் டிடிஎஃப் வாசன்

மஞ்சள் வீரன்

டிடிஎஃப் வாசன் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

299 கிமீ வேகத்தில் படப்பிடிப்பு

இந்த திரைப்படத்தை செல்அம் என்பவர் இயக்கி வருகிறார். பட்ஜெட் பிலிம் கம்பெனி எனும் நிறுவனம் 5 கோடி ரூபாய் செலவில் படத்தை தயாரிக்கிறது. டிடிஎஃப் வாசன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது. 299 கிமீ வேகத்தில் படப்பிடிப்பு நடைபெறுவதாக அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. போஸ்டரில் கையில் ஈட்டியுடன் புல்லட் பைக்கில் பறக்கிறார் டிடிஎஃப் வாசன்.

அடுத்த படம் என்ன?

இந்நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள் அடுத்த படத்தில் கமிட்டாகி இருக்கிறார், டிடிஎஃப் வாசன். ஐபிஎல் (IPL) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரபல நடிகர் கிஷார், நடிகை அபிராமி ஆகியோருடன் டிடிஎஃப் வாசன் இணைந்து நடிக்க  இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தை இயக்குநர் கருணாகரன் இயக்குவதாகவும், ராதா ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்க உள்ளார். அஸ்வின் விநாயகமூர்த்தி இப்படத்துக்கு இசையமைப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கிரிக்கெட் தொடர்பான படமாக இது இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

6 பிரிவுகளின் கீழ் வழக்கு

முன்னதாக, டிடிஎஃப் வாசன் கடந்த 15 ஆம் தேதி தனது காரில் சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி சென்று உள்ளார். அப்போது அவர் செல்போன் பேசியபடி கார் ஓட்டியுள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் மணிபாரதி சார்பில் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இந்த புகாரை தொடர்ந்து கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், பொது மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கு வகையில் வாகனம் இயக்குதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இதனையடுத்து மே 29 இரவு அண்ணாநகர் காவல் துறையினர் டிடிஎஃப் வாசனை அதிரடியாக கைது செய்யப்பட்டார். பிறகு முதல் வராத்தில் டிடிஃஎப் வாசனுக்கு திரைப்பட சூட்டிங் உள்ளது. இதனால் ஜாமின் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

நீதிபதி சுப்புலெட்சுமி இனிமேல் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட மாட்டேன் என உறுதி மொழி பத்திரம் தாக்கல் செய்ய வலியுறுத்தி ஜாமின் வழங்கினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.