TTF Vasan: 'ப்ளாக்ல டிக்கெட் வாங்கி மஞ்சள் வீரன் பார்க்காதீங்க' படம் வருவதற்கு முன்பே டிடிஎஃப் வாசன் அட்டகாசம்
மஞ்சள் வீரன் படத்தை ப்ளாகில் டிக்கெட் வாங்கி பார்க்க வேண்டாம் என டிடிஎஃப் வாசன் கேட்டு கொண்டு உள்ளார்.

அதிவேகமாக பைக்குகளில் ட்ராவல் செய்து அதனை வீடியோக்களாக மாற்றி ட்வின் த்ரோட்லர்ஸ் எனும் தன்னுடைய யூடியூப்பில் பதிவிட்டு பிரபலமானவர் கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன்.
இவருக்கு யூடியூப்பில் 20 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தன்னுடைய பிறந்தநாளை கோவை தனியார் விடுதியில் ஒன்றில் தனது ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் கொண்டாடினார். அவருக்கு கூடிய கூட்டத்தை கண்டு பொதுமக்கள் மிரண்டனர். இதையடுத்து, இணையத்தில் டிடிஎஃப் வாசன் மீது விமர்சனம் எழுந்தது.
இந்த சம்பவத்திற்கு பின்னர் தான் டிடிஎஃப் வாசன் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார். அதன் பின்னர் அனுமதிக்கப்பட்ட அளவை விட சாலையில் அதிவேகமாக பைக்கை ஓட்டுதல், ஜிபி முத்துவை பைக்கில் உட்காரவைத்து 150 கிமீ வேகத்தில் சென்றது உள்ளிட்ட பல்வேறு புகார்களில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் கொடுத்த நேர்காணல்களும் பரபரப்பை கிளப்பியது.