Shah Rukh Khan: சினிமாவிலிருந்து ரிட்டெயர்மெண்ட்.. மாஸாக பதில் சொன்ன ஷாருக்கான்! வாயை மூடிய கரண் ஜோஹர்
Shah Rukh Khan: சினிமாத்துறையில் தனது ஓய்வு எப்படி இருக்கும் என நடிகர் ஷாருக்கான் கூறிய பதில் அனைவரையும் அசத்தியுள்ளது. இதையடுத்து தற்போது அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்தியத் திரையுலகம் மற்றும் பாலிவுட் சினிமாவைச் சேர்ந்த மிகப்பெரிய நட்சத்திரங்களை ஒன்றிணைக்கும் IIFA உற்சவம் 2024 அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் விழாவின் கடைசி நாளான இன்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், விக்கி கௌஷல் மற்றும் கரண் ஜோஹர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பார்வையாளர்களை மகிழ்வித்து வந்தனர்.
இதையொட்டி, நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கான், நடிகர் விக்கி கௌஷலுடன் இணைந்து பான் இந்தியா திரைப்படமான புஷ்பா படத்தின் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி அரங்கை அதிரவைத்தார். இதையடுத்து, இந்த விழாவின் போது, அவர் சினிமாவிலிருந்து எப்போது ஓய்வை அறிவிப்பார் எனவும் அறிவித்துள்ளார். இதையடுத்து ஷாருக்கானின் இந்த அறிவிப்பு வைரலாகி வருகிறது.
ஐஃபா விருது
இந்திய அளவில் சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் முக்கியமான ஒன்று ஐஃபா விருது. ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது வழங்கும் விழா தற்போது கடந்த 3 நாட்களாக அபுதாபியில் நடைபெற்று வருகிறது.
