தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Malavika Mohanan: பரிசு கலாச்சாரம்.. நடிகர்களுக்கு அங்கீகாரம்! நடிகைகளுக்கு வைக்கப்படும் குறி - மாளவிகா மோகனன் பளிச்

Malavika Mohanan: பரிசு கலாச்சாரம்.. நடிகர்களுக்கு அங்கீகாரம்! நடிகைகளுக்கு வைக்கப்படும் குறி - மாளவிகா மோகனன் பளிச்

Oct 04, 2024, 10:28 AM IST

google News
Malavika Mohanan: தென் இந்திய சினிமாக்களில் நிலவும் பரிசு கலாச்சாரம் நடிகர்களுக்கு அங்கீகாரம், மரியாதையை தருகிறது. நடிகைகள் இந்த விஷயத்தில் சமமாக நடத்தப்படுவதில்லை. மாறாக பாக்ஸ் ஆபிஸ் தோல்வி அதிஷ்டமில்லாத நடிகை முத்திரை நடிகைகளுக்கு வைக்கப்படும் குறியாக இருப்பதாக நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.
Malavika Mohanan: தென் இந்திய சினிமாக்களில் நிலவும் பரிசு கலாச்சாரம் நடிகர்களுக்கு அங்கீகாரம், மரியாதையை தருகிறது. நடிகைகள் இந்த விஷயத்தில் சமமாக நடத்தப்படுவதில்லை. மாறாக பாக்ஸ் ஆபிஸ் தோல்வி அதிஷ்டமில்லாத நடிகை முத்திரை நடிகைகளுக்கு வைக்கப்படும் குறியாக இருப்பதாக நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.

Malavika Mohanan: தென் இந்திய சினிமாக்களில் நிலவும் பரிசு கலாச்சாரம் நடிகர்களுக்கு அங்கீகாரம், மரியாதையை தருகிறது. நடிகைகள் இந்த விஷயத்தில் சமமாக நடத்தப்படுவதில்லை. மாறாக பாக்ஸ் ஆபிஸ் தோல்வி அதிஷ்டமில்லாத நடிகை முத்திரை நடிகைகளுக்கு வைக்கப்படும் குறியாக இருப்பதாக நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.

தமிழில் பேட்ட, மாஸ்டர் படங்களில் தோன்ற தனது அற்புத நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மாளவிகா மோகனன். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனன் மகளான இவர் தாய்மொழியான மலையாளம், தமிழ், இந்தி படங்களில் நடித்துள்ளார்.

விக்ரமுடன் இவர் இணைந்து நடித்த தங்கலான் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தில் மாளவிகா மோகனன் சூனியக்காரியாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இந்த படத்தை தொடர்ந்து மாளவிகா மோகனன் நடிப்பில் கடந்த மாதம் யுத்ரா என்ற பாலிவுட் படம் வெளியானது. ஆக்சல் திர்ல்லர் படமான இதில் கவர்ச்சி தரிசனம் வெளிப்படுத்தியிருந்தார். இதையடுத்து பாலிவுட் பப்பிள் என்ற பிரபல பாலிவுட் ஊடகத்துக்கு மாளிவிகா மோகனன் பேட்டி அளித்துள்ளார். அதில் தென் இந்தியா சினிமாக்கள், ஷாருக்கானை சந்தித்தபோது வாங்கிய திட்டு உள்பட பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார்.

நடிகர்கள் இணையாக நடிகைகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதில்லை

மாளவிகா மோகனன் அளித்த பேட்டியில், "தென் இந்திய சினிமாக்களில் பரிசு கொடுக்கும் பழக்கம் என்பது காலங்காலமாக இருந்து வருகிறது. குறிப்பாக திருமண காலங்களில் கார், வாட்ச் போன்ற காஸ்ட்லியான பரிசுகள் கொடுக்கும் கலாச்சாரம் இருக்கிறது.

நான் ஒருபோது இப்படி பரிசுகளை பெற்றது இல்லை. இந்த பரிசு கொடுக்கும் கலாச்சாரம் சினிமாக்களின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் நடக்கிறது.

நடிகர்களுக்கு பரிசுகளை வழங்கி கெளரவப்படுத்தும் போக்கு, நடிகைகளுக்கு வழங்கப்படுவதில்லை. நடிகர்கள் இணையான முக்கியத்துவம், அங்கீகாரம் நடிகைகளுக்கு தருவதில்லை."

அதிர்ஷ்டம் இல்லாதவராக முத்திரை குத்துகிறார்கள்

அதேபோல், "படம் சரியாக போகவில்லை என்றால் நடிகைகள் தான் முதலில் குறி வைக்கப்படுகிறார்கள். நடிகைகளின் அதிர்ஷ்டத்தை பற்றி பேசுவார்கள். பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடையும் படங்களில் நடித்திருக்கும் நடிகை அதிர்ஷ்டம் இல்லாதவர் என முத்திரை குத்துகிறார்கள்.

தென் இந்தியா சினிமா என்று இல்லாமல் பொதுவாகவே சினிமா துறையில் இதுவொரு பெரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

நடிகர்களை காட்டிலும், நடிகைகள் அங்கு அதிகம் என்று கூறப்பட்டாலும், நடிகர்களிடம் வசூல் ஈட்டும் பலம் உள்ளது. அவர்களின் முந்தைய படங்கள் கூட ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்திருந்தாலே தேவையான அங்கீகாரம், மரியாதை கிடைத்துவிடும்." என்று கூறியுள்ளார்.

ஷாருக்கான சந்திப்பின்போது வாங்கிய திட்டு

தொடர்ந்து டான் படத்தின் செட்டில் வைத்து ஷாருக்கானுடனான சந்திப்பு பற்றி அவர் கூறியதாவது, "நானும் எனது சகோதரரும் ஷாருக்கான் ஷாட் முடித்து வரும் வரை காத்திருந்தோம். அப்போது கொஞ்சம் தூக்க கலக்கமாகவும் இருந்தது. அப்போது ஷாருக்கான் வந்து வணக்கம் சொன்னபோது, டயர்டாக இருந்ததால் சேரில் உட்கார்ந்தவாறே ஹலோ சொன்னேன்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் எனது பெற்றோர் எனது நடத்தையை சுட்டிக்காட்டி திட்டி தீர்த்தனர். அப்போது நான் முரட்டதனமாக அப்படி நடக்க வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் ஏனோ எழுந்து நிற்க என் கால்கள் செயல்படவில்லை" என்றார்.

மாளிவிகா மோகனன் படங்கள்

மாளவிகா மோகனன் தற்போது கார்த்தியுடன் இணைந்து சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக ராஜ் சாப் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அவர் அறிமுகமாகிறார்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி