Malavika Mohanan: "ஆணாதிக்க மனநிலை.." பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் உதவியற்றவராக உணர்கிறேன் - மாளவிகா மோகனன் பளீச்-malavika mohanan speaks out on the safety of women says she feels helpless - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Malavika Mohanan: "ஆணாதிக்க மனநிலை.." பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் உதவியற்றவராக உணர்கிறேன் - மாளவிகா மோகனன் பளீச்

Malavika Mohanan: "ஆணாதிக்க மனநிலை.." பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் உதவியற்றவராக உணர்கிறேன் - மாளவிகா மோகனன் பளீச்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 29, 2024 05:09 PM IST

கொல்கத்தா பயிற்சி மருத்துவரின் கற்பழிப்பு-கொலை சம்பவம் தொடர்பாக நாடு தழுவிய போராட்டங்களைத் தொடர்ந்து சமூகத்தில் நிலவும் 'ஆணாதிக்க மனநிலை காரணமாக உதவியற்றவராக இருப்பதாக நடிகை மாளவிகா மோகனன் பேசியுள்ளார்.

Malavika Mohanan: பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் உதவியற்றவராக உணர்கிறேன் - மாளவிகா மோகனன் பளீச்
Malavika Mohanan: பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் உதவியற்றவராக உணர்கிறேன் - மாளவிகா மோகனன் பளீச்

அதில், கொல்கத்தாவில் ஒரு பயிற்சி மருத்துவர் சம்பந்தப்பட்ட பாலியல் பலாத்கார-கொலை சம்பவத்துக்குப் பிறகு பெண்களின் பாதுகாப்பு குறித்த தனது எண்ணங்களை அவர் பகிர்ந்து கொண்டார். 

இந்தியா டுடேவுக்கு  அவர் அளித்த பேட்டியில், இதுபோன்ற சம்பவங்களின் மூல காரணங்களை சமாளிப்பதற்கான ஒரு வழியாக மனநிலையை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை மாளவிகா எடுத்துரைத்தார். 

பெண்களுக்கு எதிரான வன்முறை

நடிகைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் மற்றும் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து மாளவிகாவிடம் கேட்டபோது, "இதை பற்றி கேள்விப்படுகையில் என் இதயத்தை உடைந்து போகும்.  இந்த விஷயத்தில் நான் பெண் அதிகாரம் பற்றி பேசுகிறேன்.

தனக்காக நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது பற்றி பேசுகிறேன், அவர் தனக்காக போராடுகிறார், பின்னர் இது நடந்தது. நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன், ஏனென்றால் இது ஒரு பெரிய உரையாடல்.

மேலும், “இதன் ஆணிவேருக்குச் சென்று அதை எப்படி நிறுத்துவது? இது உங்களை உதவியற்றவராக உணர வைக்கிறது. 'எப்படி, எங்கே?' என்று உணர வைக்கிறது. இது எல்லா நேரத்திலும் நடக்கிறது. இது ஒரு ஆணாதிக்க மனநிலை. இதில் ஆண்களை மட்டும் குறை கூறுவது நியாயம் அல்ல. ஆண்களின் மனநிலையை பெண்கள் பலர் நன்கு அறிந்திருக்கிறார்கள்.” என்றார்.

தங்கலான் இந்தி பதிப்பு வெளியீடு

சமீபத்தில் வெளியான த்ரில்லர் திரைப்படமான தங்கலான் படத்தில் சூனியக்காரியாக வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார் மாளவிகா மோகனன்.  பா.ரஞ்சித் இயக்கத்தில் இந்த படத்தில் விக்ரம், பார்வதி , பசுபதி, டேனியல் கால்டாகிரோன், ஹரி கிருஷ்ணன், சம்பத் ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்த படம் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி தங்கலான் இந்தி பதிப்பு வெளியாக இருக்கிறது.

மாளவிகா மோகனனின் படங்கள்

மலையாளத்தில் வெளியான காதல் பட்டம் போலே மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா. அவரது முதல் பாலிவுட் படம் ஈரானிய திரைப்பட தயாரிப்பாளர் மஜித் மஜிதியின் பியாண்ட் தி கிளவுட்ஸ். இப்படத்தில் இஷான் கட்டரின் சகோதரியாக நடித்தார். பேட்ட, மாஸ்டர், மாறன், கிறிஸ்டி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் அவரது நண்பனின் மனைவியாகவும், தங்கையாகவும் நடித்திருப்பார் மாளவிகா மோகனன். அதன் பிறகு விஜய்யுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் போன்ற படங்களில் நடித்தார். தற்போது தங்கலான் படத்தில் மாறுபட்ட நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

மாளவிகா மோகனன் தற்போது தமிழில் கார்த்தியுடன் இணைந்து சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.